சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சூலம்
சூலம்    
1.018   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

2.005   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்,
நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!

2.007   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே
சால நல்ல பொடி பூசுவர்; பேசுவர், மாமறை;
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்,
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே.

2.055   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு ஆடலீர்!
நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்!
ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

4.024   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி,
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி,
மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை,
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே.

5.038   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர்,
ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர்,
காலகாலர்-கடவூர் மயானத்தார்;
மாலை மார்பர், பெருமான் அடிகளே.

5.055   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சூலம் மல்கிய கையும், சுடரொடு,
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்,-
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு-
ஆல நீழலும், அம்ம அழகிதே!

10.406   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list