சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாத
நாதன்     நாதத்தில்     நாத     நாதனும்     நாதத்     நாதத்தின்     நாதனா     நாதர்     நாதர்தம்     நாதரைப்     நாதர்பாற்     நாதரும்     நாதன்தன்     நாதன்!     நாதனும்,     நாதனார்     நாதனாய்     நாதனுக்கு     நாத்தான்     நாதனை,     நாத்தானும்     நாத!     நாதம்    
1.090   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!

2.061   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

3.008   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாதனும், நள் இருள் ஆடினானும், நளிர்போதின்கண்
பாதனும், பாய் புலித்தோலினானும், பசு ஏறியும்,
காதலர் தண் கடவூரினானும், கலந்து ஏத்தவே
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே?

4.028   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாதனார் என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், இணை அடி தொழுதோம் என்பார்
ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.

4.060   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும்
பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை,
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே,

5.064   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-
வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில்
கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
ஆதி, பாதம் அடைய வல்லார்களே.

7.017   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று
ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே.

7.067   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாத்தான் உன் திறமே திறம்பாது, நண்ணி அண்ணித்து, அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை, அடியேன் தனக்கு; என்றும் அளவு இறந்த பல்-தேவர்கள் போற்றும்
சோத்தானை; சுடர் மூன்றிலும் ஒன்றி, துருவி மால் பிரமன்(ன்) அறியாத
மாத்தானை; மாத்து எனக்கு வைத்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .

7.084   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாதனை, நாதம் மிகுந்த ஓசை அது ஆனவனை, ஞானவிளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை,   பயிரை,
மாதனை, மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை, குற்றம் இல்    கொள்கையனை,
தூதனை, என்தனை ஆள் தோழனை, நாயகனை, தாழ் மகரக்குழையும் தோடும் அணிந்த   திருக்-
காதனை,-நாய் அடியேன் எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

7.092   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாத்தானும் உனைப் பாடல் அன்று நவிலாது எனா,
சோத்து! என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்!
பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே!
கூத்தா!-உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!

8.102   8 st/nd Thirumurai   Song # 28   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நாத! நாத!' என்று அழுது அரற்றி,
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்

8.143   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நாதம் உடையது ஒர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார்,
ஓதி, பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும்,
போது அலர் சோலை, பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றி,
பேதம் கெடுத்து, அருள் செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே.

10.209   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. 

10.308   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 64   திருமூலர்   திருமந்திரம்  
நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

10.914   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

10.915   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

11.033   11 st/nd Thirumurai   Song # 48   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.

11.034   11 st/nd Thirumurai   Song # 17   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.

12.000   12 st/nd Thirumurai   Song # 326   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நாதனா ரருளிச் செய்ய
நம்பியா ரூரர் நானிங்கு
ஏதந்தீர் நெறியைப் பெற்றேன்
என்றெதிர் வணங்கிப் போற்ற
நீதியா லவர்கள் தம்மைப்
பணிந்துநீ நிறைசொன் மாலை
கோதிலா வாய்மை யாலே
பாடென வண்ணல் கூற.
12.070   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 62   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதில்
காதல் மிக்கதோர் திருவிளை யாட்டில்
கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி
ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி
ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
வெள்ள மாந்திரு உள்ளமுஞ் செய்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 311   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நாத மறைதேர் நமிநந்தி
அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள்
புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான்
வேதா கமநூல் விதிவிளங்க.
12.280   12 st/nd Thirumurai   Song # 741   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாதர்தம் அருள்முன் பெற்று
நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி
விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத் தோடும்
விருப்புறு தொண்டர் சூழ
மூதெயில் கபாடம் நீடு
முதல்திரு வாயில் சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1186   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாத மங்கல முழக்கொடு
நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட
விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில்
புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந்
தவர்முன்பு மேவி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1208   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாதரைப் பணிந்து போற்றி
நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக்
கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம்
புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில்
புறத்தொரு மடத்திற் புக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 106   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாதர்பாற் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ண மெல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
மெய்யில்வெண் பொடியும் பாட.
12.290   12 st/nd Thirumurai   Song # 344   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாதரும் அதனைக் கேட்டு
நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா
தெய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற் கன்றோ
நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய
அடாதென அருளிச் செய்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 396   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாதர்தம் அருளால் நண்ணும்
சூலையும் அவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும்
வன்தொண்டர் வரவு கேட்டுத்
தூதனாய் எம்பி ரானை
ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தில்
யான்செய்வது என்னாம் என்பார்.
12.320   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாதன்தன் அடியார்க்கு
நல்லடிசில் நாடோறும்
ஆதரவி னால்அமுது
செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல
இவ்வுலகை விட்டதற்பின்
பூதங்கள் இசைபாட
வாடுவார் புரம்புக்கார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list