சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீ
நீர்     நீரின்     நீறு     நீதி     நீட     நீடும்     நீண்ட     நீந்தல்     நீடு     நீத்த     நீலமாமிடற்று     நீலம்,     நீரோடு     நீரகத்     நீல     நீரில்     நீர்பணி     நீங்காச்     நீஅது     நீரிற்     நீத்திரட்     நீரின்றிப்     நீரும்     நீநின்று     நீயுலக     நீயிருந்திங்     நீலமுண்ட     நீயேயா     நீரே     நீரென்னி     நீட்டுவ     நீரெதிர்ந்து     நீக்கரிய     நீதியின்     நீமதித்     நீணிதியாம்     நீளிடை     நீளிடைவிசை     நீவி     நீங்கும்இர     நீற்றலர்பே     நீறணிந்தார்     நீற்றால்நிறை     நீடுதிருத்     நீடுந்     நீடிய     நீண்டவரை     நீடுபுகழ்த்     நீராருஞ்     நீடுதிருக்     நீடியசீர்க்     நீராடித்     நீடுதொண்டர்கள்     நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத்
    நீணிலைமா     நீடுதிருநீலநக்கர்     நீலநக்     நீடியபே     நீடுதிரு     நீடுசீர்த்     நீர்நாடு     நீடுமெய்ப்     நீள்நிலைக்கோ     நீடுகாஞ்சி     நீடுதிருப்     நீடுமிசைத்     நீடுநிலைத்     நீற்றொளி     நீரி     நீற்றழகர்     நீங்குதுயிற்     நீரார்     நீண்டசெஞ்     நீடல்     நீலம்     நீற்றானை,     நீரானை,     நீரானே!     நீதியார்,     நீதியர்,     நீ     நீருள்     நீணம்     நீலவடிவர்     நீற்று     நீதியால்     நீலமாமணி     நீலத்து     நீடினார்     நீற்றர்,     நீதீ!     நீறு,     நீண்டு     நீற்றினர்,     நீக்கிய     நீவாவாயா     நீயாமாநீ     நீதியால்வாழ     நீற்றினை     நீதியை,     நீரைச்     நீற்றினான்,     நீள்     நீற்றின்     நீளமா     நீதியைக்     நீரும்,     நீற்றினானை,     நீர்த்திரளை     நீதிஆய்,     நீற்றினையும்,     நீப்ப(அ)ரிய     நீண்டவர்க்கு     நீற்றவன்     நீள     நீற்(ற்)று     நீதியில்     நீசன்     நீக்கி,     நீங்கரும்     நீகண்     நீறணி     நீலமே     நீரணங்     நீரோங்கி     நீவாரா    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.002   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக்
காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.

1.008   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.016   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.

1.017   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா,
கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.029   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.033   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

1.033   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

1.047   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

1.050   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

1.070   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும்
ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை-
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம்,
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர,
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.

1.076   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து
உளான், நித்தமா ஏத்தும்
ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு
உகந்து ஏறிய ஒருவன்-
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை
வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
  பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.077   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி,
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக,
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த,
ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

1.086   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை,
நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை,
காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

1.092   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

1.094   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

1.096   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!

1.099   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!

1.100   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

1.100   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,
பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.

1.105   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

1.106   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று,
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில்
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம்
ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே.

1.107   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.

1.108   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்-
தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்;
ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம்
பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.

1.109   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அணி மேனியன், நீள் மதியோடு
ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்-
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வளவயல், சிரபுரமே.

1.130   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

1.135   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

2.005   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

2.008   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

2.013   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!

2.014   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத்
தாரானை, தையல் ஓர்பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.

2.015   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.

2.028   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதியார், நினைந்து ஆய நால்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார், அடியார்தம் அன்பரே.

2.033   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.

2.035   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.

2.041   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார்,
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப,
நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.

2.042   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே
கோட்டகத்தில்
தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.

2.050   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறு மெய் பூசி, மால் அயன்
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்?
பூண்ட கேழல் மருப்பு, அரா, விரிகொன்றை, வாள் வரி ஆமை, பூண் என
ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!

2.051   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.053   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடல் கோடல் அலர, வெண்முல்லை நீர் மலர்நிரைத் தாது அளம்செய,
பாடல் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்,
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க, வெண்குழை துள்ள, நள் இருள்
ஆடும் சங்கரனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.053   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் ஆர் வரை கோலி, மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவு ஆர் பனங்காட்டூர்,
காரின் ஆர் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்! என்று கைகூப்பி, நாள்தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே!

