சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தம்மை
தம்மைப்     தம்மை     தம்மையே    
7.034   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

11.029   11 st/nd Thirumurai   Song # 25   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.

12.200   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 830   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1035   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்.

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org