1.069
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல் ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும் ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண் ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
|
2.060
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.
|
5.026
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்; தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.
|
5.037
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்; ஊனை வேவ உருக்கிய ஆனையார்; வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே, கான ஆனைகண்டீர்-கடவூரரே.
|
5.091
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்; ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்; ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு, ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.
|
8.109
8 st/nd Thirumurai
Song # 15
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத்
தேனை, பழச் சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை, பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத் தழும்பு ஏற வாழ்த்தி,
பானல் தடம் கண் மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
|
8.146
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்;
மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்;
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்;
வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.
|
10.100
10 st/nd Thirumurai
Song # 21
திருமூலர்
திருமந்திரம்
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
|
10.116
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
|
10.223
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வா ரவன்வயம் போன போழுதே புகுஞ்சிவ போகமே.
|
10.223
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர் சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 24,
|
10.502
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறையீறும் கோனொடு தன்னையும் காணும் குணத்தனே. 3,
|
10.508
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
|
10.508
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள் யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
|
10.508
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம் மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும் தானிக் குலத்தோர் சரியை கிரியையே.
|
10.508
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.
|
10.508
10 st/nd Thirumurai
Song # 10
திருமூலர்
திருமந்திரம்
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேகமே நற்குரு பாதமே. 9,
|
10.608
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால் ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
|
10.611
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர் ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல் ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.
|
10.611
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம் தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.
|
10.611
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம் மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே
|
10.801
10 st/nd Thirumurai
Song # 15
திருமூலர்
திருமந்திரம்
ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ் ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும் மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
|
10.813
10 st/nd Thirumurai
Song # 29
திருமூலர்
திருமந்திரம்
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால் மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.
|
10.917
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல் ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.
|
11.004
11 st/nd Thirumurai
Song # 26
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு.
|
11.008
11 st/nd Thirumurai
Song # 12
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்
|
11.024
11 st/nd Thirumurai
Song # 17
இளம்பெருமான் அடிகள்
சிவபெருமான் திருமும்மணிக்கோவை
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம் ஈன்ற நிலவோடும் இவ்வருவான் மூன்றியங்கு மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ மீதூரக் கண்சிவந்த வேந்து.
|
11.033
11 st/nd Thirumurai
Song # 87
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
ஞானவா ரூரரைச் சேரரை யல்லது நாமறியோம் மானவ வாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக் கோனவன் கோயில் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே.
|
11.036
11 st/nd Thirumurai
Song # 12
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஞானந் திரளையி லேயுண் டனையென்று நாடறியச் சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப் பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.
|
11.037
11 st/nd Thirumurai
Song # 64
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
|
12.010
12 st/nd Thirumurai
Song # 7
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்.
|
12.120
12 st/nd Thirumurai
Song # 28
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
ஞானச்செய் தவரடிமேற்
பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார்
மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து
வருமவரைப் பணிவித்தார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 197
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 244
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 382
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 672
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 728
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 760
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 1166
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 1247
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.
|
12.690
12 st/nd Thirumurai
Song # 11
சேக்கிழார்
மன்னிய சீர்ச் சருக்கம்
ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.
|