சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சங்க
சங்கு,     சங்கக்     சங்கோடு     சங்கு     சங்கரனைத்     சங்கரன்     சங்கணையும்     சங்கரனே     சங்கம்     சங்குகோள்     சங்கிடத்     சங்கோர்     சங்கொடு     சங்கங்கள்     சங்க     சங்கரனார்     சங்கரர்தாள்     சங்கிலியார்     சங்கப்     சங்கரன்தன்அடி     சங்கரன்றன்     சங்கரனைச்     சங்கரனுக்     சங்கம்,     சங்கை,     சங்கரன்காண்;     சங்கரனே,     சங்கை     சங்கையவர்     சங்கைப்     சங்கரா,     சங்கந்    
1.004   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே!
எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.036   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

1.063   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,
அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய,
வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!

1.112   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

1.115   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே.

2.001   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?

2.037   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே?

2.096   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வான் இடை
மிடைந்து,
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே.

2.101   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார் மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர்
என்பதே.

3.011   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே
பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,
பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற
பரமேட்டியே.

3.019   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.

3.081   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.

3.093   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்க வார் குழையினர், தழல் அன உருவினர், தமது அருகே
எங்கும் ஆய் இருந்தவர், அருந்தவ முனிவருக்கு அளித்து உகந்தார்
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
அங்கம் ஆறு ஓதுவார், இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

4.038   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

4.102   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில்
குங்கிலியப்புகைக்கூட்டு என்றும் காட்டி! இருபதுதோள்
அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே.

5.009   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ!
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?

5.078   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

5.080   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை-
பங்கனார் அடி பாவியேன், நான் உய;
அங்கணன், எந்தை, அன்பில் ஆலந்துறைச்
செங்கணார், அடிச் சேரவும் வல்லனே?

5.088   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கு சோர, கலையும் சரியவே,
மங்கைதான், மருகல் பெருமான் வரும்
அங்கவீதி அருகு அணையா நிற்கும்;
நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?

6.030   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்; தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்;
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்;
எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள் செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

6.032   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி!
சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி!
பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி!
புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி!
அம் கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

6.060   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்கை தனைத் தவிர்த்து ஆண்ட தலைவன் தன்னை, சங்கரனை, தழல் உறு தாள் மழுவாள் தாங்கும்
அம் கையனை, அங்கம் அணி ஆகத்தானை, ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த
மங்கையனை, மதியொடு மாசுணமும் தம்மில் மருவ   விரிசடை முடி மேல் வைத்த வான்நீர்க்-
கங்கையனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

6.095   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து | தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,| மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் | ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,| அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.

7.010   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சங்கையவர் புணர்தற்கு அரியான், தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர்
மங்கை அவள், மகிழச் சுடுகாட்டு இடை நட்டம் நின்று ஆடிய சங்கரன், எம்
அங்கையில் நல் அனல் ஏந்துமவன், கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேரகலத்து
அங்கையவன்(ன்) உறைகின்ற இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

7.030   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணாக்
கங்கு ஆர்ந்த வார்சடைகள் உடையானை, விடையானை, கருப்பறியலூர்
கொங்கு ஆர்ந்த பொழில்-சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக் கோயில்
எம் கோனை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.

7.051   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சங்கு அலக்கும் தடங்கடல் வாய் விடம் சுட வந்து அமரர் தொழ,
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை,
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி
எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

7.071   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த!
கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற,
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

8.105.07   8 st/nd Thirumurai   Song # 65   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப்
பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண்,
மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி!
இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.

8.109   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட,
செம் கனி வாய் இதழும் துடிப்ப, சேயிழையீர்! சிவலோகம் பாடி,
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடை முடியான் கழற்கே,
பொங்கிய காதலின் கொங்கை பொங்க, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

8.149   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே?
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே?
அங்கு இது நன்று, இது நன்று, எனும் மாயை அடங்கிடும் ஆகாதே?
ஆசை எலாம், அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே?
செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே?
சீர் அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே?
எங்கும் நிறைந்து, அமுது ஊறு, பரம்சுடர் எய்துவது ஆகாதே?
ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே!

