சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தே
தேவி     தேமாங்கனி     தேர்     தேனை     தேக்கும்     தேவராயும்,     தேடிக்     தேனும்     தேனினும்     தேம்     தேன்     தேரர்     தேவா!     தேய     தே     தேவர்     தேற்றத்     தேய்ந்தற்     தேடுந்     தேர்ந்தெழு     தேர்ந்த     தேவனும்     தேர்ந்தறி     தேவர்கள்     தேசு     தேடுகின்     தேடும்     தேசார்     தேறாத     தேட்டறும்     தேவரொ     தேவனு     தேனமருங்     தேவாதி     தேன்பலவின்     தேன்மருவு     தேய்த்ததுவே     தேவனைப்     தேரோன்     தேடுற்     தேறும்     தேம்புனமே     தேமலி     தேய்ந்துடல்     தேசம்     தேடிய     தேம     தேனார்க்கு     தேராரும்     தேனாருந்     தேவுமால்     தேனக்க     தேனி     தேவ     தேரொலிக்க     தேவர்தொழுந்     தேம்பொழில்சூழ்     தேனலருங்     தேவர்பிரா     தேமருவு     தேவர்தந்     தேவியார்     தேன்நிலவு     தேவர்பிரான்     தேற்ற     தேவரும்     தேவர்பெரு     தேனார்ந்த     தேனிலவு     தேவா     தேவர்,     தேய்ந்து     தேவரும்(ம்),     தேடித்தான்,     தேம்பல்     தேரரும்,     தேவியை     தேடினார்,     தேற்றம்     தேயும்     தேரரோடு     தேசனை;     தேய்     தேயன     தேசனை,     தேரையும்     தேற்றப்படத்     தேடிச்     தேய்ந்த     தேனப்     தேடுவார்,     தேனை,     தேசர்;     தேரூரார்;     தேங்கூரும்,     தேசனூர்,     தேவி,     தேடுவன்     தேனைக்     தேவூர்த்     தேக்கிடச்     தேரை     தேவரிற்     தேமென்     தேமாம்     தேன்றிக்     தேன்வண்     தேவியங்     தேர்மலி    
Search limited to first 100
1.008   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப்
பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.010   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

1.017   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து,
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த,
ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.024   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

1.032   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

1.053   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

1.065   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர,
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

1.069   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, கொள்ள வம்மின்! என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

1.076   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு
நீர் உடன் வாயு ஆம் தெரியில்
வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்கு
அசைத்து உழிதரு மைந்தன்-
கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர்
கல் கடுஞ்சாரல்
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

1.077   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம்
திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர்,
ஒன்று அலாது ஊரார்,
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர்
வடிவினை உடையார்,
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.078   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு
  சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்;
வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன
  மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

1.083   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,
வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

1.090   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

1.093   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே!

1.097   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும்,
காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

1.098   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

1.103   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-
தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

1.103   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே
பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

1.115   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் மலர்க் கொன்றை யோன்........

1.123   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

1.136   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தே மரு வார்குழல் அன்னநடைப் பெடைமான் விழித்
திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய,
தூ மரு செஞ்சடையில்-துதை வெண்மதி, துன்று கொன்றை,
தொல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல் உடையர்
கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம்
கடல் அடை கழி இழிய, முண்டகத்து அயலே,
தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர் மலர்
வெறி கமழ் செறி வயல்- தருமபுரம்பதியே.

2.002   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

2.005   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்!
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல்
ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.

2.009   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்
பால்நெய் அஞ்சு உடன் ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.

2.010   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள
வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.

2.028   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்,
காவலார் கருவூருள் ஆன்நிலை,
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!

2.045   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு
உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு
அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே.

2.060   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

2.064   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

2.078   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல் உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர்
என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே.

2.085   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

2.093   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால்
ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக்
கருதும்
வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

2.096   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவர் தானவர் பரந்து, திண் வரை மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ! என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.

3.002   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன
கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை
ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.

3.008   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேரரும், மாசு கொள் மேனியாரும், தெளியாதது ஓர்
ஆர் அருஞ்சொல் பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்;
கார் இளங் கொன்றை வெண்திங்களானும் கடவூர்தனுள்
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே?

3.010   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

3.016   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேடினார், அயன் முடி, மாலும் சேவடி;
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்;
பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே.

3.035   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.

3.052   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும்
போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா
கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே?

3.081   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்;
நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.

3.084   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.

3.097   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே;
மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.

3.101   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.

3.115   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்
சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல் புண்டரிகத்தையே;
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத்
திகழ்கின்றது நாகமே;
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார்
இடம் என்பதே.

4.007   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

4.007   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண்
வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம்
ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

4.008   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?

4.009   4 st/nd Thirumurai   Song # 12   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்!

4.033   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்;
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்!
காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர்
மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே.

4.033   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்!
காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.

4.034   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.

