2.012
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தூயானை, தூய ஆய மறை ஓதிய
வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.
|
2.060
2 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
|
2.080
2 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே
|
3.014
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
பாயவன்-பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய் புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?
|
3.072
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
|
3.073
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.
|
6.050
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ் உயிர்க்கும் துணை ஆய் நின்ற தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை, சந்தோக சாமம் ஓதும் வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
|
6.087
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
தூயவன் காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண்; தீ அவன் காண்; தீ அவுணர் புரம் செற்றான் காண்; சிறுமான் கொள் செங்கை எம்பெருமான் தான் காண்; ஆயவன் காண்; ஆரூரில் அம்மான் தான் காண்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆயினான் காண்; சேயவன் காண்; சேமநெறி ஆயினான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
|
7.036
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன ஆடை, சுடலையில் பேயொடு ஆடலைத் தவிரும்! நீர் ஒரு பித்தரோ? எம்பிரானிரே! பாயும் நீர்க் கிடங்கு ஆர் கமலமும், பைந் தண் மாதவி, புன்னையும், ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!
|
7.088
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக! என்று உமை கேட்க, சொல்லினீர்; தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை மேய நீர் பலி ஏற்றது என்? என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!
|
10.702
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
தூய விமானமும் தூலம தாகுமால் ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
|
10.833
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.
|
10.833
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
தூயது வாளாக வைத்தது தூநெறி தூயது வாளாக நாதன் திருநாமம் தூயது வாளாக அட்டமா சித்தியாம் தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.
|
12.190
12 st/nd Thirumurai
Song # 34
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
|
12.210
12 st/nd Thirumurai
Song # 140
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே.
|
12.250
12 st/nd Thirumurai
Song # 23
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
தூயநற் கறிக ளான
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி
அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு
வாஎன விரைந்து விட்டார்.
|
12.290
12 st/nd Thirumurai
Song # 34
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
|
12.320
12 st/nd Thirumurai
Song # 4
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.
|
12.360
12 st/nd Thirumurai
Song # 14
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
|
12.360
12 st/nd Thirumurai
Song # 71
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
|