சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செம்
செம்பொன்     செம்     செம்பொனின்     செம்பைச்     செம்பொற்     செம்புபொன்     செம்மைமுன்     செம்பொ     செம்மாந்திங்     செம்மையால்     செம்மாண்வினை     செம்மை     செம்பொன்னும்     செம்பொன்முத     செம்மைபெற     செம்மணி     செம்பியர்     செம்பொன்மலைக்     செம்பொன்செய்     செம்மைசேர்     செம்பரிதி     செம்பியனா     செம்பின்     செம்பவளத்     செம்மலர்க்     செம்பொனே     செம்பொனால்     செம்பொன்னை,     செம்மல     செம்மனக்    
1.007   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும்,
நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.013   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும்,
பெய்ம்மின், பலி! என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.

1.107   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.

1.126   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில்
சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன்,
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு
ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு
ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக்
கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.

2.005   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர்
அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை
நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?

2.110   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,
செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்
பரந்து உந்தி,
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை
உறைகின்ற
எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்
செய்வோமே.

3.093   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல்
அரிசில் சூழ்ந்த
அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை,
கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி, நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம், வினை; நலம்
பெறுவர், தாமே.

4.013   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர்
கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்,
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.070   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்;
அம் மலர்ப்பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்;
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம் மலம் அறுப்பர் போலும், நனிபள்ளி அடிகளாரே.

4.078   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன்,
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!

5.032   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில்
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்,
பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி(ந்) நகர்
நம்பன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

6.004   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும்
வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே:
நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே; நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.074   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்பொன்னை, நன் பவளம் திகழும் முத்தை, செழுமணியை, தொழுமவர் தம் சித்தத்தானை,
வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை, மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை, எம் கயிலாய மலையான் தன்னை, கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும்
நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

7.048   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை
கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

7.068   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச்
சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை,
கும்ப மாகரியின்(ந்) உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள்
நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

8.107   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்,
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதா,
கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி,
இங்கு, நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி,
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை,
அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர் அமுதை,
நங்கள் பெருமானை, பாடி, நலம் திகழ,
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

8.108   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செம் கண் நெடுமாலும் | சென்று இடந்தும்,| காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் |பூதலத்தே |போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு,| எம் தரமும் |ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை,| தென்னன் |பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், | அறைகூவி,| வீடு அருளும்
அம் கருணை வார் கழலே| பாடுதும் காண்;| அம்மானாய்!

8.151   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை,
மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

8.214   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
செம்மல ராயிரந் தூய்க்கரு
   மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
   தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
   தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
   வாய்நும ராடுவதே.

9.014   9 st/nd Thirumurai   Song # 6   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன்
   சேவடி பார்த்திருந் தலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர்
   என்னுடை அடிமைதான் யாதே
அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
   அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே. 

9.015   9 st/nd Thirumurai   Song # 7   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
செம்பொனே பவளக் குன்றமே நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே
   அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே
   சங்கரா சாட்டியக் குடியார்க்
கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா றியம்பே. 

10.310   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே. 

10.401   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

10.821   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

11.033   11 st/nd Thirumurai   Song # 83   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.

12.000   12 st/nd Thirumurai   Song # 222   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
செம்மாந்திங் கியானறியா
தென்செய்தே னெனத்தெளிந்து
தம்மானை யறியாத
சாதியா ருளரே யென்று
அம்மானைத் திருவதிகை
வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி னுரியானைக்
கழல்பணிந்து பாடினார்.
12.010   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை
செய்து தோளால்
இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை
யேந்து கென்று
பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு
கோடை நெற்றிக்
கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண்
கட்டி விட்டார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
செம்மை வெண்ணீற் றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம் பியநெறியார்
நான்கு வேதம் முறைபயின்றார்
தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந்
தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
12.210   12 st/nd Thirumurai   Song # 417   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செம்பொன்னும் நவமணியும்
சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில்
உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர்
உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல
வாவியினில் புகஎறிந்தார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள்
புக்கு வணங்க நண்ணினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 76   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 344   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மணி வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 658   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம்பெரு மான்தன் திருவருள் பெருகும்
நன்மைதான் வாலிதே என்ன
வம்பலர் அலங்கல் மந்திரி யாரும்
மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
தன்மையாம் நிலையுரைக் கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 994   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பொன்மலைக் கொடிதழுவக்
குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்கும்
கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி
பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல்
தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1185   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பொ னின்பரி கலத்தினில்
செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ்
மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம்
அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக்
கொளிர்தரும் பரப்பில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1223   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பொன்செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த
பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி
நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன
அழகலங் கரித்து வைத்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 94   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பொன் மேருச் சிலைவளைத்த
சிவனார் ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி
நாளு மகிழ்வார்க் கருள்கூட
உம்பர் போற்றுந் தானங்கள்
பலவும் பணிந்து போந்தணைவார்
இம்பர் வாழ இன்னம்பர்
நகரைச் சேர வெய்தினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 314   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மை நெறிசேர் திருநாவ
லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார்
தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால்
விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால்
தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 400   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மைசேர் சிந்தை மாந்தர்
சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி
நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும்
மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது
முகம்மலர்ந் திருந்த போது.
12.320   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்பொற் புரிசைத் திருவேற்கா
டமர்ந்த செய்ய சடைக்கற்றை
நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்
கிம்பர்த் தலத்தில் வழியடிமை
யென்றுங் குன்றா வியல்பில்வரும்
தம்பற் றுடைய நிலைவேளாண்
குலத்தல் தலைமை சார்ந்துள்ளார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.
12.370   12 st/nd Thirumurai   Song # 95   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செம்பியனா ருடன்செழியர்
தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய
நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின்
றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற்
குறைவறுத்தார் பஞ்சவனார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 151   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செம்பொற் கரக வாசநீர்
தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி
யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது
தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங்
கெல்லாம் இசைய வேண்டுமென.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list