4.055   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்தி,
ஆன் இடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி,
வான் இடை மதியம் சூடும் வலம் புரத்து அடிகள் தம்மை
நான் அடைந்து ஏத்தப் பெற்று, நல்வினைப் பயன் உற்றேனே.

4.078   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை,
பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை,
நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

4.089   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!

4.097   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே.

4.107   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

5.005   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

5.006   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.

5.054   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்-
மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை,
வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.

5.066   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேடுவார், பிரமன் திருமால் அவர்;
ஆடு பாதம் அவரும் அறிகிலார்;
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.

5.084   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே,
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!

5.093   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை,
வான வெண்மதி சூடிய மைந்தனை,
வேனிலானை மெலிவு செய் தீ-அழல்-
ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?

5.098   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேசனை, திருமால் பிரமன் செயும்
பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர்
நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற
ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

6.007   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
  ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - 
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

6.008   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான் காண்;
 திரு ஏகம்பத்தான் காண்;தேன் ஆர்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்;
  நம்பன் காண்;ஞானத்து ஒளி ஆனான் காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
 நின்றான் காண்;வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான் காண்;கறைக் கண்டன் காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.

6.017   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்;
திரு ஆரூர் என்றும் உள்ளார்;
வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்;
மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;
நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு
  நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்
ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

6.025   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ் புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி;
கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, உமையாள் மணவாளா! என்று வாழ்த்தி,
ஆரூரா! ஆரூரா! என்கின்றார்கள்; அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?.

6.099   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம்
திருவடி மேல் அலர் இட்டு, தேடி நின்று,
நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி,
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற,
கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்!
கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.010   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக்
கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம்
மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல்
யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

7.012   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி,
பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை,
பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே .

7.031   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர்,
பாசனூர், பரமேட்டி, பவித்திர பாவ-
நாசன்-ஊர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

7.033   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேனை ஆடு முக்கண்ணரோ? மிகச் செய்யரோ? வெள்ளை நீற்றரோ?
பால் நெய் ஆடலும் பயில்வரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ?
மானை மேவிய கண்ணினாள் மலை மங்கை நங்கையை அஞ்ச, ஓர்
ஆனை ஈர் உரி போர்ப்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.037   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்!
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு,
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? .

7.040   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேவி, அம்பொன்மலைக்கோமன் தன் பாவை, ஆகத் தனது உருவம் ஓருபாகம்    சேர்த்துவித்த பெருமான்;
மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத      முதலானை;
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப, துறைக் கெண்டை மிளிர்ந்து, கயல்      துள்ளி விளையாட,
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

7.045   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்;
நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்;
மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.

7.047   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்!
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே!
ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே!
ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.

7.057   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேனை ஆடிய கொன்றையினானை, தேவர் கைதொழும் தேவர் பிரானை,
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை, ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானை,
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய
வானநாடனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.

7.101   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேர் ஆர் வீதித் தென்நாகைத் திருக்காரோணத்து இறையானைச்
சீர் ஆர் மாடத் திரு நாவலூர்க் கோன்சிறந்த வன்தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள்,
வார் ஆர் முலையால் உமை கணவன் மதிக்க இருப்பார், வான் அகத்தே.

8.102   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,

8.103   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!

8.103   8 st/nd Thirumurai   Song # 35   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது

8.105.03   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவர் கோ அறியாத தேவ தேவன்;
செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி;
மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;
யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்;
யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்;
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு;
மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

8.105.06   8 st/nd Thirumurai   Song # 58   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம்
ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன்,
நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத்
தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.

8.109   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல்
வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும்
ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று,
போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

8.112   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

8.113   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!

8.114   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.

8.118   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,
வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!

8.142   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான்,
தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!

8.201   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேவரிற் பெற்றநஞ் செல்வக்
   கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
   பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
   பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
   வாடிப் புலம்புவதே.

8.212   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேமென் கிளவிதன் பங்கத்
   திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
   ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
   செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
   வோமுற்றக் கற்றதுவே.

8.217   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
   பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
   வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
   கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
   னாஞ்சொல்லுந் தன்மைகளே.

8.223   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேன்றிக் கிலங்கு கழலழல்
   வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
   கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
   போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
   யோமெய்யிற் றோன்றுவதே.

8.225   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேவா சுரரிறைஞ் சுங்கழ
   லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
   நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
   தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
   தேனரும் பாவியனே.

8.225   8 st/nd Thirumurai   Song # 29   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேன்வண் டுறைதரு கொன்றையன்
   சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
   மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
   தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
   வாறுகொ னண்ணுவதே.

8.225   8 st/nd Thirumurai   Song # 33   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேவியங் கண்திகழ் மேனியன்
   சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
   தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
   தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
   வௌவுதல் கற்றனவே.

9.002   9 st/nd Thirumurai   Song # 4   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

9.023   9 st/nd Thirumurai   Song # 6   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை
   அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து
   கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
   அம்பலத் தரன் ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
   மனத்தினை யுடையேற்கே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே. 

10.106   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list