சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தீ
தீயர்     தீது     தீயினும்     தீயவைத்     தீவினை     தீங்கரும்     தீம்புல     தீண்டற்     தீமுதல்     தீயாடி     தீந்தமிழின்     தீயான     தீங்கு     தீதுகொள்     தீம்பால்     தீயவிடந்     தீந்தமிழ்நாட்     தீவிடம்     தீயுமிழும்     தீர்த்தநீர்     தீ     தீயின்     தீர்த்தம்     தீத்     தீர்த்தனை,     தீரன்;     தீண்டற்கு     தீர்த்தப்புனல்     தீக்     தீர்ந்த     தீர்க்கின்ற     தீமே    
1.051   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!

1.114   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீது இலா மலை எடுத்த அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட,
ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே.

2.002   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

2.068   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

2.077   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர்தாம் தொழும் தேவன்
நீ
ஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்!
அறையணி நல்லூர்,
மேயினார் தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப்
பாயினாய்! அதிர் கழலினாய்! பரமனே! அடி பணிவனே.

2.081   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசை முகன், மால்,
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற(அ)ரிய திருவடியீர்!
பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு,
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே.
2.086   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற,
உற்ற உலகின்
தாய் உறு தன்மை ஆய, தலைவன் தன் நாமம் நிலை ஆக
நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி, கோல விடம்
உண்ட கண்டன், முடிமேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன், மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

3.102   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்;
பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.

4.027   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி,
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்)
ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே.

4.095   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

5.002   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை,
மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை,
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ?

5.012   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய
நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத்
தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்;
வீரன் வீழிமிழலை விகிர்தனே.

5.050   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.

5.059   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீது அவை செய்து தீவினை வீழாதே,
காதல் செய்து கருத்தினில் நின்ற நல்
மா தவர் பயில் மாற்பேறு கைதொழப்
போதுமின்! வினை ஆயின போகுமே.

6.007   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை,
அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், -
ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது,
இன்னம்பர், ஏகம்ப(ம்) மும்,
கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்)
  மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே.

6.037   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா! புராணனே! என்றேன், நானே;
மூவா மதிசூடி! என்றேன், நானே; முதல்வா! முக்கண்ணனே! என்றேன், நானே;
ஏ ஆர் சிலையானே! என்றேன், நானே; இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி,
ஆவா! என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

6.058   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்;
ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல, அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து   இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி,
வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

6.094   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் ஆகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,   நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.

8.105.07   8 st/nd Thirumurai   Song # 69   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி!
பேர்ந்தும், என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி!
வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி!
ஆர்ந்த நின் பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி!

8.106   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

8.115   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை,
சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும்
சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ,
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்!

8.224   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தீமே வியநிருத் தன்திருச்
   சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
   தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
   யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
   தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

10.101   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 

10.211   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே. 12,

10.318   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும் பாமே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே. 

10.516   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 43   திருமூலர்   திருமந்திரம்  
தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.

11.006   11 st/nd Thirumurai   Song # 18   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
தீவினை யேனைநின் றைவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஒவின துள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.

11.008   11 st/nd Thirumurai   Song # 52   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச்

11.008   11 st/nd Thirumurai   Song # 112   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர்

11.023   11 st/nd Thirumurai   Song # 98   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.

12.090   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தீங்கு குறித்தழைத்த
தீயோன் தீருநீறு
தாங்கிய நெற்றியினார்
தங்களையே எவ்விடத்தும்
ஆங்கவருந் தீங்கிழையார்
என்ப தறிந்தானாய்ப்
பாங்கில் திருநீறு
பண்டு பயிலாதான்.
12.140   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தீதுகொள் வினைக்கு வாரோம்
செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காதுகொள் குழைகள் வீசும்
கதிர்நில விருள்கால் சீப்ப
மாதுகொள் புலவி நீக்க
மனையிடை இருகாற் செல்லத்
தூதுகொள் பவராம் நம்மைத்
தொழும்புகொண் டுரிமை கொள்வார்.

12.190   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தீது நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு
நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
12.190   12 st/nd Thirumurai   Song # 73   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தீங்கு தீர்க்குநல் தீர்த்தங்கள் போற்றுஞ்
சிறப்பி னால்திருக் காமக்கோட் டத்தின்
பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும்
பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி
வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ்
வைய கந்தனக் கெய்திய படியாய்
ஓங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்றும்
உள்ள தொன்றுல காணியென் றுளதால்.
12.200   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும்
ஓம தேனுச் செல்வனவும்
தாம்பா டியசா மங்கணிப்போர்
சமிதை யிடக்கொண் டணைவனவும்
பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி
மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம்பான் மையினில் விளங்குவன
அணிநீள் மறுகு பலவுமுள.
12.210   12 st/nd Thirumurai   Song # 206   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தீயவிடந் தலைக்கொள்ளத்
தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினில்நீட்டித்
தளர்ந்துதனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்
விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவரிங் கமுதுசெயத்
தொடங்கார்என் றதுஒளித்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 392   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தீந்தமிழ்நாட் டிடைநின்றும்
எழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு
வந்தணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர்இருந் தமைகேட்டு
விரைந்தவர்பால் செல்வன்எனப்
பூந்துருத்தி வளம்பதியின்
புறம்பணையில் வந்தணைந்தார்.

12.250   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தீவிடம் நீங்க உய்ந்த
திருமறை யவர்தஞ் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி
விரைந்தெழு வானைப் போன்று
சேவுகைத் தவர்ஆட் கொண்ட
திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு
புனிதநீ றளித்தார் அன்றே.
12.460   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.
12.500   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
தீயுமிழும் படைவழங்கும்
செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக்
குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள்
பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய
உணவளித்த தெனப்பிறங்க.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list