சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சொல்
சொல்லும்     சொல்லவொண்     சொல்லிய     சொல்லகில்     சொல்லா     சொல்லாயம்     சொல்லச்     சொல்லார்தமி     சொல்லுவ     சொல்லரச     சொல்லின்     சொல்வி     சொல்லானை,     சொல்லானை;     சொல்     சொல்-நயம்     சொல்-துணை     சொல்லக்     சொல்லிடில்     சொல்லுவது     சொல்லை     சொல்ல(அ)ரும்     சொல்லில்     சொல்லாண்ட    
2.013   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,
கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய
நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!

2.016   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும்,
கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!

2.078   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார்,
கல் தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்,
மல் தரும் திரள் தோளினார், மாசு இல் வெண்பொடிப்
பூசினார்,
வில் தரும் மணிமிடறினார், மேயது விள நகர் அதே.

3.078   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத்
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.

3.084   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.

4.011   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

4.012   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?

4.086   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!

6.020   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல் அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை, மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை, காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

6.022   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை; தொல்-நரகம் நன்நெறியால்-தூர்ப்பான் தன்னை;
வில்லானை; மீயச்சூர் மேவினானை, வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி,
பொல்லாதார் தம் அரணம் மூன்றும் பொன்ற, பொறி அரவம் மார்பு ஆரப் பூண்டான் தன்னை;
கல்லாலின் கீழானை;- கழி சூழ் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

6.067   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி, தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை;
நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை;
பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து, எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க-
கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

6.074   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்   ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை,
அல்லானை, பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த
வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை, வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

6.075   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சொல் மலிந்த மறைநான்கு ஆறு அங்கம் ஆகிச் சொல் பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்;
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்;
மல் மலிந்த மணி வரைத்திண் தோளர் போலும்; மலை அரையன் மடப்பாவை மணாளர் போலும்;
கொன் மலிந்த மூ இலைவேல் குழகர் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

7.008   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு;
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்;
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

7.020   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

7.063   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி;
வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார்
அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற,
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

7.069   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சொல்ல(அ)ரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு,
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு, அருளிய இறைவனே! என்றும்
நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே! நரை விடை ஏறீ!
பல் கலைப் பொருளே! படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

7.073   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்;
கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

8.103   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்

8.149   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே?
துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே?
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பரா பரம் ஆகாதே?
பண்டு அறியாத பர அனுபவங்கள் பரந்து எழும் ஆகாதே?
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே?
விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப் பொருள் ஆகாதே?
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே?
இந்து சிகாமணி எங்களை ஆள, எழுந்தருளப் பெறிலே!

9.029   9 st/nd Thirumurai   Song # 4   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
   தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
   சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
   விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

10.401   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவாள் நயந்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

10.409   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

10.732   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.

11.006   11 st/nd Thirumurai   Song # 42   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண் திணிந்த
கல்லாம் நினையா மனம் வணங்
காத்தலை யும்பொறையும்
அல்லா அவயவந் தானும்
மனிதர்க் கசேதனமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 1   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

11.023   11 st/nd Thirumurai   Song # 40   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் சொல்லாய
வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.

11.033   11 st/nd Thirumurai   Song # 3   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்தர்
பின்னுமை கோனருளால்
வில்லை புரைநுத லாளோ
டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.

12.000   12 st/nd Thirumurai   Song # 210   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
சொல்லார்தமி ழிசைபாடிய
தொண்டன்தனை இன்னும்
பல்லாறுல கினில்நம்புகழ்
பாடென்றுறு பரிவின்
நல்லார்வெண்ணெய் நல்லூரருட்
டுறைமேவிய நம்பன்
எல்லாவுல குய்யப்புரம்
எய்தானருள் செய்தான்.
12.030   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சொல்லுவ தறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ்
சேவடி போற்றி யென்ன.
12.190   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
சொல்லும் எல்லையின் புறத்தன
துணர்ச்சுரும் பலைக்கும்
பல்பெ ரும்புனல் கானியா
றிடையிடை பரந்து
கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேல்
படர்ந்தபூம் பந்தர்
முல்லை மென்புதல் முயலுகைத்
தடங்குநீள் முல்லை.
12.280   12 st/nd Thirumurai   Song # 578   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும்
தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர்
எல்லையில்லா வகைஅரஎன் றெடுத்த ஓசை
இருவிசும்பும் திசையெட்டும் நிறைந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல்
உம்பர்நாட் டப்புறத்தும் உற்ற தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 945   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சொல்லின் பெருவேந்தர்
தொண்டைவள நாடெய்தி
12.510   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list