சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தம்
தம்     தம்மைப்     தம்பிரா     தம்பெருமான்     தம்பிரான்     தம்மை     தம்பியார்     தம்புதல்வன்     தம்மையே     தம்பி     தம்ம     தம்மானை     தம்பானை    
1.081   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்
கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.

2.051   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தம் பலம்(ம்) அறியாதவர் மதில் தாங்கு மால்வரையால் அழல் எழத்
திண்பலம் கெடுத்தாய்! திகழ்கின்ற திருக்களருள
வம்பு அலர் மலர் தூவி, நின் அடி வானவர் தொழ, கூத்து உகந்து பே
ரம்பலத்து உறைவாய்! அடைந்தார்க்கு அருளாயே!

4.079   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!

7.008   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண்
அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்,
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே .

7.034   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

7.038   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை  கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால்  வாழ்கின்ற அறிவு இலா நாயேன்-
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல்  யானே! .

9.021   9 st/nd Thirumurai   Song # 2   வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
தம்பானை சாய்ப்பற்றார் என்னும்
   முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே
   அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன்
   தொழில்இறையும்
நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 

11.029   11 st/nd Thirumurai   Song # 25   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.

12.000   12 st/nd Thirumurai   Song # 139   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தம்பிரா னருளி னாலே
தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பியா ரூர ரென்றே
நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படைச் சதங்கை சாத்தி
அணிமணிச் சுட்டி சாத்திச்
செம்பொன்நாண் அரையில் மின்னத்
தெருவில்தேர் உருட்டு நாளில்.
12.000   12 st/nd Thirumurai   Song # 252   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தம்பிரா னருள்செய்யத்
திருத்தொண்ட ரதுசாற்றி
எம்பிரா னார்அருள்தான்
இருந்தபரி சிதுவானால்
நம்பிரா னாராவார்
அவரன்றே யெனுநலத்தால்
உம்பர்நா டிழிந்ததென
எதிர்கொள்ள வுடனெழுந்தார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 331   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தம்பெருமான் கொடுத்தமொழி
முதலாகத் தமிழ்மாலைச்
செம்பொருளால் திருத்தொண்டத்
தொகையான திருப்பதிகம்
உம்பர்பிரான் தானருளும்
உணர்வுபெற உலகேத்த
எம்பெருமான் வன்றொண்டர்
பாடியவ ரெதிர்பணிந்தார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 54   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தம்பிரான் பணிமேற் கொண்டு
சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தம்பெருமான் சாத்தும்
திருநீற்றுச் சார்புடைய
எம்பெருமான் ஏனாதி
நாதர் கழலிறைஞ்சி
உம்பர்பிரான் காளத்தி
உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம்பெருமான் செய்தபணி
நாம்தெரிந்த வாறுரைப்பாம்.
12.180   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தம்பெருமான் பணிகேட்ட
தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில்
முன்பச்ச முடன்ஈண்டி
எம்பெருமான் அருள்செய்த
பணிசெய்வோம் என்றேத்தித்
தம்பரிவு பெருகவருந்
திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தம்பியார் உளராக
வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு
நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்கா
தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து
திலகவதி யாரிருந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 207   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தம்புதல்வன் சவம்மறைத்துத்
தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய
வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர்பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர்திரு வருளாலே
அறிந்தருளி நவைதீர்ப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 326   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பெருமான் கோயிலினுள்
எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு
தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த
இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக்
கோநகரில் இனிதமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 565   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையார் இளவேறு தாமு ணர்ந்து
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
நாவினிசை யரசரொடுங் கூட நண்ணி
வம்புலா மலரிதழி வீழி நாதர்
மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதியருளால் பிள்ளை யார்தாம்
அபிமுகத்துப் பீடிகைமேற் காசு கண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 830   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1035   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பிரான் அருள்போற்றித்
தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரா லுணர்வரிய
திருப்பாதந் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப்
பிறபதியுந் தொழுதுபோய்
நம்பரா ரூரணைந்தார்
நாவலூர் நாவலனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 249   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பிரான் தோழரவர்
தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற்
குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி
நாஞ்செய்தும் என்றருள
எம்பிரா னேயரிய
தினியெனக்கென் னெனவேத்தி.
12.290   12 st/nd Thirumurai   Song # 325   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பி ரானார் எழுந்தருளத்
தாங்கற் கரிய மகிழ்ச்சியினால்
கம்பி யாநின் றவயவங்கள்
கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரரும்எதிரே
நளின மலர்க்கை தலைகுவிய
அம்பி காவல் லவர்செய்ய
அடித்தா மரையின் கீழ்வீழ்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 356   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பிரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி
நாம்இன்னம் அவள்பாற் போய்அக்
கொம்பினை இப்போ தேநீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங் கென்றார்
வினையெலாம் விளைக்க வல்லார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 375   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்பிரா னார்பின் சென்று
12.360   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.
12.370   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தம்பி ரானார் கோயில்வலங்
கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க
நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர்
வண்ணான் முன்னே வரக்கண்டார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தம்பி ரானார்க் கெதிர்நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும்
ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி
தாமும் எதிரே கேட்பித்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 129   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தம்பி ரானைத் தொழுதருளால்
போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர்
நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற்
றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர்
தொழுது மேல்பாற் செல்கின்றார்.
12.430   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
தம்ம றம்புரி மரபினில்
தகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி அதிபத்தர்
விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கள்
முறைமையிற் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர்
திருத்தொண்டு பகர்வாம்.
12.700   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
தம்பி ரானைத் தோழமைகொண்
டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது
செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான்
பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார்
ஞாலம் எல்லாம் குடிவாழ

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list