சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நம்
நம்பனை,     நம்பனை     நம்முதல்     நம்பால்     நம்பன்     நம்முடைய     நம்பரடி     நம்மையுடை     நம்பரை     நம்பர்மகிழ்     நம்பியா     நம்பி     நம்பர்தாம்     நம்பர்     நம்     நம்பனார்,     நம்புவார்     நம்பனே!     நம்புவீர்;     நம்பன்காண்,     நம்பினார்க்கு    
1.062   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,
வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.

2.011   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற
பெம்மானை, பேய் உடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடை இல்லையே.

2.097   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!

2.109   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நம்பனார், நல் மலர்கொடு தொழுது எழும் அடியவர்
தமக்கு எல்லாம்;
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர், செல்வம்
மல்கிய நல்ல
கொம்பு அனார், தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து
இனிது இருப்பாரே.

3.049   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

4.026   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

4.044   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.

4.062   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி!
என் பொனே! ஈசா! என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்-
அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

5.069   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும்
எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ-
கம்பனார் உறைகின்ற கருவிலி,
கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!

6.044   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்பனே! நால் மறைகள் ஆயினானே! நடம் ஆட வல்லானே! ஞானக்கூத்தா!
கம்பனே! கச்சி மா நகர் உளானே! கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே! அளவு இலாப் பெருமையானே! அடியார்கட்கு ஆர் அமுதே! ஆன் ஏறு ஏறும்
செம்பொனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.046   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,   நன்மை தன்னை,
கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய் அடியார்கட்கு அருள் செய்வானை,
செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீயை, நீரை,
அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6.085   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நம்பன்காண், நரை விடை ஒன்று ஏறினான் காண், நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்;
இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண், ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு
அன்பன் காண், ஆர் அழல் அது ஆடினான் காண், அவன், இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

7.069   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்-தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

7.088   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை,
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம்
அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

10.122   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 

10.309   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 70   திருமூலர்   திருமந்திரம்  
நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகும் சதாசிவன் றானே.
10.402   10 st/nd Thirumurai   Song # 83   திருமூலர்   திருமந்திரம்  
நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.

11.009   11 st/nd Thirumurai   Song # 20   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே நம்பா நின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.

11.033   11 st/nd Thirumurai   Song # 29   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நம்பன் திருமலை நான்மிதி
யேனென்று தாளிரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற வுமைநகலும்
செம்பொன் னுருவனெ ன்அம்மை
யெனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின்
மேய குலதனமே.

12.100   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும்
எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.
12.240   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நம்பரடி யார்அணைந்தால்
நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியுஞ்
செழுந்துகிலும் முதலான
தம்பரிவி னாலவர்க்குத்
தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள்.
12.250   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நம்மையுடை யவர்கழற்கீழ்
நயந்ததிருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பதென
என்போல்வா ருந்தெளியச்
செம்மைபுரி திருநாவுக்
கரசர்திருப் பெயரெழுத
வெம்மைமொழி யான்கேட்க
விளம்பினீர் எனவிளம்பி.
12.280   12 st/nd Thirumurai   Song # 253   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 574   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி யேத்தி
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி யேத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பியா ரூரர்திரு
வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு
வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந்
தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும்
அதிசயிப்ப ஏத்தினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 265   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பியா ரூரனுக்கு
நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம்
ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய
அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர்
அருள்தலைமேற் கொண்டெழுவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 319   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பி யருளால் சென்றவரும்
நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும்
மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 346   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பர்தாம் அதனைக் கேட்டு
நகையும்உட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார்
தனிப்பெருந் தோழ னார்தம்
வெம்புறு வேட்கை காணும்
திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தாம்
மறுத்ததே கொண்டு மீண்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 383   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பியா ரூரர் நெஞ்சில்
நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது
தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை
ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார்
வெருவினார் விளம்ப லுற்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 386   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நம்பர்தாம் அடியார் ஆற்றாராகியே
நண்ணி னாரேல்
உம்பரார் கோனும் மாலும்அயனுநேர்
உணர வொண்ணா
எம்பிரா னிசைந்தார் ஏவப்
பெறுவதே இதனுக் குள்ளம்
கம்பியா தவளை யான்முன்
காணுநாள் எந்நா ளென்று.
12.370   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற்
குரிய வேள்வி பலசெய்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 137   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list