சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நிற
நிறை     நிறைவு     நிற்கின்ற     நிற்றல்     நிறம்பல     நிறைந்தெங்கும்     நிறம்பிறிதாய்     நிறைகுடந்     நிறைந்தநீ     நிறையும்     நிறைசெல்வத்     நிறைகுடந்தூ     நிறைந்தாரா     நிறைந்த     நிறையழிந்த     நிற     நிறையவர்     நிறைய     நிறைக்க     நிறம்     நிற்பனவும்,     நிற்பானும்,     நிறையனூர்,     நிறைக்     நிற்பார்     நிறைதழை    
1.080   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

1.096   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்
மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!

1.110   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறை அவன், புனலொடு மதியும் வைத்த
பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற
மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட
இறையவன், வள நகர் இடைமருதே.

2.035   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும்
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி;
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.

2.084   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை
சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத
அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை,
புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்;
நமர்கா

3.018   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்,
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.

3.026   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.

3.042   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.

3.096   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே;
கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர்
உறைவதும் உம் அடிக்கீழே.

3.902   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
குறையி லாது கொடுமை தவிர்வரே.

4.049   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறை மறைக் காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட,
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அறக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

4.071   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி,
மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,
கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.

4.073   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.076   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம்
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்!
சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக்
குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!

5.029   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

5.074   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை;
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா,
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

5.074   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட,
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

6.003   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை,
மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை,
கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை,
இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

6.098   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும், நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி,
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே.

7.016   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிற்பானும், கமலத்தில் இருப்பானும், முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப,    நினைந்தருளி, அவர்க்கு ஆய்
வெற்பு ஆர் வில், அரவு நாண், எரி அம்பால், விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன்  ஊர் வினவில்
சொல்பால பொருள் பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லித் துதித்து, இறை   தன் திறத்தே
கற்பாரும் கேட்பாரும் ஆய், எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலய நல்லூர் காணே .

7.031   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த
பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர்,
மறையனூர், மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த
இறையனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.

7.047   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே!
மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே!
மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே!
இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!

8.145   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே,
பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே;
நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின்;
பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே.

9.002   9 st/nd Thirumurai   Song # 5   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு)
இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம்
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற் சிற்றம்பலக் கூத்தா !
பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே.

10.123   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே. 

10.925   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.

10.928   10 st/nd Thirumurai   Song # 37   திருமூலர்   திருமந்திரம்  
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

11.009   11 st/nd Thirumurai   Song # 48   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த
கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.

11.021   11 st/nd Thirumurai   Song # 33   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.

12.000   12 st/nd Thirumurai   Song # 159   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நிறைகுடந் தூபம் தீபம்
நெருங்குபா லிகைக ளேந்தி
நறைமல ரறுகு சுண்ணம்
நறும்பொரி பலவும் வீசி
உறைமலி கலவைச் சாந்தின்
உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல்
மணமெதிர் கொள்ள வந்தார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நிறைந்தநீ றணிமார்பின்
நிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத்
திரள்தோளின் புடையலங்கல்
அறைந்தசுரும் பிசையரும்ப
அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப்
பூம்பட்டுப் பொலிந்தசைய.
12.270   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நிறையும் பரிசு திருவிளக்கு
விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம்
கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும்
மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 460   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீலநக்கர் தாமுஞ் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
வாழ்ந்துவழி விளக்கி யெங்குந்
துறைமலிதோ ரணங்கதலி கமுகுநிறை
குடந்தூப தீப மாக்கி
முறைமையில்வந் தெதிர்கொள்ள உடன்அணைந்து
முதல்வனார் கோயில் சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 540   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நிறைகுடந்தூ பந்தீபம்
நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப்பொற் சுண்ணம்
நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப
மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை
எதிர்கொள்வர வேற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1129   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நிறைந்தாரா வேட்கையினால்
நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார்
உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
எழுந்தருளிச் செந்துருத்தி
அறந்தளிகள் பயில்சாரல்
திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 87   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித்
தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
12.540   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
நிறையழிந்த வுள்ளத்தால்
நெற்பண்டா ரமும்அன்றிக்
குறைவில்நிதிப் பண்டார
மானவெலாங் கொள்ளைமுகந்
திறைவனடி யார்கவர்ந்து
கொள்கவென எம்மருங்கும்
பறையறையப் பண்ணுவித்தார்
படைத்தநிதிப் பயன்கொள்வார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list