சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தூ
தூசு     தூர்த்தனைச்     தூ     தூங்கிக்கண்     தூரத்திற்     தூங்கவல்     தூரறி     தூம்பு     தூய     தூநெறி     தூய்மணி     தூயது     தூலப்     தூறு     தூவெண்     தூமதி     தூநறும்     தூமலர்ப்     தூரத்தே     தூரியத்     தூண்டு     தூண்டுதவ     தூயவெண்     தூங்கானை     தூயநற்     தூமணிமா     தூதரைப்     தூமலர்ச்     தூயதிரு     தூபியும்     தூநறு     தூயானை,     தூவி     தூயவன்,     தூர்த்தன்     தூவிய     தூணி     தூங்கான்;     தூண்டிய(ச்)     தூர்த்தனைத்     தூயவன்     தூயவர்,     தூண்டா     தூர்த்தர்    
1.055   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்
நீசர்தம் உரை கொள்ளேலும்!
தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்
ஈசன் என்று எடுத்து ஏத்துமே!

1.096   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!

1.136   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு
மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்;
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்;
கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்;
பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கன
வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்;
தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்வன் தடங்
கடல் இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே.

2.012   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூயானை, தூய ஆய மறை ஓதிய
வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.

2.053   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர்ப் பொய்கை,
பாவில் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்
மேவி, அந்நிலை ஆய் அரக்கன தோள் அடர்த்து, அவன் பாடல் கேட்டு, அருள்
ஏவிய பெருமான்! என்பவர்க்கு அருளாயே!

2.058   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூசு ஆர்ந்த சாக்கியரும், தூய்மை இல்லாச் சமணரும்,
ஏசு ஆர்ந்த புன்மொழி நீத்து, எழில் கொள் மாடக்
குடவாயில்,
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி
போற்ற,
தேசு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

2.060   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

2.075   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்,
நா நயம் கொள் மறை ஓதி, மாது ஒருபாகமா,
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே.

2.080   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

2.103   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூசு தான் அரைத் தோல் உடை, கண்ணி அம் சுடர்விடு
நறுங்கொன்றை,
பூசு வெண்பொடிப் பூசுவது, அன்றியும், புகழ் புரிந்தவர்
மேய
மாசு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
பேசு நீர்மையர் யாவர், இவ் உலகினில் பெருமையைப்
பெறுவாரே.

3.014   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
பாயவன்-பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய் புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?

3.040   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை,
ஆத்தம் ஆக, ஏத்தினோமே.

3.051   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

3.072   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.

3.072   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.

3.073   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.

3.090   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

3.100   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை,
மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்-
வாய்மையினால்
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.

3.102   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில் உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர் தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!

3.105   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த,
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை, எம்பிரானை, விரும்பி வழிபட்டால்,
ஆவியுள் நீங்கலன்-ஆதிமூர்த்தி, அமரர் பெருமானே.

3.114   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப் பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது கம்பமே.

4.016   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக்
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்,
சேம நெறியினர்; சீரை உடையவர்
பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.

4.089   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல்
வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்;
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே.

4.103   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!

5.052   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே
சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்;
ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே.

5.081   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்;
காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு;
பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக்
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.

6.019   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை,
பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை,
ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.023   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்; தொல் அமரர் சூளா மணிதான் கண்டாய்;
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்;
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்; மெய்ந் நெறி கண்டாய்; விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

6.035   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி, ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள் அவை தாழ, புரி வெண்நூலர்,
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார்,
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி;   வெண்காடு மேவிய விகிர்தனாரே.

6.050   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ் உயிர்க்கும் துணை ஆய் நின்ற
தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை, சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

6.087   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தூயவன் காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண்;
தீ அவன் காண்; தீ அவுணர் புரம் செற்றான் காண்; சிறுமான் கொள் செங்கை எம்பெருமான் தான் காண்;
ஆயவன் காண்; ஆரூரில் அம்மான் தான் காண்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆயினான் காண்;
சேயவன் காண்; சேமநெறி ஆயினான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

7.036   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன ஆடை, சுடலையில்
பேயொடு ஆடலைத் தவிரும்! நீர் ஒரு பித்தரோ? எம்பிரானிரே!
பாயும் நீர்க் கிடங்கு ஆர் கமலமும், பைந் தண் மாதவி, புன்னையும்,
ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!

7.044   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி-
நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள்
கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்-
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?

7.046   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்| தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து,| திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த,| நிறை மறையோர் உறை வீழிமிழலை  தனில் நித்தல்
காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

7.052   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்!
பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே!
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

7.076   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,
தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

7.088   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக! என்று உமை கேட்க, சொல்லினீர்;
தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை
மேய நீர் பலி ஏற்றது என்? என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!

7.096   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்,
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா! என் பரவையுள் மண்டளி அம்மானே!

