சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கன
கன்னியர்     கன     கனைத்து     கனிந்தவர்     கன்னியும்     கன்னி     கன்னித்     கனவில்     கனைய     கன்னிப்     கனிய     கனன்றாழி     கனமதில்சூழ்     கனவயிர     கன்ற     கனங்கொண்ட     கனவுநிலை     கன்றொடு     கன்னிதிருத்     கன்னியிளங்     கன்னிநா     கன்னிதன்     கனிதனை,     கனத்து     கனைகொள்     கன்று     கனகநந்தியும்,     கன்றிய     கன்றி     கனத்தின்     கனகம்     கன்றித்     கன்றினார்     கனியினும்,     கனலும்     கனல்     கன்னலை,     கன்னியை     கனவேயும்     கனைகடற்     கனலூர்     கன்னகா    
1.004   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப்
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே!
இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.040   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு
புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி என்றே பல கூறி,
வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.

1.044   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

1.052   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

2.014   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை,
நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை, ஏத்துவர் ஏதம் இலாதாரே.

2.019   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
என் அத்தா! என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

2.100   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும்,
இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன்,
பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்,
வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே.
3.037   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின் கனி பட நூறியும்,
சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும் ஆய்,
அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே!

3.039   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

3.055   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.

3.061   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப்
பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான்,
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள்
வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.074   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று நகைசெய்
என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப நகர்தான்-
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக் குருளைகள்
சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர் அதுவே.

4.033   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்;
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.

4.047   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

4.047   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை,
நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்;
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

4.058   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

5.014   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,
பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும்,
தனி முடீ கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.

5.021   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன்
புனலும், கொன்றையும், சூடும் புரிசடை;
அனலும், சூலமும், மான்மறி, கையினர்
எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.

5.023   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலனால்; இது என்கொலோ?
நின்றியூர் பதி ஆக நிலாயவன்,
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.

5.061   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை
அனல் அங்கு எய்தி, நின்று, ஆடுவர்; பாடுவர்;
பினல் அம் செஞ்சடைமேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும்-புத்தூரரே.

5.093   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை, இனி யான் மறக்கிற்பனே?

6.038   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே; கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே;
தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே;
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

6.084   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான் தன்னை, கடவூரில் வீரட்டம் கருதினானை,
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன் தன்னை, பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை,
பன்னிய நால்மறை விரிக்கும் பண்பன் தன்னை,
பரிந்து இமையோர் தொழுது ஏத்தி, பரனே! என்று
சென்னிமிசைக்கொண்டு அணி சேவடியினானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

7.084   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கன்னலை, இன்னமுதை, கார் வயல் சூழ் கானப் பேர் உறை காளையை, ஒண் சீர் உறை தண் தமிழால்
உன்னி மனத்து அயரா, உள் உருகி, பரவும் ஒண் பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்,
பன்னும் இசைக்கிளவி பத்து இவை பாட வல்லார், பத்தர் குணத்தினராய், எத்திசையும்   புகழ,
மன்னி இருப்பவர்கள், வானின்; இழிந்திடினும், மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே! .

8.111   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கனவேயும் | தேவர்கள் | காண்பு அரிய | கனை கழலோன்
புன வேய் | அன வளைத் | தோளியொடும் | புகுந்தருளி,
நனவே | எனைப் பிடித்து, ஆட்கொண்டவா | நயந்து, நெஞ்சம்,
சின வேல் கண் | நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.213   8 st/nd Thirumurai   Song # 26   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.

8.225   8 st/nd Thirumurai   Song # 21   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கனலூர் கணைதுணை யூர்கெடச்
   செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
   றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
   லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
   லூர்கணப் பூங்கொடியே.

9.011   9 st/nd Thirumurai   Song # 3   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்
   கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர்
   முகத்தலை யகத்தமர்ந் துறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே
   பாவியேன் ஆவியுள் புகுந்த
தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற்
   கெளிமையோ பெருமையா வதுவே. 

10.120   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 21,

10.406   10 st/nd Thirumurai   Song # 44   திருமூலர்   திருமந்திரம்  
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

10.516   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

10.736   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.

10.806   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.

11.010   11 st/nd Thirumurai   Song # 21   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.

11.010   11 st/nd Thirumurai   Song # 26   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவரலா றஞ்சியே பின்னரே
ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
மான் தரித்த கையான் மலை.

11.020   11 st/nd Thirumurai   Song # 6   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும்அடியார்க்
கினியன் இனியொ ரின்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.

11.022   11 st/nd Thirumurai   Song # 48   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் கனன்றார்
உடம்பட்ட நாட்டத்தன் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.

11.031   11 st/nd Thirumurai   Song # 15   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை  
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

11.037   11 st/nd Thirumurai   Song # 96   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்

11.037   11 st/nd Thirumurai   Song # 106   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய

12.000   12 st/nd Thirumurai   Song # 302   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக்
கணவனைமுன் பெறுவாள் போல
இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ
எய்து பெருங் காதலோடும்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன்
றொண்டர்பால் தனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு
தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.
12.100   12 st/nd Thirumurai   Song # 159   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கனவுநிலை நீங்கியபின்  
விழித்துணர்ந்து கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர்  
புலர்வளவும் கண்துயிலார்
மனமுறும்அற் புதமாகி  
வரும்பயமும் உடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேல்
தோன்றுவான் கதிர்தோன்ற.
12.140   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்தலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.
12.190   12 st/nd Thirumurai   Song # 75   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு
சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பும்
திருப்பெ ரும்பெய ரிருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங்கதிர் மீதெழும் போதும்
மறித்து மேல்கடல் தலைவிழும் போதும்
தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித்
தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கன்னிதிருத் தாதையார்
மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தார் அறிவிப்ப
வதுவைவினை முடிப்பதன்முன்
மன்னவற்கு வடபுலத்தோர்
மாறேற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான்
அவ்வினைமேல் அவரகன்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 317   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன்
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான்
எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும்
பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த
12.280   12 st/nd Thirumurai   Song # 613   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கன்னிநா டமணர் தம்மாற்
கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்
தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக்
குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்
கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 963   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கன்னி மாவனங் காப்பென
இருந்தவர் கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கால்முயற்
கருள்செய்த வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவடு
கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு
வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1067   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கன்னி மாடத்தின் முன்புபோல்
பொன்னு முத்துமே லணிகலன்
பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை
விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள்
அணிந்துவைத் தனரால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1095   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கன்னிதன் வனப்புத் தன்னைக்
கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம்
மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா
மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற
சூழல்போ லிருண்டு தோன்ற.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list