சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தாம
தாமரைமேல்     தாமறி     தாமிடர்ப்     தாமக்     தாமேல்     தாமத     தாமரைநூல்     தாமுடி     தாமமே     தாமரை     தாம்பட்டது     தாமரையின்     தாமரைக்     தாமரைசேர்     தாம்என்ன     தாமேய     தாமரைநகு     தாம     தாம்     தாமரையான்     தாமே    
1.108   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்-தேடி,
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்;
பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே.

2.040   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக்
காம்! என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும்
கருணையினான்
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

3.013   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாம் முகம் ஆக்கிய அசுரர்தம் பதி
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்,
பூமகன், அறிகிலா பூந்தராய் நகர்க்
கோமகன், எழில் பெறும் அரிவை கூறரே.

3.033   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி;
காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்;
சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே.

4.019   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி,
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.

6.039   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்; தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்;
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப் பொருள் ஆகி நின்றான் கண்டாய்;
ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்;
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

7.047   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே!
நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே!
பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!

8.145   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,
கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,
போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.

8.216   8 st/nd Thirumurai   Song # 35   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தாமே தமக்கொப்பு மற்றில்
   லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
   பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
   கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
   யேன்பெற்ற அம்மனைக்கே.

10.119   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

10.225   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே. 

10.406   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.

10.407   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

10.826   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
தாமத காமிய மாதி தகுகுணம்
ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே. 27,

10.834   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.

10.915   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 70   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள்

11.008   11 st/nd Thirumurai   Song # 87   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு

11.009   11 st/nd Thirumurai   Song # 85   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.

11.010   11 st/nd Thirumurai   Song # 46   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.

11.021   11 st/nd Thirumurai   Song # 6   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.

11.022   11 st/nd Thirumurai   Song # 78   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சாடமகுடர் தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.

11.023   11 st/nd Thirumurai   Song # 34   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில்
தாம்என்னை வேறாத் தனித்திருந்து தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.

11.023   11 st/nd Thirumurai   Song # 52   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய ஆறு தழைக்கின்றார் தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்காரர் என்பார்.

11.036   11 st/nd Thirumurai   Song # 15   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.

11.040   11 st/nd Thirumurai   Song # 8   நம்பியாண்டார் நம்பி   திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை  
தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன தாயினும் நல கருணையை யுடையன
தூமதியினை யொருபது கொடுசெய்த சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன தோமறுகுண நிலையின தலையின
ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன ஊறியகசி வொடுகவி செய்த புகழ்
ஆமரசுய ரகம்நெகு மவருளன் ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு தாளரசுத னடியிணை மலர்களே.

12.430   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
தாம நித்திலக் கோவைகள்
சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழல் மாதர்பந்
தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக்
கருங்கடல் முகந்த
மாமு கிற்குலம் மலையென
ஏறுவ மருங்கு.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list