சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செழு
செழுந்சடை     செழுந்தழல்     செழுநீர்     செழுமலர்த்தார்     செழுந்தரளப்     செழுந்திரு     செழு     செழுந்     செழுக்     செழுங்கார்     செழுமிய    
2.070   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி,
செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
நுதலான் கருதும் ஊரே.

2.090   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

6.007   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம்,
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும்,
குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்,
பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர்,
பயற்றூர், பராய்த்துறையும்,
கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - 
கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.

7.058   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு
அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்;
கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே .

8.104   8 st/nd Thirumurai   Song # 44   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!

8.124   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.

8.213   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.

8.214   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
செழுங்கார் முழவதிர் சிற்றம்
   பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
   வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
   வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
   மோவின்றெம் வள்ளலையே.

8.225   8 st/nd Thirumurai   Song # 42   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
செழுமிய மாளிகைச் சிற்றம்
   பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
   லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
   நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
   வாறு விரும்புவதே.

9.003   9 st/nd Thirumurai   Song # 5   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
செழுந் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
   திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாடவாடும்
   எனைநீ நலிவதென் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
   கரசுக் கரசே அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

10.929   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

11.015   11 st/nd Thirumurai   Song # 7   நக்கீரதேவ நாயனார்   கார் எட்டு  
செழுந்தழல் வண்ணன் செஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார்.

11.033   11 st/nd Thirumurai   Song # 78   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.

11.037   11 st/nd Thirumurai   Song # 132   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்

12.280   12 st/nd Thirumurai   Song # 112   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி
பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி
யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித்
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப்
பிறபதியும் தொழமுன் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 291   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 61   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செழுநீர் நறையூர் நிலவுதிருச்
சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர்
விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தில்
உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்தேத்தித்
தொண்டர் சூழ வுறையுநாள்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list