சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தண்
தண்     தண்டு     தண்புனலும்     தண்ணம்புனல்     தண்கடல்     தண்டுடன்     தண்மதி     தண்டறு     தண்ணறுஞ்     தண்ணங்     தண்ணார்     தண்டலை     தண்டுபே     தண்டமிழ்     தண்டரள     தண்டிரு     தண்மலர்     தண்காஞ்சி     தண்பு     தண்ட     தண்சுடர்ப்     தண்டகமாந்     தண்ணிலவார்     தண்டி     தண்டாத     தண்புனல்     தண்வயல்     தண்மதியும்     தண்பொழில்     தண்டும்     தண்புனலும்(ம்)     தண்டொடு     தண்மதிக்கண்ணியினானைத்     தண்மையொடு     தண்டி,     தண்டம்    
1.007   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும்
நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.043   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து
கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

1.049   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

1.086   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன்,
நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை,
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.

1.101   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

2.013   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

2.045   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை,
பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்,
விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே.

2.047   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்,
கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள்
கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

2.048   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

2.048   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

2.061   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண் முத்து அரும்பத் தடம் மூன்று உடையான் தனை
உன்னி,
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப, உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும்
வெண்காடே.

2.068   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

2.070   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே.

2.094   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார்; கோலமும் பல பல உடையார்;
கண்டு கோடலும் அரியார்; காட்சியும் அரியது; ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

3.027   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண் நுதலவன் அடி, கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.

3.060   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.

3.062   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.

3.102   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
எதிர்கொளவே.

3.103   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து
உடையானை,
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல் ஊன்றி,
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம்போலும்
வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர
நன்நகரே.

3.106   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்டொடு சூலம் தழைய ஏந்தி, தையல் ஒருபாகம்
கண்டு, இடு பெய் பலி பேணி நாணார், கரியின் உரி-தோலர்,
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத்
தொடர்வோமே.

4.003   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

5.007   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,-
செண்டு அது ஆடிய தேவரகண்டனை,
கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க்
கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!

6.052   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம் புள்பாகற்கு அருள்செய்தான் காண்;
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன்   உடல் வேவித்த கண்ணினான் காண்;
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்;
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

6.093   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தண்டி, குண்டோதரன், பிங்கிருடி, சார்ந்த புகழ் நந்தி, சங்கு  கன்னன்,
பண்டை உலகம் படைத்தான் தானும், பாரை அளந்தான், பல்லாண்டு இசைப்ப;
திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம்-சில பாட; செங்கண் விடை ஒன்று ஊர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில், கடுக நும் வல்வினையைக் கழற்றல் ஆமே.

6.093   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தண் காட்ட, சந்தனமும் தவள நீறும்; தழை அணுகும் குறுங் கொன்றை மாலை சூடி;
கண் காட்டா, கருவரை போல்-அனைய காஞ்சிக் கார் மயில் அம் சாயலார் கலந்து காண;
எண் காட்டாக் காடு அங்கு இடமா நின்று(வ்) எரி வீசி; இரவு ஆடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீர் ஆகில், வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே.

7.001   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7.010   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண்டம் உடைத் தருமன் தமர் என்தமரைச் செயும் வன் துயர் தீர்க்கும் இடம்;
பிண்டம் உடைப் பிறவித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்;
கண்டம் உடைக் கரு நஞ்சு கரந்த பிரானது இடம்; கடல் ஏழு கடந்து
அண்டம் உடைப் பெருமானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

7.016   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண் கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில்-தடம் கொள் பெருங் கோயில்தனில்,-தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன் நாள் வழிபாடு செய்ய, மகிழ்ந்து அருளி இருந்த பரன்   மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்,
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு, கலய நல்லூர் காணே .

7.016   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன், தாமரையோன் தலை கலனாக்   காமரம் முன் பாடி
உண் பலி கொண்டு உழல் பரமன், உறையும் ஊர், நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலய நல்லூர் அதனை,
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன், நாவலர் கோன், ஆரூரன் நாவின்  நயந்து உரை செய்
பண் பயிலும் பத்தும் இவை பத்தி செய்து நித்தம் பாட வல்லார், அல்லலொடு பாவம் இலர்,  தாமே .

7.082   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,-
திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்-
தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே.

7.086   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு
எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்
பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர்
பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே!

7.098   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி,
பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப
நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

10.205   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
கண்மதி வீழ்வள விற்கண மின்றே.

10.713   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 122   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள்

11.008   11 st/nd Thirumurai   Song # 183   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த

11.032   11 st/nd Thirumurai   Song # 12   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னின் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் னுடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள் கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோவெனக் கிப்பிறப்பே.

11.033   11 st/nd Thirumurai   Song # 39   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தகுகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநல் நீற்ற னடியவர்க்
கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.

11.037   11 st/nd Thirumurai   Song # 113   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்

11.038   11 st/nd Thirumurai   Song # 62   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
தண்டமிழ் விரகன்
  சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன்
  பரசமய கோளரி
என்புனை தமிழ்கொண்
  டிரங்கிஎன் னுள்ளத்
தன்பினை அருளிய
  ஆண்டகை தன்புகழ்
குறைவறுத் துள்கி
  நிறைகடை குறுகி (35)

12.000   12 st/nd Thirumurai   Song # 275   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தண்டரள மணித்தோடும்  
தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடுங் கண்வியப்பக்
கிளரொளிப்பூ ணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால் 
அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப்
பரவையா ருங்கண்டார்.
12.020   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
தண்டிரு தலையும் பற்றிப்
புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட
வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக்
கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி
மூழ்கினார் பழுதி லாதார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தண்மலர் அலங்கல் தாதை
தாய்மனங் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில்
புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுதம் ஊறி
ஒழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் பவளச் செவ்வாய்
குதட்டியே வளரா நின்றார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 86   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல்
சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப்
பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும்
திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழுங்கிடங்கு திருமறைக ள் ஒலிக்குந் தெய்வ
வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க
வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தால் மானும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 117   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 385   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்பு னற்குறிர் கால்நறுஞ்
சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென்
மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி
முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை
உலகுளோர் விரும்ப.
12.280   12 st/nd Thirumurai   Song # 960   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்ட கத்திரு நாட்டினைச்
சார்ந்துவந்து எம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவதென்
றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந்
தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத்
தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1211   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்சுடர்ப் பரிய முத்துத்
தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக்
கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை
விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு
வனப்பொளி வளரச் சாத்தி.
12.290   12 st/nd Thirumurai   Song # 172   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்டகமாந் திருநாட்டுத்
தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டணையத்
தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை
வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக்
கழுக்குன்றை யெய்தினார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்ணிலவார் சடையார்தாம்
தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணியஅத் திருவருளால்
அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார்
ஈசர்அரு ளெனவுணர்ந்தார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்டி யடிகள் திருவாரூர்ப்
பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
பிறந்த பொழுதே கண்காணார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்டி நமக்குக் குளங்கல்லக்
கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க
வெகுண்டான் அவன்பால் நீமேவிக்
கொண்ட குறிப்பால் அவன்கருத்தை
முடிப்பா யென்று கொளவருளித்
தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்
தருளி னார்அத் தொழிலுவப்பார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தண்டி யடிகள் தம்முடனே
ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர்
நின்றும் அகன்று போய்க்கழியக்
கண்ட அமணர் தமையெங்கும்
12.360   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org