சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நின்
நின்று     நின்     நின்றான்     நின்றுயி     நின்றது     நின்றன     நின்ற     நின்றஇக்     நின்றவள்     நின்றாள்     நின்றனள்     நின்றிடு     நின்றிடும்     நின்றஇச்     நின்றும்     நின்றவன்     நின்மல     நின்றார்     நின்றனன்     நின்னியல்பை     நின்றில     நின்றுகோ     நின்றமுது     நின்றெங்கு     நின்றசெங்     நின்றவர்அங்     நின்றதிருத்     நின்றமறை     நின்றவர்     நின்அற     நின்றியூர்     நின்றாலும்     நின்றவூர்ப்     நின்னை     நின்னுடை     நின்றுநினைந்    
1.038   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உண் சமணும், நெடுந் தேரர்,
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே.

1.052   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.071   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்,
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்!
கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய,
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.093   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

1.093   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.

1.095   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே.

1.130   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்
குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

2.025   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல்
ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியைச்
சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.

2.034   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட,
அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.

2.050   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்து இடை
வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்?
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபது தான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

2.052   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை
குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான் அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.

2.074   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும்
வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர்
புறவம், மோடி
சென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி,
தேவர் கோன் ஊர்,
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே.

2.110   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உணும் சமண், தேரரும், நிலை இலர்; நெடுங்கழை,
நறவு, ஏலம்,
நன்று மாங்கனி, கதலியின் பலங்களும், நாணலின் நுரை
வாரி,
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒரு காலம்
அன்றி, உள் அழிந்து எழும் பரிசு அழகிது; அது அவர்க்கு
இடம் ஆமே.

3.069   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு போர்வையவரும்,
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி,
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்திமலையே.

3.113   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே;
உன்னி, மனத்து, எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே;
கன்னியரைக் கவரும் க(ள்)ளனே! கடல்விடம் உண்ட கருங் களனே;
மன்னி வரைப் பதி, சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே.

3.123   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறி அலாதன புறம்கூற,
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரைபல மோதிக்
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே.

4.092   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.

4.112   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!

6.095   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; | நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; | மறை   நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்; | பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
என் ஆனாய்! என் ஆனாய்! என்னின் அல்லால், | ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.

7.083   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து,
தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு,
என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?

7.099   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப்
பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?-
பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல,
செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே!

8.202   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
நின்னுடை நீர்மையும் நீயு
   மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
   தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
   ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
   னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

9.021   9 st/nd Thirumurai   Song # 5   வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
   தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
   இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
   வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

10.208   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

10.209   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 39   திருமூலர்   திருமந்திரம்  
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

10.311   10 st/nd Thirumurai   Song # 44   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

10.402   10 st/nd Thirumurai   Song # 35   திருமூலர்   திருமந்திரம்  
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 84   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத்
தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.

10.404   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.

10.405   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

10.405   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

10.405   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

10.406   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

10.407   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 67   திருமூலர்   திருமந்திரம்  
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 83   திருமூலர்   திருமந்திரம்  
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.

10.409   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

10.409   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.
10.413   10 st/nd Thirumurai   Song # 35   திருமூலர்   திருமந்திரம்  
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

10.413   10 st/nd Thirumurai   Song # 72   திருமூலர்   திருமந்திரம்  
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 83   திருமூலர்   திருமந்திரம்  
நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 92   திருமூலர்   திருமந்திரம்  
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.

10.511   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

10.721   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசந் தானே.

10.723   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

10.737   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

10.803   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

10.806   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
நின்று பரனாகி நின்மலன் ஆமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 9,

10.817   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

10.830   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.

10.836   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.

10.840   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.

10.925   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

10.929   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 42   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன்
தாள்வா னவர் இறைஞ்சும் தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.

11.009   11 st/nd Thirumurai   Song # 46   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவுமா னால் உரை.

11.032   11 st/nd Thirumurai   Song # 45   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
நின்றில வேவிச யன்னொடுஞ்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநட மாடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்
தார்த்த கரியவனே.

