சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நில
நிலனொடு     நில்லா     நில்லாது     நிலைபெற     நிலாமய     நிலத்தைப்     நிலாவிலங்கு     நிலையில்     நிலைத்திவ்     நிலந்துளங்க     நிலத்திமை     நிலாவு     நிலத்திடைப்     நிலத்தில்     நிலம்     நிலத்துக்கு     நிலவு     நிலவும்     நிலைமை     நிலத்தின்     நில்லாத     நிலமிசைப்     நிலவியஅத்     நிலைச்செண்டும்     நிலவும்,     நிலை     நிலத்தவர்,     நில     நிலையும்     நில்லாக்     நிலையின்     நில்லாதே     நிலந்தரத்து     நிலைப்பாடே     நிலையவன்     நிலா     நிலன்     நிலனே,     நில்லாய்,     நிலம்,    
1.042   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து
புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.

2.017   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.

2.055   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று, ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார், போற்று ஓவார்,
சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

2.063   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,
சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்
புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன்
அடியே
நிலை ஆகப் பேணி, நீ சரண்! என்றார் தமை, என்றும்
விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.

2.097   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன் முனம்
தலை பறித்த கையர், தேரர், தாம் தரிப்ப(அ)ரியவன்;
சிலை பிடித்து எயில் எய்தான்; திருந்து காழி சேர்மினே!

3.003   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.

3.096   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை,
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்,
சொல மல்குவார் துயர் இலரே.

3.122   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர் கெட, நெடிய
மாற்கு அருளால்,
அலைத்த வல் அசுரர் ஆசு அற, ஆழி அளித்தவன் உறைவு இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார், நன்மையால் மிக்க
உலப்பு இல் பல்புகழார், ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

4.014   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புக, தன் அருளால்-
கொலை நலி வாளி, மூள அரவு, அம் கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்-
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

4.021   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்து, எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

4.059   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான்,
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்)
அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே.

4.064   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக,
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள்
தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட
விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.082   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய்,
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம்,
சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர்,
அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

4.096   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று
அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்;
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

5.023   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்,
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.

5.039   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்?
கலைகள் ஆய வல்லான், கயிலாயநல்
மலையன், மா மயிலாடுதுறையன், நம்
தலையின்மேலும் மனத்துளும் தங்கவே.

5.069   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா ஆறு செயப் புரியாது, நீர்,
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி,
கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!

5.070   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

6.013   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு,
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும்
குடமூக்கில் அங்கு ஒழிய, குளிர் தண் பொய்கை
நல்லாடை, நல்லூரே, தவிரேன் என்று நறையூரில்- தாமும் தவிர்வார் போல,
பொல்லாத வேடத்தர், பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

6.031   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு, பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, சங்கரா, சய! போற்றி போற்றி! என்றும்,
அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.

6.034   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ? நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்து உரைக்கக் கற்பகம் ஆய் நின்ற நாளோ? காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று,
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து, வானோர் உய்ய,
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ? தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.043   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை;
கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை;
சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு,
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.

6.045   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல இங்கு ஓர் அடிகள் வந்து,
கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்; எங்கும் காணேன்;
சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து   என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்,
உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே.

6.048   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்; நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த
சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்;
கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன் காண்; கயிலாயம் என்னும் தெய்வ-
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

6.097   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நிலா மாலை செஞ்சடை மேல் வைத்தது உண்டோ? நெற்றி மேல் கண் உண்டோ? நீறு சாந்தோ?
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ? பூதம் தற் சூழ்ந்தனவோ? போர் ஏறு உண்டோ?
கலாம் மாலை வேல் கண்ணாள் பாகத்து உண்டோ? கார்க் கொன்றை மாலை கலந்தது உண்டோ?
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே.

7.011   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிலன் உடை மான்மறி கையது; தெய்வக்
கனல் உடை மா மழு ஏந்தி, ஓர் கையில்
அனல் உடையார்; அழகு ஆர்தரு சென்னிப்
புனல் உடையார்; உறை பூவணம் ஈதோ!.

7.021   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே;
தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்;
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .

7.027   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற
புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும்
கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

7.050   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

7.100   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய,
மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே,
அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச,
உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.

8.115   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன்,
புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்;
உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே
பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

8.215   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
   கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
   மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
   றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
   யான்இன் றிரக்கின்றதே.

10.125   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 

10.312   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 60   திருமூலர்   திருமந்திரம்  
நிலாமய மாகிய நீள்படி கத்தி
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

10.841   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே. 42,

10.924   10 st/nd Thirumurai   Song # 55   திருமூலர்   திருமந்திரம்  
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 64   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.

11.009   11 st/nd Thirumurai   Song # 16   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தே இப் பாசத்தை விட்டு.

11.023   11 st/nd Thirumurai   Song # 73   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்தில் வுலகனைத்தும் நீரே நிலைத்தீரக்
கானப்பே ரீங்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.

11.025   11 st/nd Thirumurai   Song # 2   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.

11.029   11 st/nd Thirumurai   Song # 31   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொடங்கம்
வலத்திமைப் போதும் பிரியார்
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பங் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.

11.029   11 st/nd Thirumurai   Song # 64   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென் றடியார்க் கருள்புரி
ஏகம்பர் ஆலயமே.

11.030   11 st/nd Thirumurai   Song # 8   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது  
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத்

திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப

ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக
வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப
இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்
துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்
காவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்

முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்
பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து

மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனுங் கடுவெளி அற்றத்
தூமச் சோதிச் சுடருற நிறுத்திச்
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற

ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.

11.033   11 st/nd Thirumurai   Song # 12   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணில்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்திற் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப
னாமென்று கூறுவரே.

11.034   11 st/nd Thirumurai   Song # 16   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.

11.036   11 st/nd Thirumurai   Song # 5   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.

11.037   11 st/nd Thirumurai   Song # 8   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய

11.037   11 st/nd Thirumurai   Song # 71   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய

12.000   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளி ராக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
12.070   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
12.170   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 434   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நிலவு மாளிகைத் திருநல்லம்
நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன்
தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தந் திருப்பதி
பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா
டக்கோயில் அடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 656   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை
நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும்முன் னணைந்து வணங்கிமற் றவர்தாம்
படியின்நின் றெழாவகை கண்டு
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
வைதிகச் சேகரர் பாதம்
குலவிஅங் கணைந்தார் தென்னவ னமைச்சர்
குலச்சிறை யார்எனக் கூற.
12.360   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 54   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நிலவும் பெருமை எழுநிலைக்கோ
புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப்
புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம்
பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று
ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.
12.370   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list