சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சீர்
சீர்     சீர்நந்தி     சீர்மன்னு     சீர்நிலவு     சீர்தரு     சீர்மன்னுந்     சீர்வளரு     சீர்திகழும்     சீர்மறையோர்     சீர்வளர்     சீர்மலி     சீர்கெழு     சீர்பெருகு     சீர்வளருந்     சீர்கொள்     சீர்பெருகுந்     சீர்மை     சீர்த்த     சீர்த்தானை,     சீர்த்தானை;     சீர்த்ததிண்    
1.041   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

1.091   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

1.118   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

2.036   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?

2.055   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள் ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

2.067   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் உடையார்; அடியார்கள் சேடர்; ஒப்பார்; சடை சேரும்
நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்;
விரிகொன்றைத்
தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப்
பத்து ஆய
பேர் உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

2.070   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.

2.089   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே.

2.092   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல்
பொருட்டால்,
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சுரத்தாரே.

3.023   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு
பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே.

3.080   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.

3.118   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர்
புனலொடு தூபம்;
தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல்
கொள, உடன்மிதந்த,
கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்
ஆமே.

4.103   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!

5.056   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்,
கூத்தனார் உறையும் திருக்கோளிலி
ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே.

6.007   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
  பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
 நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு 
என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.

6.029   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண் இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை,
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான்தன்னை,
ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6.054   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை,
கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

6.066   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை;
பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ; பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை;
ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம்
தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

8.113   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!

8.116   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக;
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து;
நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு
ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி,
போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ.

9.008   9 st/nd Thirumurai   Song # 8   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
   திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
   புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
   அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

10.711   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

12.150   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி
மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.
12.190   12 st/nd Thirumurai   Song # 128   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சீர்நிலவு திருக்குறிப்புத்
தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதாள்
அறஎறிந்தார் பரிசுரைக்கேன்
பேரருளின் மெய்த்தொண்டர்
பித்தனெனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதனுண்மை
அறிந்துரைக்க இசைந்தெழுவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 240   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்தரு செங்காட் டங்குடி
நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு
சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு
பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று
வணங்கி இன்புற்றார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 248   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்மன்னுந் திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப்
பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர்
கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித்
திருவாக்கூர் சென்றணைந்தார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 326   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்வளரு மதில்கச்சி
நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார்
நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித்
தகுந்தொண்டு செய்திருந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 405   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சீர்திகழும் பாண்டிமா
தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த
தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார்
வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக
அடிபோற்ற அங்கிருந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 72   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.
12.280   12 st/nd Thirumurai   Song # 252   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 637   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்மலி அசோகு தன்கீழ்
இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக்
கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும்
எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று ரைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 904   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.
12.280   12 st/nd Thirumurai   Song # 1112   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1249   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்பெருகு நீலநக்கர்
திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
பன்னிகளோ டுடன்புக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 167   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்வளருந் திருத்தில்லைத்
திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள்
எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும்
பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார்
திருத்தினைமா நகர்புகுந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 209   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்கொள் மரபில் வருஞ்செயலே
யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம்
வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார்
தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 306   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சீர்பெருகுந் திருத்தேவா
சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக்
கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில்
தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத
லால்அவனி மேல்வீழ்ந்தார்.
12.670   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
சீர்வளர் சிறப்பின் மிக்க
செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க
பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்ப தாகும்.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list