சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சைவ
சைவம்     சைவப்     சைவ     சைவமைந்தர்     சைவநெறி     சைவத்த    
7.082   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சைவத்த செவ் உருவன்; திருநீற்றன்(ன்), உரும் ஏற்றன்;
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும்(ம்) எரிசெய்தான்;
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன்; திருச் சுழியல்
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல்(ல்) எளிது அன்றே!

10.515   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

10.519   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

10.519   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

12.210   12 st/nd Thirumurai   Song # 286   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சைவ நெறிவை திகம்நிற்கச்
சழக்கு நெறியைத் தவமென்னும்
பொய்வல் அமணர் செயல்தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக்கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி
ஆதி சைவ நெறிவிளங்கத்
தெய்வ நீறு நினைந்தெழுந்தார்
சீர்கொள் சண்பைத் திருமறையோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 774   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சைவமைந்தர் சொல்லின்வென்றி
சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பொழித்த
தன்மைகண் டறிந்தனம்
மெய்தெரிந்த தர்க்கவாதம்
வெல்லல்ஆவ தன்றுவே
றெய்துதீயின் நீரில்வெல்வ
தென்றுதம்மில் எண்ணினார்.
12.540   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
சைவநெறி வைதிகத்தின்
தருமநெறி யொடுந்தழைப்ப
மைவளருந் திருமிடற்றார்
மன்னியகோ யில்களெங்கும்
மெய்வழிபாட்டு அர்ச்சனைகள்
விதிவழிமேன் மேல்விளங்க
மொய்வளர்வண் புகழ்பெருக
முறைபுரியும் அந்நாளில்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list