8.211   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சங்கந் தருமுத்தி யாம்பெற
   வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
   பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
   னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
   வானவன் நேர்வருமே.

11.003   11 st/nd Thirumurai   Song # 6   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை  
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

11.006   11 st/nd Thirumurai   Song # 66   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின் தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரவென்
நெஞ்சம் எரிகின்றதே.

11.008   11 st/nd Thirumurai   Song # 39   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான்

11.008   11 st/nd Thirumurai   Song # 53   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள்

11.011   11 st/nd Thirumurai   Song # 9   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே
வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா
றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன்
பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய

11.021   11 st/nd Thirumurai   Song # 7   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.

11.026   11 st/nd Thirumurai   Song # 18   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
சங்கிடத் தானிடத் தான்தன
தாகம் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள் தில்லை அம்பலக்
கூத்தற் கவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென்
றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை
யேலுன் பசப்பொழியே.

11.032   11 st/nd Thirumurai   Song # 19   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.

12.080   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க.
12.150   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சங்கங்கள் முரன்றன தாரைகள்
பேரி யோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம்
எல்லை யில்ல
அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி
அம்பொற் கொம்பின்
பங்கன்அரு ளால்உல காள்பவர்
பாங்கர் எங்கும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 203   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 284   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்க நாதங்கள் ஒலிப்பத்
தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும்
மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார்
திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 626   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்கங்கள் வயலெங்கும்
சாலிகழைக் கரும்பெங்கும்
கொங்கெங்கும் நிறைகமலக்
குளிர்வாசத் தடமெங்கும்
அங்கங்கே உழவர்குழாம்
ஆர்க்கின்ற ஒலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுகர்
இவைகழிய எழுந்தருளி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1199   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்கொடு தாரை சின்னம்
தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று
மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப்
பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத்
திருமணம் எழுந்த தன்றே.
12.290   12 st/nd Thirumurai   Song # 162   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்கரனார் திருவருள்போல்
தண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரும் ஆதரவால்
அவர் நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வால் பள்ளியமர்ந்
தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தார்அப்
பந்தரொடுந் தாங்கரந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 248   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்கரர்தாள் பணிந்திருந்து
தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கையவள் தனைப்பிரியா
வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தால்
அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க்
கொளவேண்டு மெனத்தாழ்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 251   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சங்கிலியார் தம்மருங்கு
முன்புபோற் சார்ந்தருளி
நங்கையுனக் காரூரன்
நயந்துசூ ளுறக்கடவன்
அங்கு நமக் கெதிர்செய்யும்
அதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க்
கொள்கவெனக் குறித்தருள.
12.370   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சங்கப் புலவர் திருமுகத்தைத்
தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு
மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர்
தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன்
வந்து மன்னர்க் கறிவித்தார்.
12.540   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
சங்கரன்தன்அடி யாருக்கு
அமுதளிக்கும் தவமுடையார்
அங்கொருவர் அடியவருக்கு
அமுதொருநாள் ஆக்கவுடன்
எங்குமொரு செயல்காணாது
எய்தியசெய் தொழின்முட்டப்
பொங்கியெழும் பெருவிருப்பாற்
12.560   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
சங்கரன்றன் அருளாலோர்
துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்கண்
அருள்புரிவான் அருந்துணவு
மங்கியநாட் கழிவளவும்
வைப்பதுநித் தமும்மொருகா
சிங்குனக்கு நாமென்ன
இடர்நீங்கி யெழுந்திருந்தார்.
12.580   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
சங்கரனைச் சார்ந்தகதை
தான்கேட்குந் தன்மையராய்
அங்கணனை மிகவிரும்பி
அயலறியா அன்பினால்
கங்கைநதி மதியிதழி
காதலிக்குந் திருமுடியார்
செங்கமல மலர்ப்பாதஞ்
சேர்வதனுக் குரியார்கள்.
12.580   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
சங்கரனுக் காளான
தவங்காட்டித் தாமதனால்
பங்கமறப் பயன்துய்ப்பார்
படிவிளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர்
ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கிஎழுஞ் சித்தமுடன்
பத்தராய்ப் போற்றுவார்.
]" 59

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list