8.102   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;
அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;
மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;

8.102   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தூ வண மேனி காட்டிய தொன்மையும்;
வாதவூரினில் வந்து, இனிது அருளி,
பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;

8.143   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மயேந்திர நாதன், வந்து
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்று
காதல் பெருக, கருணை காட்டி, தன் கழல் காட்டி, கசிந்து உருக,
கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

9.022   9 st/nd Thirumurai   Song # 11   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
தூவி நீரொடு பூவ வைதொழு
   தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
   தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
   கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
   யான் அடி மேவுவரே.

10.104   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

10.310   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே. 

10.518   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

10.604   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 5,

10.702   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

10.717   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே. 18,

10.833   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.

10.833   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.

10.903   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

10.924   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 95   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் காமன்

11.030   11 st/nd Thirumurai   Song # 6   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது  
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும்

பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நானென நவிற்று மாறே

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாறே
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்

உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருநற் பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுககினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத்

தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க்
காதி ஆகிய அறுதொழி லாளர்
ஓதல் ஒவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித் திருத்திநீ முகப்படு மளவே.

12.000   12 st/nd Thirumurai   Song # 152   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தூநறும் பசுங்கர்ப் பூரச்
சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆனதண் பனிநீர் கூட்டி
யமைத்தசந் தனச்சே றாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த
மங்கலக் கலவை சாத்திப்
பான்மறை முந்நூல் மின்னப்
பவித்திரஞ் சிறந்த கையான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 153   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தூமலர்ப் பிணையல் மாலை
துணரிணர்க் கண்ணி கோதை
தாமமென் றினைய வேறு
தகுதியால் அமையச் சாத்தி
மாமணி யணிந்த தூய
வளரொளி இருள்கால் சீக்கும்
நாமநீள் கலன்கள் சாத்தி
நன்மணக் கோலங் கொண்டான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 330   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தூரத்தே திருக்கூட்டம்
பலமுறையால் தொழுதன்பு
சேரத்தாழ்ந் தெழுந்தருகு
சென்றெய்தி நின்றழியா
வீரத்தா ரெல்லார்க்குந்
தனித்தனிவே றடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத்
தொகைப்பதிக மருள்செய்தார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தூரியத் துவைப்பும் முட்டுஞ்
சுடர்ப்படை ஒலியும் மாவின்
தார்மணி இசைப்பும் வேழ
முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பும்
மிக்கெழுந் தொன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும்
கடலெனக் கலித்த வன்றே.
12.190   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
12.190   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தூண்டு சோதியொன் றெழுந்திருள் துரக்கும்
சுரர்கள் வந்துசூழ் உருத்திர சோலை
வேண்டி னார்கள்தம் பிறப்பினை யொழிக்கும்
மெய்ந்நெ றிக்கண்நின் றார்கள்தாம் விரும்பித்
தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர்
சிலையும் உண்டுரை செய்வதற் கரிதால்
ஆண்ட நாயகி சமயங்க ளாறும்
அகில யோனியும் அளிக்கும்அந் நகரம்.
12.210   12 st/nd Thirumurai   Song # 46   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தூண்டுதவ விளக்கனையார்
சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில்
அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக்
குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும்
விண்ணப்பஞ் செய்தனரால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 140   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே.
12.210   12 st/nd Thirumurai   Song # 154   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தூங்கானை மாடத்துச்
சுடர்க்கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு
செய்துபயின் றமருநாள்
பூங்கானம் மணங்கமழும்
பொருவில்திரு அரத்துறையுந்
தேங்காவின் முகிலுறங்குந்
திருமுதுகுன் றமும்பணிந்து.
12.250   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தூயநற் கறிக ளான
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி
அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு
வாஎன விரைந்து விட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 99   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி
அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி
மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார்
திருத்தோணி நம்பர் கோயில்.
12.290   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 347   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தூதரைப் போக விட்டு
வரவுபார்த் திருந்த தொண்டர்
நாதரைஅறிவி லாதேன்
நன்னுதல் புலவி நீக்கப்
போதரத் தொழுதேன் என்று
புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு
வருவதே கருத்துட் கொள்வார்.
12.320   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.
12.350   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தூமலர்ச் சோலை தோறும்
சுடர்நெடு மாடந் தோறும்
மாமழை முழக்கந் தாழ
மறையொலி முழக்கம் ஓங்கும்
பூமலி மறுகில் இட்ட
புகையகில் தூபந் தாழ
ஓமநல் வேள்விச் சாலை
ஆகுதித் தூப மோங்கும்.
12.360   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 71   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
12.650   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
தூபியும் நட்டு மிக்க
சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு
கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க
விதித்தநாள் சாரும் நாளில்.
12.720   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
தூநறு மலர்தர ளம்பொரி
தூவிமுன் இருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கள் மங்கல
நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை
வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரும் நண்பரும்
மாளிகை நடுவு புகுந்தனர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list