2.053   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீணம் ஆர் முருகு உண்டு, வண்டு இனம், நீல மா மலர் கவ்வி, நேரிசை
பாணி யாழ்முரலும் புறவு ஆர்பனங்காட்டூர்,
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக, தலை
ஊண் உரியவனே! உகப்பார்க்கு அருளாயே!

2.054   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்!
ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்!
போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

2.056   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்!
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்!
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில்,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

2.062   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார்,
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.

2.064   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம்,
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை,
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த,
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே.

2.071   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர், தண்மதியர்,
நெற்றிக்கண்ணர்,
கூற்று ஏர் சிதையக் கடிந்தார், இடம்போலும் குளிர் சூழ்
வெற்பில்,
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி
பூஞ்சாரல்,
கோல் தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும்
குறும்பலாவே.

2.079   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம்
நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

2.081   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து
உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்!
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

2.083   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

2.090   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

2.104   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் கொள் நீள் சடை முடியனை, நித்திலத் தொத்தினை,
நிகர் இல்லாப்
பார் கொள் பார் இடத்தவர் தொழும் பவளத்தை,
பசும்பொன்னை, விசும்பு ஆரும்
கார் கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகம் தன்னை,
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது
திணம் ஆமே.

2.104   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் ஆர் கடல் துயின்றவன், அயனொடு, நிகழ் அடி
முடி காணார்;
பாரின் ஆர் விசும்பு உற, பரந்து எழுந்தது ஓர் பவளத்தின்
படி ஆகி,
காரின் ஆர் பொழில் சூழ் தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தின் தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை
அடையாவே.

2.105   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உலாவிய சடை இடை அரவொடு, மதி, சிரம்
நிரைமாலை,
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை
ஆர்க்க,
ஏர் உலாவிய இறைவனது உறைவு இடம் எழில் திகழ்
கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு
வினை போமே.

2.109   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை
விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து
அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர்,
பாங்காலே.

2.110   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை
நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்
நலியானே.

2.114   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும்
கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும்
கேதாரமே.

2.120   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீருள் ஆரும் மலர்மேல் உறைவான், நெடுமாலும் ஆய்,
சீருள் ஆரும் கழல் தேட, மெய்த் தீத்திரள் ஆயினான்
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன், செம்பியன், வில்லவன்,
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே.

3.001   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப் பொடி நீறு அணிவார், சடையார்,
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி கைதொழ,
கோலத்தாய்! அருளாய்! உன காரணம் கூறுதுமே.

3.006   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.014   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,
சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;
பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய
தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!

3.020   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்;
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,
ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே.

3.030   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என,
பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை,
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

3.033   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்,
போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;
கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்
சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே.

3.048   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.

3.050   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார்
மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.

3.055   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்;
ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்
ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

3.073   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் மலி புன்சடையர்; நீள் அரவு, கச்சை அது; நச்சு இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி; உடை கோவணமும், மானின் உரி-தோல்;
காரின் மலி கொன்றை விரிதார் கடவுள்; காதல் செய்து மேய நகர்தான்,
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம்; ஏத்த, வினை பற்று அழியுமே.

3.075   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம்
மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில்,
சண்பைநகரே.

3.076   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி, வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன் ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில்
வேதவனமே.

3.078   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.

3.079   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய,
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்
கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு,
கோகரணமே.

3.082   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.

3.083   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால்
கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.

3.085   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.

3.090   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

3.091   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி,
ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.

3.093   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர், நிமலர், வெள்
ஏற்றினர், எரி புரி கரத்தினர், புரத்து உளார் உயிரை வவ்வும்
கூற்றினர், கொடியிடை முனிவு உற நனி வரும் குலவு கங்கை-
ஆற்றினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

3.096   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே;
ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே!

3.096   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே!
ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே!

3.096   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத்தீரே;
சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.

3.101   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீரின் ஆர் புன்சடை பின்பு தாழ, நெடு வெண்மதி சூடி,
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார்
ஏரின் ஆர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,
காரின் ஆர் கொன்றை வெண்திங்கள் சூடும், கடவுள்;
செயும் செயலே!

3.104   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் புல்கு புன்சடை நின்று இலங்க, நெடு வெண்மதி சூடி,
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து, தலை ஆர் பலி தேர்வார்
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.

3.108   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

3.108   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

3.117   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ!

3.117   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ?

3.902   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்
நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.

4.004   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்,
ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும்,
நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும்,
ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

4.013   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீரானே! தீயானே! நெதியானே! கதியானே!
ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே!
பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்! என்று
ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.014   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்,
ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.

4.014   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றின், எரிகேசன், நேடி வரும் நாள
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண், வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும்-அக்
காலனை வீடு செய்த கழல் போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list