1.041
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர், அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள், மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ, பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.
|
2.033
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப்
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.
|
3.084
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.
|
3.107
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம் குலாய மலர் சூடி,
அக்கு அரவோடு அரை ஆர்த்து, உகந்த அழகன்; குழகு ஆக,
நக்கு அமரும் திருமேனியாளன்; திரு நாரையூர் மேவிப்
புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும், புகல்தானே.
|
5.080
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர், மிக்க(அ) அரக்கர் புரம் எரிசெய்தவர், அக்கு அரையினர், அன்பில் ஆலந்துறை நக்க உரு(வ்) வரும், நம்மை அறிவரே.
|
6.039
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்; கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்; அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்; அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்; அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்; மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
|