சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செய்
செய்ய     செய்தவத்தர்     செய்     செய்யர்,     செய்யமேனியீர்!     செய்தான்     செய்த     செய்யன்     செய்திடும்     செய்யு     செய்யான்     செய்தரு     செய்தவர்     செய்வதற்     செய்யமா     செய்தபடி     செய்வதொன்     செய்தவத்தாற்     செய்வதனை     செய்வினையுஞ்     செய்யுள்நிகழ்     செய்வ     செய்யா     செய்யன்,     செய்யனே!     செய்த்தலைப்     செய்யதாமரைமேல்     செய்யும்     செய்யர்;     செய்ஞ்     செய்யனே;     செய்யாய்,     செய்யானை,     செய்யார்     செய்வது     செய்குன்     செய்ம்முக    
1.002   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.

1.002   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்
கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.

1.005   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.

1.028   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.042   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி,
கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்
கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன,
பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.

1.088   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

1.092   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

1.114   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்
கொய் அணி நறுமலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க,
மையல் செய் வள நகர் மாற்பேறே.

2.050   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி
வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்?
தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,
ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

3.037   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!

3.044   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!

3.051   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

3.078   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.

3.097   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே;
புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம் உடைப் பரிசே.

3.120   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

3.902   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.

4.016   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.

4.062   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே!
மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

4.080   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

5.028   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்,
எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும்,
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்,
ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

5.040   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை
மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்;
கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம்
ஐயனே அறிவான், இவள் தன்மையே.

5.072   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்-
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்,
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

6.004   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக
வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த
ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.056   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.057   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.060   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யானை, வெளியானை, கரியான் தன்னை, திசைமுகனை, திசை எட்டும் செறிந்தான் தன்னை,
ஐயானை, நொய்யானை, சீரியானை, அணியானை,   சேயானை, ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை, பொய்யாதும் இல்லான் தன்னை, விடையானை, சடையானை, வெறித்த மான் கொள்
கையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

7.013   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன்,
கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல்
பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார்,
மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .

7.027   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செய்யார் மேனியனே! திரு நீல மிடற்றினனே!
மை ஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே!
கை ஆர் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற
ஐயா! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே! .

7.089   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செய் வினை ஒன்று அறியாதேன்; திருவடியே சரண் என்று
பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ?
பை அரவா! இங்கு இருந்தாயோ? என்ன, பரிந்து என்னை
உய்ய அருள் செய்ய வல்லான், உளோம், போகீர்! என்றானே!

8.105.06   8 st/nd Thirumurai   Song # 52   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும்,
பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!

8.119   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர்
ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்!
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும்
ஆனந்தம் காண், உடையான் ஆறு.

8.147   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே,
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

8.216   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
செய்குன் றுவைஇவை சீர்மலர்
   வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
   பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
   உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
   வற்கிடம் ஏந்திழையே.

8.225   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
செய்ம்முக நீல மலர்தில்லைச்
   சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
   யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
   பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
   கீழும் நெடுஞ்சுடரே.

9.022   9 st/nd Thirumurai   Song # 8   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு
   தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்
   தாடுசிற் றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக்
   காதும் காதினின் மாத்தி ரைகளோ
டைய தோடுமன்றே அடி
   யேனை ஆட் கொண்டனவே. 

10.220   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே. 

10.301   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 

10.412   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

10.516   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

10.720   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.

10.721   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.

10.736   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.  

11.009   11 st/nd Thirumurai   Song # 33   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும் சென்றடைந்து
கைதொழுவார்க் கெந்தை கயிலாயர் - நொய்தளவில்
காலற்காய்ந் தாரன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.

11.009   11 st/nd Thirumurai   Song # 78   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.

11.022   11 st/nd Thirumurai   Song # 85   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.

11.025   11 st/nd Thirumurai   Song # 16   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றனதி ணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.

11.026   11 st/nd Thirumurai   Song # 17   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.

11.033   11 st/nd Thirumurai   Song # 4   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
செய்தவர் வேண்டிய தியாதுங்
கொடுப்பச் சிவன் தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்டி
னத்துள் இயற்பகையே.

12.030   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செய்வதற் கரிய செய்கை
செய்தநற் றொண்டர் போக
மைதிகழ் கண்டன் எண்டோள்
மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய்தரும் உள்ளம் இல்லான்
பார்க்கிலன் போனா னென்று
மெய்தரு சிந்தை யாரை
மீளவும் அழைக்க லுற்றார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செய்ய ஒண்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும்
சைவ வெண்திரு நீற்றுமுண் டகத்தொளித் தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான் தோலும்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 224   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேன்என்
றெய்தரிய கையறவாந் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
12.210   12 st/nd Thirumurai   Song # 294   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.
12.210   12 st/nd Thirumurai   Song # 317   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

12.240   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்தவர் இசைந்த போது
திருமனை யாரை நோக்கி
எய்திய பேறு நம்பால்
இருந்தவா றென்னே என்று
மைதிகழ் மிடற்றி னான்தன்
அருளினால் வந்த தென்றே
உய்தும்என் றுவந்து கொண்டு
திருவமு தாக்கல் உற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 166   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 221   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.
12.280   12 st/nd Thirumurai   Song # 707   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய மேனியர் திருமக
னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண்
கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன்
படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை
எழுந்தனன் மீது.
12.280   12 st/nd Thirumurai   Song # 785   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய தாமரை அகவித
ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன்
பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை
யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்துமுன் னிட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 792   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்வதொன் றறிகி லாதார்
திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப்
பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடும்
ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை யாக்கப்
புகுந்தநீர் போமின் என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 873   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்தவத்தாற் சிவபாத
இருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை
மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றார்
அருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே
இருந்தநாள் மிகநினைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 75   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 275   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்வதனை யறியாது
திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால்
சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதாம்
எனநினைந்தெம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப்
பாடுவேன் எனநினைந்து.
12.340   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செய்வினையுஞ் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும்
விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்
சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.
12.400   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
செய்வ தொன்றும் அறியாது
சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்துஎன்
ஐயன் அணைந்தான் எனையாளும்
அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம்
தலைவன் அணைந்தான் தரணியெலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று
ஓகை முரசம் சாற்றுவித்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list