சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் திரும
திருமால்     திருமன்னும்     திருமார்பில்     திருமாலும்     திருமதியம்     திருமிகு     திருமக     திருமலையின்     திருமகட்கு     திருமேனி     திருமறையோர்     திருமறைநூல்     திருமறை     திருமலி     திருமறைச்     திருமருகல்     திருமறைக்     திரும     திருமடஞ்     திருமுகங்     திருமாற்பே     திருமணஞ்செய்     திருமகட்     திருமா     திருமஞ்     திருமுருகன்     திருமலிசெல்     திருமலியும்     திருமகள்     திருமகட்குச்     திருமணியை,     திருமகன்    
1.084   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த,
பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச்
செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த
கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.

1.087   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய
பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

2.069   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருமகள் காதலினானும், திகழ்தரு மா மலர் மேலைப்
பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர் அழல் ஆகிய
பெம்மான்
மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரி மாடே
பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடு முடியாரே.

6.006   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி;
பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்)
அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி;
 உரு என்று உணரப்படாத(வ்)அடி;
திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

6.029   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை, பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

8.111   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை,
உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்;
ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு,| ஆயிரம்
திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.223   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
திருமா லறியாச் செறிகழல்
   தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
   போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
   திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
   தோன்றுநம் பொன்னகர்க்கே.

9.015   9 st/nd Thirumurai   Song # 5   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
   திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
   மலையுடை யரையர்தம் பாவை
தருமனை வளனாம் சிவபுரன் தோழன்
   தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

10.511   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே. 12,

11.004   11 st/nd Thirumurai   Song # 48   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
தது மதியொன் றில்லா அரா.

11.008   11 st/nd Thirumurai   Song # 1   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்

11.008   11 st/nd Thirumurai   Song # 118   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய

11.016   11 st/nd Thirumurai   Song # 12   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் குருமாற

12.000   12 st/nd Thirumurai   Song # 198   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
திருமிகு மறையோர் நின்ற
செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும்
ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியே யாகப்
பேசிய துமக்கிவ் வூரில்
வருமுறை மனையு நீடு
வாழ்க்கையுங் காட்டு கென்றார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 142   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
திருமலையின் புறம்போன
திண்ணனார் செறிதுறுகல்
பெருமலைக ளிடைச்சரிவில்
பெரும்பன்றி புனம்மேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து
மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை
ஒளிநின்று கொன்றருளி.
12.120   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
திருமகட்கு மேல்விளங்குஞ்
செம்மணியின் தீபமெனும்
ஒருமகளை மண்ணுலகில்
ஓங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார்
தமராய கழல்ஏயர்
பெருமகற்கு மகட்பேச
வந்தணைந்தார் பெருமுதியோர்.
12.190   12 st/nd Thirumurai   Song # 117   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
திருமேனி வெண்ணீறு
திகழ்ந்தொளிருங் கோலத்துக்
கருமேக மெனஅழுக்குக்
கந்தையுடன் எழுந்தருளி
வருமேனி அருந்தவரைக்
கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண்
டுருமேவும் மயிர்ப்புளகம்
உளவாகப் பணிந்தெழுந்தார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 65   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான்
தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங்
கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை
அளித்தருள அருள்செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 119   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமறை யோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப்
பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப்
பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 243   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 285   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமறைச் சண்பைய ராளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி
உயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால்
குடதிசை நோக்கி வருவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 472   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமருகல் நகரின்கண் எழுந்தருளித்
திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க
வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
உருகியஅன் புறுகாத லுள்ளலைப்பத்
தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசார்த்தி அங்கிருந்தார்
பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 568   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுதமைப்போர் செப்பு வார்கள்
ஒருபரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியஎல் லாங்கொள்ள வேண்டிச் சென்றால்
காசுதனை வாசிபட வேண்டும் என்பார்
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வரிது பிற்பா டென்றார்..
12.280   12 st/nd Thirumurai   Song # 592   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமறை நம்பர் தாமுன்
பருள்செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர்
தம்பிரா னார்பால் ஒக்க
வரும்அருட் செய்கை தாமே
வகுத்திட வல்லோ ரென்றால்
பெருமறை யுடன்மெய்த் தொண்டர்க்
கிடையீடு பெரிதா மன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 609   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமறைக் காடு நண்ணிச்
சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம்
அமர்ந்தினி தருளுஞ் செல்வப்
பெருமடத் தணைய வந்து
பெருகிய விருப்பில் தாங்கள்
வருமுறைத் தன்மை எல்லாம்
வாயில்கா வலர்க்குச் சொன்னார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 701   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திரும டப்புறச் சுற்றினில்
தீயபா தகத்தோர்
மருவு வித்தஅத் தொழில்வெளிப்
படுதலும் மறுகிப்
பரிச னத்தவர் பதைப்பொடும்
சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை
தெளிந்துசென் றணைவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 726   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமடஞ் சாரச் சென்று
சேயரிக் கண்ணி னார்முன்
வருபரி இழிந்து நின்ற
அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளை யார்க்கு
விண்ணப்பஞ் செய்வீர் என்னப்
பரிசனத் தவரும் புக்குப்
பதமறிந் துணர்த்து கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 770   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமுகங் கருணை காட்டத்
திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கு மாற்றால்
பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண்
ஒழிந்துவெப் பகன்று பாகம்
மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும்
முழுதும் உய்ந்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1003   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமாற்பே றுடையவர்தம்
திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க்
காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார்
திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப்
பெரும்பிணையல் அணிவித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1169   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமணஞ்செய் கலியாணத்
திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித
மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை
பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில்
அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1231   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருமகட் கொடுக்கப் பெற்ற
செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை
அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம்
விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர்
உடனெடுத் தேந்தி வந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
திருமா நகரந் திருவவதா
ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல்
எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத்
தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
12.370   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு
வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி
மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர
ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.
12.370   12 st/nd Thirumurai   Song # 165   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
திருமுருகன் பூண்டிஅயல்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ அதுஅறியோம்.
12.450   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
திருமலிசெல் வத்துழனி
தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியில்
பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால்
எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பில் கூலியினால்
தமதுதிருப் பணிசெய்வார்.
12.470   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
திருமலியும் புகழ்விளங்கச்
சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப்
பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத்
தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க
அரசளிக்கும் அந்நாளில்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list