சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கோல
கோலம்     கோல்வளை     கோல     கோலக்     கோலப்     கோலப்பூங்     கோலினிற்     கோலும்     கோலத்து     கோலும்,     கோலாலம்     கோல்     கோல்தேன்     கோலத்     கோலித்     கோலமே    
1.015   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,
சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,
காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.

2.046   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல்
ஆடையான்,
நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே.

2.051   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயல் இடைச்
சேல், இளங் கயல், ஆர் புனல் சூழ்ந்த திருக்களருள
நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலி
ஆல நீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே!

2.102   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள
ஆமை,
சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல்
விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை
நில்லாவே.

3.052   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.

3.061   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்,
சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்;
மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்;
வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.091   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே.

3.105   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்,
காலமும் பொய்க்கினும், தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்,
ஞாலமும், தீ, வளி, ஞாயிறு, ஆய நம்பன் கழல் ஏத்தி,
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.

4.015   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை,
ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை,
பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை,
சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.

4.057   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!

5.039   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

7.055   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

7.094   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்-
ஆலும் மயிலும், ஆடல் அளியும்,
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.

8.112   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

8.116   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச்
சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து,
ஞாலம் மிக, பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்;
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை,
மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடி,
பூலித்து, அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ.

8.119   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன்,
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும்
கழுக்கடை காண், கைக்கொள் படை.

8.130   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

8.134   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ
ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே!
சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும்,
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?

8.202   8 st/nd Thirumurai   Song # 27   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
   கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
   லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
   ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
   காள்கொண்டை சார்வதுவே.

8.223   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கோலித் திகழ்சிற கொன்றி
   னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
   சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
   யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
   தாங்கொலென் போதரவே.

9.001   9 st/nd Thirumurai   Song # 5   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே.

9.025   9 st/nd Thirumurai   Song # 1   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
கோல மலர்நெடுங்கட் கொவ்வை
   வாய்க்கொடி யேரிடையீர்
பாலினை யின்னமுதைப் பர
   மாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தேலுடை எம்மிறையை
   என்றுகொல் காண்பதுவே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 

10.217   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 

10.406   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

11.038   11 st/nd Thirumurai   Song # 22   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
கோலப் புலமணிச் சுந்தர
  மாளிகைக் குந்தளவார்
ஏலப் பொழிலணி சண்பையர்
  கோனை இருங்கடல்சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம்
  பந்தனை நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு
  சேவடி போற்றுவனே. 3
  பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12.080   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 118   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கோலினிற் கோத்துக் காய்ச்சிக்
கொழுந்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான்  
வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம்  
சருகிலை யிணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட  
அதன்மிசை இடுவா ரானார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள்
நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து
கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப்
பாலை யுஞ்சொல லாவன உளபரல் முரம்பு.
12.200   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கோலும் கயிறும் கொண்டுகுழைக்
குடுமி அலையக் குலவுமான்
தோலும் நூலுஞ் சிறுமார்பில்
துவள அரைக்கோ வணஞ்சுடரப்
பாலும் பயனும் பெருகவரும்
பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவைவேண்டுந்
தனையும் மிசையுந் தலைச்சென்று.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list