சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தொண்ட
தொண்டர்     தொண்டரை     தொண்டினஞ்     தொண்டனார்க்     தொண்டக     தொண்டனார்     தொண்டர்குழாம்     தொண்டர்மனங்     தொண்டர்தாம்     தொண்டர்மனம்     தொண்ட     தொண்டை     தொண்டுரிமை     தொண்டரைச்     தொண்டுஎலாம்     தொண்டு     தொண்டராய்     தொண்டர்கள்     தொண்டனேன்     தொண்டர்க்குத்     தொண்டர்காள்,     தொண்டின    
1.038   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத,
வண்டு ஆர் மயிலாடுதுறையே.

2.028   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.

2.050   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி. நின் கழல் ஏத்துவார் அவர்
உண்டியால் வருந்த, இரங்காதது என்னை கொல் ஆம்?
வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!

2.092   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும்
புகையும்
கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன்
செய் கோலம்
கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள்
ஆர்
வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச் சுரத்தாரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.

2.118   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டர் மிண்டி, புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு, கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன்(ன்) இடம்
தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
வண்டு கெண்டு உற்று இசை பயிலும் சோலை(ம்)
மதிமுத்தமே.

3.024   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!

3.088   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டு அசைவு உற வரு துயர் உறு காலனை மாள்வு உற
அண்டல் செய்து, இருவரை வெரு உற ஆர் அழல் ஆயினார்
கொண்டல் செய்தரு திருமிடறினர்; இடம் எனில் அளி இனம்
விண்டு இசை உறு மலர் நறு மது விரி பொழில் விளமரே.

3.120   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

4.024   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல்,
கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக-
வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.

4.038   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.

4.040   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை;
கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை-
பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன் என்று என்று எண்ணி,
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

4.067   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்;
அண்டனே! அண்டவாணா! அறிவனே! அஞ்சல்! என்னாய்
தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

4.075   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!

4.077   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்;
அண்டனே! அமரர்கோவே! அறிவனே! அஞ்சல் என்னாய்-
தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே!

5.022   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ,
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!-
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக்
கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.

5.030   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.

6.010   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்;
துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்;
இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு
பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்;
அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்;
அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப்
பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.059   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும், தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்,
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்,
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6.065   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான்
காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண்,
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண், ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண்,
வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண், வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண்
எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

6.078   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே; தூ நீறு அணியும் சுவண்டர் தாமே;
தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே;
பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.079   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை, சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை,
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை, ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை,
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை, மூ உருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற
தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.

6.089   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ நெறி ஆய் நின்றார் போலும்;
பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்;
கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்;
இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

6.090   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானை; சுடர் மழுவாள் படையானை; சுழி வான் கங்கைத்
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை; செக்கர் வான் ஒளியானை; சேராது எண்ணிப்
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து, தலை அறுத்து, பல் கண் கொண்ட
கண்டகனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

7.043   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்!
பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே?
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே!

7.084   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது அன மென்முலையாள் பாகமும்,   ஆகி வரும்
புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து   அமரும்,
கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்; கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்;   கண்குளிரக்
கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

7.084   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தொண்டர் தமக்கு எளிய சோதியை, வேதியனை, தூய மறைப் பொருள் ஆம் நீதியை,  வார்கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை, ஊழி படைத்தவனோடு ஒள் அரியும்(ம்)   உணரா
அண்டனை, அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை, மேதகு சீர் ஓதியை,  வானவர் தம்
கண்டனை,-அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கனப்பேர் உறை காளையையே .

8.146   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப் போகீர்;
ஒண் திறல் யோகிகளே, பேர் அணி உந்தீர்கள்;
திண் திறல் சித்தர்களே, கடைக் கூழை செல்மின்கள்;
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே.

8.219   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
   லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
   நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
   யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
   ளயல்மன்னும் இவ்வயலே.

11.033   11 st/nd Thirumurai   Song # 47   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.

11.034   11 st/nd Thirumurai   Song # 6   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.

12.050   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.
12.100   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தொண்டக முரசும் கொம்பும்
துடிகளுந் துளைகொள் வேயும்
எண்திசை நிறைந்து விம்ம
எழுந்தபே ரொலியி னோடும்
திண்திறல் மறவ ரார்ப்புச்
சேண்விசும் பிடித்துச் செல்லக்
கொண்டசீர் விழவு பொங்கக்
குறிச்சியை வலங்கொண் டார்கள்.
12.120   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தொண்டனார் தமக்கருளிச்
சூழ்ந்திமையோர் துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியார்
எழுந்தருளிப் போயினார்
வண்டுவார் குழற்கொடியைக்
கைப்பிடிக்க மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக்
கலிக்காம னார்புகுந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 180   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலங்
கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங்
கருணைபுறம் பொழிந்து காட்டத்
தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந்
திருநாவுக் கரசர் தாமும்
வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான்
திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 320   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேட்கைப் பொலிவினொடுங்
குலவும் வீதிப் பணிசெய்யும்
அண்டர் அறிதற் கரியதிரு
அலகு முதலாம் அவையேந்தி
இண்டை புனைந்த சடைமுடியார்க்
கன்பர் தம்மை எதிர்கொண்டார்.
12.230   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொண்டர் பலரும் வந்தீண்டி
உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள்
கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில்
வைத்துப் போற்றும் பொற்பினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.
12.280   12 st/nd Thirumurai   Song # 217   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள்
ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும்
ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும்
ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை
ஆர்த்தது வானம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 395   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
வடிநீழல் எனஅமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 663   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க் கரசிஎன் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாய் ஆவ
திதுவேஎன் றிருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற.
12.280   12 st/nd Thirumurai   Song # 1085   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டர் தம்பெரும் குழாம்புடை
சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர
வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு
நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின்
பெருமையே கருதி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1140   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டர்மனம் பிரியாத
திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால்
நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த
ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின்
கரையில்லா நிலையணைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 51   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயி லுட்புக்குக்
குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்தங் கிசையில் தம்மையே
புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 278   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்
குறித்த காதலின் நெறிக்கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.
12.470   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
தொண்டுரிமை புரக்கின்றார்
சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும்
ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின்
கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா
ஓர்ஒன்றா வழுத்துவார்.
12.650   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
தொண்டரை விளக்கத் தூயோன்
அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத்
திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும்
என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
நின்றவூர் வந்து சார்ந்தான்.
12.650   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
தொண்டரைச் சென்று கண்ட
மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த
எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித்
தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன்
கண்ணுதல் அருள்பெற் றென்றான்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list