சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தட
தடுக்கு     தடுக்கால்     தடுக்கை     தட     தடம்     தட்டை     தடவரை     தட்டு     தட்டான்     தட்டத்து     தடப்பாற்     தட்டழி     தடங்குடைந்த     தடுத்துமுன்     தடமெங்கும்     தடநிலைக்     தடுக்க     தடநிலைமா     தடுமாறும்     தடுமாறு     தட்டொடு     தடுக்கினை     தடக்கையால்     தடுக்கவும்     தடக்கை     தடுத்திலேன்,     தடுத்தானை,     தடுத்தானைத்     தடவரைகள்     தடங்கையால்    
1.007   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.013   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்;
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.

1.017   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார்,
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்,
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல்
இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

1.020   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

1.032   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

1.062   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!
நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.

1.069   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

1.100   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன்,
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி,
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

1.115   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன்,
பட அரவு ஆட்டிய படர் சடையன்,
நடம் அது ஆடலான், நால்மறைக்கும்
இடமவன், இராமன் நந்தீச்சுரமே.

1.121   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,
படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.

1.126   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா,
தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்;
இட்டத்தால், அத்தம்தான் இது அன்று; அது என்று நின்றவர்க்கு
ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்;
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம்
கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல்
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

2.020   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்
சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில்
அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.

2.099   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்,
பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை;
விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே!

2.119   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர், சாக்கியர்,
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும்! வெள்ளில் அம்காட்டு
இடை
நட்டிருள்கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்,
மட்டு இருக்கும் மலர் இட்டு, அடி வீழ்வது வாய்மையே.

2.122   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு, சாக்கியர்,
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வான் உளோர்,
அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே.

3.032   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர்
பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்;
மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும்,
இடம் உடைச் சடையினன்-ஏடகத்து இறைவனே.

3.073   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி, உடல் கவசர், கத்து மொழி காதல் செய்திடாது, கமழ் சேர்
மடைக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த, வினை பற்று அறுதலே.

4.014   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல் வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

4.025   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து
அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.

4.034   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்! என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.

4.039   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.

4.052   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்;
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!

4.069   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற
அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!

6.067   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற; தன் அடைந்த மாணிக்கு அன்று அருள் செய்தானை;
உடுத்தானை, புலி அதளோடு அக்கும் பாம்பும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை;
மடுத்தானை, அரு நஞ்சம் மிடற்றுள்-தங்க; வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி
கெடுத்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

6.069   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடுத்தானைத் தான் முனிந்து தன் தோள் கொட்டித்   தடவரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி, எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு,
கொடுத்தானை, பேரோடும் கூர்வாள் தன்னை; குரை கழலால் கூற்றுவனை மாள, அன்று,
படுத்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.083   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தடவரைகள் ஏழும் ஆய், காற்றும் ஆய், தீ ஆய், தண் விசும்பு ஆய், தண் விசும்பின் உச்சி ஆகி,
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி, காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி,
குடமுழவச் சதிவழியே அனல் கை ஏந்திக் கூத்து ஆட வல்ல குழகன் ஆகி,
பட அரவு ஒன்று அது ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

7.044   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை,
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை;
சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை,
வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!

7.057   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தடங்கையால் மலர் தூய்த் தொழுவாரைத் தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை,
படம் கொள் நாகம்(ம்) அரை ஆர்த்து உகந்தானை, பல் இல் வெள்ளைத் தலை ஊண் உடையானை,
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை, நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை,
மடந்தை பாகனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

10.924   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

10.924   10 st/nd Thirumurai   Song # 38   திருமூலர்   திருமந்திரம்  
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

11.007   11 st/nd Thirumurai   Song # 15   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியின் வெருவும்
இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனஅல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.

11.008   11 st/nd Thirumurai   Song # 45   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும்

11.010   11 st/nd Thirumurai   Song # 45   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.

12.000   12 st/nd Thirumurai   Song # 241   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு
தனிப்பெருந் தாண்டவம் புரிய
எடுத்தசே வடியா ரருளினால் தரளம்
எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில்
வருகநம் பாலென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதம்
கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 627   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தடமெங்கும் புனல்குடையும்
தையலார் தொய்யில்நிறம்
இடமெங்கும் அந்தணர்கள்
ஓதுகிடை யாகநிலை
மடமெங்கும் தொண்டர்குழாம்
மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கும் ஒலியோவா
நற்பதிகள் அவைகடந்து.
12.290   12 st/nd Thirumurai   Song # 105   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தடநிலைக் கோபு ரத்தைத்
தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப்
போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை நஞ்சி
யிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித்
தொழுதுகை சுமந்து நின்று.
12.290   12 st/nd Thirumurai   Song # 196   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளா லேறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தடநிலைமா ளிகைப்புலியூர்
தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா
ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி
மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத
காவிரியின் கரையணைந்தார்.
12.500   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list