சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கழல்
கழல்     கழல்வண்ண     கழல்கின்ற    
1.004   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள்,
பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே!
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?

1.078   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; கவர் தலை அரவொடு
கண்டியும் பூண்பர்;
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர்; பாடுவர்;
ஆர் அணங்கு உடையர்;
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு
  இடைப் புணர்குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

2.058   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழல் ஆர் பூம்பாதத்தீர்! ஓதக்கடலில் விடம் உண்டு,
அன்று,
அழல் ஆரும் கண்டத்தீர்! அண்டர் போற்றும் அளவினீர்!
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில்,
நிழல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

3.019   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர்
சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில்
நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே.

5.052   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்;
தழல் கொள் மேனியர்; சாந்த வெண் நீறு அணி
அழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர்போல்-குளிர் நாகேச்சுரவரே.

11.011   11 st/nd Thirumurai   Song # 3   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர் அந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.

11.034   11 st/nd Thirumurai   Song # 33   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list