சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சென்ற
சென்றுணர்     சென்றன     சென்றிறைஞ்சும்     சென்றுசெருப்     சென்றே     சென்றுழிச்     சென்றவர்     சென்றடி     சென்றவருங்     சென்றணைந்த     சென்ற     சென்றுதிரு     சென்று     சென்றுள்     சென்றணைந்து     சென்றகா     சென்றவர்கள்     சென்றணையும்     சென்றுதம்     சென்றுதிருப்     சென்றுசிவ     சென்றார்    
3.068   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி, உடனே-
நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்-
துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ,
கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற கயிலாயமலையே.

3.115   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி, அன்பு
செகுத்தனன்பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக்
கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து, அனகம் கையால்,
அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்
நாகத்து அடவியே.

6.014   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்;
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்;
கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட, குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்;
நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

6.049   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன் காண்; திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப்படையாளீ காண்;
அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்;
மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

7.043   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள்
மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே?
குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள்
முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே!

7.091   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன், வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன், நரை ஏறு
ஒன்றை உடையான்,-ஒற்றியூரே.

8.218   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சென்றார் திருத்திய செல்லல்நின்
   றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
   தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
   லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
   உரைப்பனிக் கூர்மறையே.

10.108   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 

10.733   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 71   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் நன்று
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க் கிவர்.

11.023   11 st/nd Thirumurai   Song # 28   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் சென்றுதன்
கண்இடந் தன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான்
கண்இடந் தப்பாமைப் பார்த்து.

11.029   11 st/nd Thirumurai   Song # 63   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
சென்றே விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழிலழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதிலொற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.

11.038   11 st/nd Thirumurai   Song # 58   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
சென்றுழிச் சென்றுழிச்
  சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு
  வன்றுயர் போயொழிந்
தின்புற் றிருநிதி
  எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள
  தாயின் மதுமலர்
வண்டறை சோலை
  வளவயல் அகவ (15)

12.030   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சென்றவர் தடுத்த போதில்
இயற்பகை யார்முன் சீறி
வன்றுணை வாளே யாகச்
சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந்
தலைகளுந் துணித்து வீழ்த்து
வென்றடு புலியே றென்ன
அமர்விளை யாட்டின் மிக்கார்.
12.030   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சென்றவர் முனியைக் காணார்
சேயிழை தன்னைக் கண்டார்
பொன்றிகழ் குன்று வெள்ளிப்
பொருப்பின்மேல் பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானில்
தலைவனை விடைமேற் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார்
நிலத்தினின் றெழுந்தார் நேர்ந்தார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சென்றவருங் கஞ்சாறர்
மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர்
கோனாரும் மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு
திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல்வினை மங்கலநாள்
மதிநூல்வல் லவர்வகுத்தார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
சென்றணைந்த ஆனாயர்
செய்தவிரைத் தாமமென
மன்றல்மலர்த் துணர்தூக்கி
மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை
நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையிலன்பை
உடையவர்பால் மடைதிறந்தார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 45   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சென்ற மறையோன் திருமகனார்
சிறந்த ஊர்ஆன் நிரைகொடுபோய்
மன்றல் மருவும் புறவின்கண்
மேய்ப்பார் மண்ணி மணற்குறையில்
அன்று திரளக் கொடுசென்ற
அதனை யறிந்து மறைந்தப்பால்
நின்ற குரவின் மிசையேறி
நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.
12.210   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சென்றுதிரு வீரட்டா
னத்திருந்த செம்பவளக்
குன்றை அடிபணிந்து
கோதில் சிவசின்னம்
அன்று முதல்தாங்கி
ஆர்வமுறத் தம்கையால்
துன்று திருப்பணிகள்
செய்யத் தொடங்கினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 92   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சென்றணைந்த அமைச்சருடன்
சேனைவீ ரருஞ்சூழ்ந்து
மின்தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்றுநுமை அரசன்அழைத்
தெமைவிடுத்தான் போதுமென
நின்றவரை நேர்நோக்கி
நிறைதவத்தோர் உரைசெய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 193   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சென்று சேர்ந்து திருச்சத்தி
முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக்
குன்ற மகள்தன் மனக்காதல்
குலவும் பூசை கொண்டருளும்
என்றும் இனிய பெருமானை
இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்துதமிழ்
மொழிமா லைகளும் சாத்துவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 252   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சென்றுள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் வலமா வந்துதிரு
முன்றில் வணங்கி முன்னெய்தி
முக்கட் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 403   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சென்றணைந்து மதுரையினில்
திருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந்
தருளியஅங் கணர்கோயில்
முன்றிலினை வலங்கொண்டு
முன்னிறைஞ்சி உள்புக்கு
வன்றனிமால் விடையாரை
வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சென்று பிள்ளையார் எழுந்தரு
ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங்
களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும்
தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை
யுடன்கொடு புகுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 309   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்
திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய்
துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்
சொல்மாலை நிகழப் பாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 350   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து
மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக்
கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார்
வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 397   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்றணைந்து திருவாயில்
புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில்
வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத
பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து
மொழிமாலை போற்றிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 424   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்று தேவர்தம் பிரான்மகிழ்
கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி
வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 659   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 913   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றிமழ இளங்களிறு சண்பை யாளி
வேதபா லகன்மும்மைத் தமிழின் வேந்தன்
நன்றுமகிழ்ந் தழைக்கின்றான் ஈண்ட நீரும்
நண்ணுமெனக் கூறுதலும் நன்மை சாராத்
தன்தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திரமண் டபமுன்பு சார வந்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 967   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்ற ணைந்துசிந் தையின்மகிழ்
விருப்பொடு திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும்
வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை யெனுந்திருப்
பதிகமெய் குலவிய இசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல்
வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1130   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்றணையும் பொழுதின்கண்
திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை
இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத்
திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை
விருப்பினுடன் பணிகின்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்று விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு
தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி
நினைந்த கருத்து நிகழ்விப்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 79   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்று திருக்கோ புரம்இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல்
நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள்
அருளா தொழிய நேர்நின்று.
12.290   12 st/nd Thirumurai   Song # 338   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்று மணிவா யிற்கதவம்
செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று
அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வார்
உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர்
போலும் அழைத்தார் எனத்துணிந்து.
12.290   12 st/nd Thirumurai   Song # 351   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
உறுதிசெய் தணைந்தா ரென்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
தீர்த்தெழுந் தருளி என்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 51   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சென்ற திசையில் சிவனடியார்
சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர்
இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந்
துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 68   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சென்று தேவா சிரியனைமுன்
இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்

உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி
வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 99   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சென்றுதிருப் பூவணத்துத்
தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர்
முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி
12.410   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
சென்றுசிவ காமியார்
கொணர்திருப்பள் ளித்தாமம்
அன்றுசித றுங்களிற்றை
அறஎறித்து பாகரையுங்
கொன்றஎறி பத்தர்எதிர்
என்னையுங்கொன் றருளுமென
வென்றிவடி வாள்கொடுத்துத்
திருத்தொண்டில் மிகச்சிறந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
சென்ற சென்ற குடபுலத்துச்
சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று
நலஞ்சேர் தலமுங் கானகமும்
துன்று மணிநீர்க் கான்யாறும்
துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார்
குலவும் அடியேன் அகம்புகுந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
சென்று கண்ணுதல் திருமுன்பு
தாழ்ந்துவீழ்ந் தெழுந்துசே ணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந்
ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந்
தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்றும் மேனியர் ஊரனே
வந்தனை என்றனர் உலகுய்ய.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list