சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீட
நீட     நீடும்     நீடு     நீட்டுவ     நீடுதிருத்     நீடுந்     நீடிய     நீடுபுகழ்த்     நீடுதிருக்     நீடியசீர்க்     நீடுதொண்டர்கள்     நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத்
    நீடுதிருநீலநக்கர்     நீடியபே     நீடுதிரு     நீடுசீர்த்     நீடுமெய்ப்     நீடுகாஞ்சி     நீடுதிருப்     நீடுமிசைத்     நீடுநிலைத்     நீடல்     நீடினார்    
1.029   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.033   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

1.052   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

1.077   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி,
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக,
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த,
ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

1.100   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

1.107   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.

1.108   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்-
தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்;
ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம்
பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.

2.005   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

2.053   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடல் கோடல் அலர, வெண்முல்லை நீர் மலர்நிரைத் தாது அளம்செய,
பாடல் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்,
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க, வெண்குழை துள்ள, நள் இருள்
ஆடும் சங்கரனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.064   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம்,
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை,
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த,
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே.

3.048   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.

3.083   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால்
கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.

3.096   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே!
ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே!

4.014   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்,
ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.

5.051   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே,
ஆடினார் அழகு ஆகிய நால்மறை
பாடினார் அவர்-பாலைத்துறையரே.

5.088   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும்,
ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள்,
மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.

7.033   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீடு வாழ் பதி உடையரோ? அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ?
பாடுவாரையும் உடையரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ?
காடு தான் அரங்கு ஆகவே, கைகள் எட்டினோடு இலயம் பட,
ஆடுவார் எனப்படுவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.064   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீடு பொக்கையின் பிறவியைப் பழித்து, நீங்கல் ஆம் என்று மனத்தினைத் தெருட்டி,
சேடு உலாம் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தின திருவடி இணை தான்
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி, வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதிப் பயனே .

10.915   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

11.034   11 st/nd Thirumurai   Song # 86   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.

12.000   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
12.170   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
12.190   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்தெதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும்
மாட மோங்கிய மறுகின மல்லல்மூ தூர்கள்.

12.210   12 st/nd Thirumurai   Song # 152   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.
12.210   12 st/nd Thirumurai   Song # 166   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி
நிறைஅம் பலம்நினை வுறநேரே
கூடும் படிவரும் அன்பால் இன்புறு
குணமுன் பெறவரு நிலைகூடத்
தேடும் பிரமனும் மாலுந் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவொன்றா
ஆடுங் கழல்புரி அமுதத் திருநடம்
ஆரா வகைதொழு தார்கின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 170   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடிய மணியின் சோதி
நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுயர் கொடிசூழ் பொற்றேர்
அணிதிரு வீதி யுள்ளுங்
கூடிய பணிகள் செய்து
கும்பிடுந் தொழில ராகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 226   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடிளம்பூ தத்தினான் எனும்பதிகம்
முதலான பலவும் பாடி
நாடியஆர் வம்பெருக நைந்துமனங்
கரைந்துருகி நயந்து செல்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 330   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடுதிருக் கழுக்குன்றில்
நிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து
பாங்குபல பதிகளிலுஞ்
சூடுமிளம் பிறைமுடியார்
தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த
வான்மியூர் வந்தணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 386   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடிய அப்பதி நின்று
நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை
பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார்
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

12.240   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடியசீர்க் கடல்நாகை
நிதிபதியென் றுலகின்கண்
பாடுபெறு புகழ்வணிகன்
பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபில்
சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால்
வள நகரின் வரவிட்டார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு
வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத்
தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற
இருந்துமுன் நவின்றார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீடு சீர்த்திரு நீலகண்
டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார்
உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும்
புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம்
மகிழ்நீல நக்கர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 96   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண்
பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்
புடைபெயருங் கொள்கைத் தாக.
12.280   12 st/nd Thirumurai   Song # 158   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு நீள்நிலைக் கோபுரத்
துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம்
தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற
அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 196   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.
12.280   12 st/nd Thirumurai   Song # 220   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின்
மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல்
வெள்ளத்தில் குளித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 287   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு திருநின்றி யூரின்
நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி
நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 321   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு திருவாச் சிராமம்மன்னும்
நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து
கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும்
அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 331   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
மணிமார்பும் அடங்குவன.
12.280   12 st/nd Thirumurai   Song # 341   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடும் பராய்த்துறை நெற்றித்
தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக்
கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி
மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித்
தொழுது நின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 371   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற
அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே
பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர்
திருக்கரு காவூர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 420   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு கோபுரம் இறைஞ்சியுள்
புகுந்துநீள் நிலையான்
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள்ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்
தருந்தமிழ் நவின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 463   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
விருந்தமுது செய்து நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ருந்தங்க
அங்கிரவு பள்ளி மேவி
ஆடுமவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடியநண் புடைநீல நக்கடிக
ளுடன்நாதர் கழலில்தாழ்ந்து.
12.280   12 st/nd Thirumurai   Song # 546   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடியபே ரன்புருகி
உள்ளலைப்ப நேர்நின்று
பாடியெதி ராடிப்
பரவிப் பணிந்தெழுந்தே
ஆடிய சேவடிகள்
ஆர்வமுற உட்கொண்டு
மாடுயர் கோயில்
புறத்தரிது வந்தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 573   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 597   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுசீர்த் திருவாய் மூரில்
நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னால்
பரவியப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க
இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார்
திருமறைக் காடு சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 796   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 869   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுசீர்த் தென்னர் கோனும்
நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சிநோக்கி
மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்கள்
நாதரைப் பாட லுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 902   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்
நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று
பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்
மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
பாடகமெல் லடியெடுத்துப் பாடி நின்று
பரவினார்கண்ணருவி பரந்து பாய.
12.280   12 st/nd Thirumurai   Song # 986   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுகாஞ்சி வாழ்நரும்
நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார்
வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர்
குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழை
காமர்தோ ரணங்களால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1000   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதிருப் பொழில்காஞ்சி
நெறிக்காரைக் காடிறைஞ்சிச்
சூடுமதிக் கண்ணியார்
துணைமலர்ச்சே வடிபாடி
ஆடுமவர் இனிதமரும்
அனேகதங்கா வதம்பரவி
மாடுதிருத் தானங்கள்
பணிந்தேத்தி வைகுநாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1011   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1174   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுநிலைத் தோரணங்கள்
நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை
மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள்
செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின்
பெரும்பந்தர் பலபுனைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
12.290   12 st/nd Thirumurai   Song # 98   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடு கோபுர முன்பி றைஞ்சி
நிலாவு தொண்டரொ டுள்ளணைந்து
ஆடன் மேவிய வண்ண லாரடி
போற்றி யஞ்சலி கோலிநின்று
ஏடு லாமலர் தூவி எட்டினொ
டைந்து மாகும் உறுப்பினாற்
பீடு நீடு நிலத்தின் மேற்பெரு
கப்ப ணிந்து வணங்கினார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீடுதிருக் காளத்தி
நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான
ஆலவனந் தொழுதேத்தித்
தேடும்இரு வர்க்கரியார்
திருஏகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி
வளநகரின் வைகினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
12.370   12 st/nd Thirumurai   Song # 98   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நீடுதிருப் பூவணத்துக்
கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர்
மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத்
திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ
தோவென்று பணிந்தணைவார்.
12.430   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
நீடு தொல்புகழ் நிலம்பதி
னெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பலபொருள்
மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள்தனக் குடியுடன்
குவலயங் காணும்
ஆடி மண்டலம் போல்வதவ்
வணிகிளர் மூதூர்.
12.510   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list