12.000   12 st/nd Thirumurai   Song # 243   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நின்றுகோ புரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந்திரு வீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூ டேகி
மன்னிய திருப்பதி யதனில்
தென்றிரு வாயில் கடந்துமுன் போந்து
சேட்படுந் திருவெல்லை யிறைஞ்சிக்
கொன்றைவார் சடையா னருளையே நினைவார்
கொள்ளிடத் திருநதி கடந்தார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நின்ற வேதியர் வெகுண்டமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்றால்
இன்று நான்வைத்த கோவணங் கொண்டதற் கெதிர்வே
றொன்று கொள்கென உரைப்பதே நீரென உரையா.
12.100   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி
நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும்
நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி
நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.
12.100   12 st/nd Thirumurai   Song # 66   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.
12.100   12 st/nd Thirumurai   Song # 174   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நின்றசெங் குருதி கண்டார்  
நிலத்தினின் றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள்
கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த இந்த  
மதியென நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பி னாலே  
உன்மத்தர் போல மிக்கார்.
12.180   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நின்றவர்அங் கெய்தரிய
பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூழ்
எயில்திருவா யிலைப்புக்கால்
குன்றனைய மாளிகைகள்
தொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரம்அங்
குளவென்பார் ஆகுதிகள்.
12.200   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நின்ற விதியின் விளையாட்டால்
நிறைந்த அரும்பூ சனைதொடங்கி
ஒன்றும் உள்ளத் துண்மையினால்
உடைய நாதன் திருமுடிமேல்
மன்றல் விரவுந் திருப்பள்ளித்
தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறைதீம் பாற்குடங்கள்
எடுத்து நயப்புற் றாட்டுதலும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 414   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நின்றதிருத் தாண்டகமும்
நீடுதனித் தாண்டகமும்
மன்றுறைவார் வாழ்பதிகள்
வழுத்துதிருத் தாண்டகமும்
கொன்றைமலர்ச் சடையார்பால்
குறைந்தடைந்த நேரிசையுந்
துன்றுதனி நேரிசையும்
முதலான தொடுத்துரைத்தார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நின்றமறை யோர்கேளா
நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர்
நாணில்அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூட்சி
திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தந் திருப்பேரோ
வேறொருபேர் எனவெகுள்வார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நின்ற அன்பரை நீலகண்
டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத்
தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை
வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத்
தனர்திரு மறையோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 612   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நின்றவர் தம்மை நோக்கி
நிகரில்சீர்ச் சண்பை மன்னர்
மன்றலங் குழலி யாராம்
மானியார் தமக்கும் மானக்
குன்றென நின்ற மெய்ம்மைக்
குலச்சிறை யார்த மக்கும்
நன்றுதான் வினவக் கூறி
நற்பதம் போற்று வார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 748   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நின்அற நெறியை நீயே
காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை இங்கே
அழைத்தனை அவரும் யாமும்
முன்னுற ஒக்கத் தீர்க்க
மொழிந்துமற் றவரால் தீர்ந்த
தென்னினும் யாமும் தீர்த்தோ
மாகவும் இசைவா யென்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 102   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நின்றவர் தம்மை நோக்கி
நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன் றெய்த
வழியெமக் கியம்பும் என்னக்
குன்றவில் லாளி யாரும்
கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதிவ் வழிதானென்று
செல்வழித் துணையாய்ச் செல்ல.
12.290   12 st/nd Thirumurai   Song # 150   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நின்றியூர் மேயாரை
நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப்
பாடுவார் உடையஅர
சென்றுமுல கிடர்நீங்கப்
பாடியஏ ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொல்
திருப்பதிகம் அருள்செய்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 256   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நின்றவர்அங் கெதிர்வந்த
நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான்
திருவருளின் திறங்கூற
மின்தயங்கு நுண்ணிடையார்
விதியுடன்பட் டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவார்
உடனொதுங்கி உட்புகுந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 317   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நின்ற நிலைமை அவர்கள் சிலர்
நிலவு திருவா ரூரர்எதிர்
சென்று மொழிவார் திருவொற்றி
யூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங்
குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப்
பெற்றி லோம்என் றிறைஞ்சினார்.
12.580   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
நின்றாலும் இருந்தாலும்
கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும்
விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம்
ஒருகாலும் மறவாமை
குன்றாத வுணர்வுடையார்
தொண்டராம் குணமிக்கார்.
12.650   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
நின்ற வன்தொண்டர் நீரணி
வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி
வாயிலின் புறத்தினன் எனச்செப்பக்
குன்ற வில்லியார் பெரியதே
வரைச்சென்று கொணர்கென அவரெய்தி
வென்றி வானவர்க் கருளிப்பாடு
எனஅவர் கழல்தொழ விரைந்தெய்தி.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list