சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நில்லா
நில்லா     நில்லாது     நில்லாத     நில்லாக்     நில்லாதே     நில்லாய்,    
4.096   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று
அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்;
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

5.069   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா ஆறு செயப் புரியாது, நீர்,
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி,
கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!

6.013   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு,
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும்
குடமூக்கில் அங்கு ஒழிய, குளிர் தண் பொய்கை
நல்லாடை, நல்லூரே, தவிரேன் என்று நறையூரில்- தாமும் தவிர்வார் போல,
பொல்லாத வேடத்தர், பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

6.043   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை;
கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை;
சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு,
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.

7.050   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

8.215   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
   கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
   மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
   றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
   யான்இன் றிரக்கின்றதே.

10.125   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 

12.210   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list