சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சூத
சூது     சூதொன்     சூதப்பொழி     சூதத்     சூதபா     சூத     சூதினில்வென்     சூதம்    
1.066   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்
போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த
சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.

11.022   11 st/nd Thirumurai   Song # 87   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.

11.033   11 st/nd Thirumurai   Song # 40   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
சூதப்பொழி லம்ப ரந்தணன்
சோமாசி மாறனென்பான்
வேதப் பொருளஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் றொண்டன்
தனக்கு மகிழ்துணையே.

11.037   11 st/nd Thirumurai   Song # 16   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்

12.000   12 st/nd Thirumurai   Song # 69   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
சூதபா டலங்கள் எங்குஞ்
சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந்
தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
பூகபுன் னாகம் எங்கும்.
12.230   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சூத நெருங்கு குலைத்தெங்கு
பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி
விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய்
நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது
மிழலை நாட்டுப் பெருமிழலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 1043   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சூத நல்வினை மங்கலத்
தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி
வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள்
தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில்
கடிவிழா அயர்ந்தார்.
12.320   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சூதினில்வென் றெய்துபொருள்
துரிசற்ற நல்லுணர்வில்
தீதகல அமுதாக்கு
வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுடன் அடியார்கள்
அமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமும்
அமுதுசெய்தங் கிருக்குநாள்.
12.330   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தா ரமுதூட்டுநற் பண்பின் மிக்கார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list