சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சடை
சடை     சடைதனைத்     சடையினர்,     சடையன்;     சடைமேல்அக்     சடையே
நீரகம்
    சடைமேல்     சடைமருங்கில்     சடையானை     சடையானை,     சடையாய்!     சடையினன்,     சடையானே!     சடையனார்;     சடையின்     சடையனை;     சடைக்கணாள்,     சடையிடைக்     சடையானே,     சடைகெழு    
1.001   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

1.011   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

1.033   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

1.035   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.

1.039   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.

1.075   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.134   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்;
உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்;
விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.

2.012   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

2.013   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய
விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்
உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!

2.014   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

2.018   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

2.069   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண் நீறு
அணிந்தாரும்,
புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு
அசைத்தாரும்
விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூ இலைச்சூலப்
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

2.084   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர்
திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை,
இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம்
நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை
நனிபள்ளி போலும்; நமர்கா

3.008   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-
உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,
கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?

3.031   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப்பள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!

3.056   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையினன், சாமவேதன், சரி கோவணவன், மழுவாள
படையினன், பாய் புலித்தோல் உடையான், மறை பல்கலை நூல்
உடையவன், ஊனம் இ(ல்)லி, உடன் ஆய் உமை நங்கை என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம்; பேணுமினே!

3.114   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும்
வெண்தலைமாலையே;
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து
இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;
புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன, பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி
இருப்பதும் இச்சையே.

4.013   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே!
விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே!
உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.022   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார்; உடை தலையில் உண்பதும், பிச்சை ஏற்று;
கடி கொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று (வ்) அனல்-எரி ஆடும் ஆறே!

5.006   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்,
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்,
படையின் நேர் தடங்கண் உமை பாகமா
அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.

5.017   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடையனை; சரி கோவண ஆடை கொண்டு
உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு; பாய்தரும்
விடையனை;-நெருநல் கண்ட வெண்ணியே.

5.021   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்
கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள்
படைக்கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.

6.059   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும், தக்கன் தன் பெருவேள்வி தகர்த்திட்டாரும்,
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர் ஊரின் உழிதர்வாரும்,
மடை ஏறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்,
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6.096   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்   வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

6.098   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்; சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்; உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்; பாசம் அற வீசும் படியோம், நாமே.

8.104   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!

8.139   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ இலைச் சூலப்
படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை
விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான்,
உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே!

9.016   9 st/nd Thirumurai   Song # 3   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ கோங்கிண ரனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்
   துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.

11.004   11 st/nd Thirumurai   Song # 50   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

11.024   11 st/nd Thirumurai   Song # 4   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
சடையே
நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே
மிடறே
நஞ்சகம் துவன்றி அமிர்துபிலிற் றும்மே
வடிவே
மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே
மடங்கல்மதம் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று
இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.

11.028   11 st/nd Thirumurai   Song # 23   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
தெங்கே இருக்க இவள்.

12.000   12 st/nd Thirumurai   Song # 120   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
சடைமருங்கில் இளம்பிறையுந்
தனிவிழிக்குந் திருநுதலும்
இடமருங்கில் உமையாளும்
எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
கண்டரசன் போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும்
விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 482   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list