சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நல
நல்ல     நலம்     நல்லாரும்     நல்     நல்லார்,     நல்லார்     நலன்     நலிதரு     நல்வழி     நல்லதென்     நல்லொளி     நல்குந்     நலந்தரு     நலம்பல     நலம்பாயு     நலந்தர     நல்கும்     நல்கென்     நலமலி     நல்லொழுக்கந்     நல்லபத     நல்லசெங்     நலிவாரும்     நல்லூரில்     நல்லவென     நல்லதாய்     நலம்மலியும்     நல்லூர்     நலம்பெருகும்     நலஞ்சிறந்த     நலம்பெருகுஞ்     நல்லானை,     நலம்தான்     நல     நல்குரவும்     நலச்     நல்லர்,     நல்லவர்     நல்-தவர்     நல்-தமிழ்     நலியும்     நல்வினைப்     நலியும்,     நல்லார்கள்     நல்லனை,     நல்லர்;     நல்-தவம்     நல்லூரே     நல்லான்     நல்-தவத்தின்     நல்-தவனை,     நல்-தவனை;     நல்காது     நல்வினை     நல்லாய்    
1.018   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
அல்லர் என, ஆவர் என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!

1.020   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
திலகம் இது! என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.

1.022   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை
பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.

1.023   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

1.026   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

1.034   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும்
சொல்லார்; நல்மலர் சூடினார்;
பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே.

1.060   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!

1.081   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

1.084   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,
அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்;
பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த,
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

1.105   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல
அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை,
வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச்
சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.

1.119   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்,
கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்;
மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.

1.120   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.

1.123   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

2.011   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

2.019   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக்
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

2.021   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
கனல் ஆனவனே! கழிப்பாலை உளாய்!
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு
இலதுஆம், வினைதான்; எயில் எயதவனே!

2.029   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.

2.031   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

2.035   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

2.047   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

2.055   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.

2.059   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்! என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.

2.094   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

2.107   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லர், ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம்
அடைந்தவர்க்கு அருள் ஈய
வல்லர், பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர், மலி கடல்
மாதோட்டத்து
எல்லை இல் புகழ் எந்தை, கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து
ஏத்தி,
அல்லல் ஆசு அறுத்து, அரன் அடி இணை தொழும்
அன்பர் ஆம் அடியாரே.

2.116   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,
அல்லர், ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

3.015   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.

3.016   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன்,
குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச்
சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக்
கற்றவர், கழல் அடி காண வல்லரே.

3.022   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

3.022   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.

3.027   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார்
வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிா
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.

3.041   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் ஆர் கச்சி, நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த, கலவா, வினையே.

3.043   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை,
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய
கலி கடிந்த கையார், கடல் காழியு
அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே!

3.048   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.

3.048   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.

3.054   3 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!

3.096   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.

3.103   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை போய்,
செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.

3.120   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய் ஆவதும் இதுவே.

4.007   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை,
சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும்
இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

4.014   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா,
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண்
அலர்தர, அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல்
அலர்தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஓர் சரணே.

4.062   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

5.017   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்லனை, திகழ் நால்மறைஓதியை,
சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர்
கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

5.026   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா,
விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட,
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.

5.030   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்ல நால்மறை ஓதிய நம்பனை,
பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை,
தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை,
வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!

5.052   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி
செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.

5.063   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ,
பற்றும் தீவினை ஆயின பாறுமே.

6.025   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்லூரே நன்று ஆக நட்டம் இட்டு, நரை ஏற்றைப் பழையாறே பாய ஏறி,
பல் ஊரும் பலிதிரிந்து, சேற்றூர் மீதே,-பலர் காண.-தலையாலங்காட்டின் ஊடே,
இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி,
இராப் பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு(வ்),
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண, இறைப்பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே.

6.048   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண், நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண், மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச்
சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

6.050   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது செய்தானை, அமுதம் உண்ட
மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம் செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச்
செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

6.060   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்-தவனை, புற்று அரவம் நாணினானை, நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை,
முற்றவனை, மூவாத மேனியானை, முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னை,
பற்றவனை, பற்றார்தம் பதிகள் செற்ற படையானை, அடைவார் தம் பாவம் போக்கக்
கற்றவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

6.067   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச்
சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை,
தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,
வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை, மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க-
கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

6.069   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல்-தவனை; நால்மறைகள் ஆயினானை; நல்லானை; நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனை; செஞ்சடை மேல்-திங்கள் சூடும், திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேய,
கொற்றவனை; கூர் அரவம் பூண்டான் தன்னை;
குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும்
பற்றவனை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.071   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி, நல்லக்குடி, நளி நாட்டியத்தான் குடி,
கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, காணுங்கால்
விற்குடி, வேள்விக்குடி, நல் வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி,
புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடியும், போற்ற இடர் போகும் அன்றே.

6.095   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! | நலஞ்சுடரே! நால் வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற | சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் | நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன் |-கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!.

7.034   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே!
குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

7.055   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்-
பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .



7.067   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்கு-அரசரும் பாடிய நல்-தமிழ்மாலை
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை; தொண்டனேன் அறியாமை அறிந்து,
கல் இயல் மனத்தைக் கசிவித்து, கழல் அடி காட்டி, என் களைகளை அறுக்கும்
வல் இயல் வானவர் வணங்க நின்றானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

7.071   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்;
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்-
சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

7.079   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை
அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.

7.083   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய,
செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?

8.114   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

8.121   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நல்காது ஒழியான் நமக்கு' என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி,
பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம்' என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!

8.202   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
நல்வினை யும்நயந் தந்தின்று
   வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
   பாமென்று பாங்கன்சொல்லவில்வினை மேருவில் வைத்தவன்
   தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
   தாருயிர் துப்புறவே.

