1.111
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார் மை அணி மிடறு உடை மறையவன் ஊர், பை அணி அரவொடு மான் மழுவாள் கை அணிபவன் இடம் கடைமுடியே.
|
1.113
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்- மை, தவழ் திருமகள் வணங்க வைத்து, பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச் செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
2.112
2 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கை அணி(ம்) மலரால் வணங்கிட,
வெய்ய வல்வினை வீடுமே.
|
4.089
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும்,
மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்;
மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்;
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே.
|
7.013
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி, செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர் ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
|
12.190
12 st/nd Thirumurai
Song # 60
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.
|