8.218   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
நல்லாய் நமக்குற்ற தென்னென்
   றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
   பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
   தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
   றார்நம் சிறந்தவரே.

10.204   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 

10.310   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 

10.404   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

10.404   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

10.405   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

10.801   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.2,

10.832   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
பலம்பல பன்னிரு காலம் நினையும்
நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.

11.020   11 st/nd Thirumurai   Song # 20   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.

11.023   11 st/nd Thirumurai   Song # 42   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயு மானன் குருவ நலம்பாய்செய்
தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்
தார்த்தார்க்கும் அண்ணா மலை.

11.029   11 st/nd Thirumurai   Song # 8   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
நலந்தர நானொன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்களன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.

11.029   11 st/nd Thirumurai   Song # 55   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
நல்கும் புகழ்க்கட வூர்நன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்
தென்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.

11.032   11 st/nd Thirumurai   Song # 32   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
நல்வழி நின்றார் பகைநன்று
நொய்ய ருறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை யம்பலத்து
வில்வழி தானவ ரூரெரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன்
காண்க சிவகதியே.

11.034   11 st/nd Thirumurai   Song # 77   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.

11.038   11 st/nd Thirumurai   Song # 24   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
நலமலி தரும்புவனி
  நிறைசெய்புகழ் இன்பம்நனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி
  அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தருந்தமிழின்
  வடகலை விடங்கன்மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தருங்கமல
  சரண்நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே. 5
  பதிக வகை: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

11.038   11 st/nd Thirumurai   Song # 61   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
நல்லொளி பரந்து
  நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல
  விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத்
  துன்னிய பெருமைச்
செம்மலர் மாது
  சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன்
  கவுணியர் குலபதி (30)

12.020   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நல்லொழுக்கந் தலைநின்றார்
நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல
இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால்
வழக்கின்மே லிட்டணைந்தார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நல்ல கோவணங் கொடுப்பன்என் றுலகின்மேல் நாளும்
சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கென்
றெல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்.
12.070   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவமணித் திரளும்
பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை யில்தனம் சுமந்தவர் இடஇடக் கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது வியந்தனர் மண்ணோர்.
12.100   12 st/nd Thirumurai   Song # 148   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நல்லபத முறவெந்து
நாவின்கண் இடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன்  
பிழிந்துகலந் ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித்
தாமமுந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோல்
உடன்கொண்டு வந்தணைந்தார்.
12.130   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நல்லசெங் கீரை தூய
மாவடு அரிசி சிந்த
அல்லல்தீர்த் தாள வல்லார்
அமுதுசெய் தருளும் அப்பே
றெல்லையில் தீமை யேனிங்
கெய்திடப் பெற்றி லேனென்
றொல்லையி லரிவாள் பூட்டி
ஊட்டியை அரிய லுற்றார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நலிவாரும் மெலிவாரும்
உணர்வொன்றாய் நயத்தலினால்
மலிவாய்வெள் ளெயிற்றரவம்
மயில்மீது மருண்டுவிழும்
சலியாத நிலைஅரியுந்
தடங்கரியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கணையும்
புல்வாய புல்வாயும். 
12.200   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நல்ல நவகும் பங்கள்பெற
நாடிக் கொண்டு நாணற்பூங்
கொல்லை இடத்துங் குறைமறைவும்
மேவுங் கோக்கள் உடன்கூட
ஒல்லை யணைந்து பாலாக்கள்
ஒன்றுக் கொருகா லாகவெதிர்
செல்ல அவையுங் கனைத்துமுலை
தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 215   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நல்லூரில் நம்பரருள்
பெற்றுப்போய்ப் பழையாறை
பல்லூர்வெண் தலைக்கரத்தார்
பயிலுமிடம் பலபணிந்து
சொல்லூர்வண் டமிழ்பாடி
வலஞ்சுழியைத் தொழுதேத்தி
அல்லூர்வெண் பிறையணிந்தார்
திருக்குடமூக் கணைந்திறைஞ்சி.
12.240   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நல்லவென உறுப்புநூ
லவர்உரைக்கும் நலம்நிரம்பி
மல்குபெரு வனப்புமீக்
கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில்
இவர்கள்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகள்
பேசுதற்குத் தொடங்குவார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நல்லதாய் தந்தை ஏவ
நான்இது செயப்பெற் றேன்என்
றொல்லையில் அணைந்து தோட்டத்
துள்புக்குப் பெரிய வாழை
மல்லவங் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள ராஒன்
றல்லல்உற் றழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற் றன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1041   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நல்ல நாள்பெற ஓரையில்
நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு
வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண்
டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப்
பொழிந்துளம் மகிழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1138   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நலம்மலியும் திருவீதி
பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில்
குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித்
தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே
ரம்பலத்தை வணங்கினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 69   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நல்லூர் இறைவர் கழல்போற்றி
நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி ஏத்திப்போய்
இசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ்
சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர் கோயிலினுள்
அடைந்து வலங்கொண் டடிபணிவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 171   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நலம்பெருகும் அப்பதியில்
நாடியஅன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர்
குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார்
தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர்
பிறபதியுந் தொழப்போவார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நலஞ்சிறந்த ஞானயோ
கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல
தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூர்
அமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறல்தண்டி
யடிகள்திறஞ் சாற்றுவாம்.
12.370   12 st/nd Thirumurai   Song # 148   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நல்ல தோழர் நம்பெருமாள்
தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.
12.380   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நல்ல நந்தன வனப்பணி
செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்ம லர்த்தொடை புனைபவர்
கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லும் நண்பக லும் திரு
வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர்
திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.
12.570   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
நலம்பெருகுஞ் சோணாட்டு
நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார்
கோட்புலியார் எனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர்
தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப்
போர்விளைத்துப் புகழ்விளைப்பார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list