சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீதியால்
நீதியால்     நீதியால்வாழ    
2.079   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம்
நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

4.025   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.

4.026   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

4.074   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

5.057   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீதியால் - தொழுவார்கள் தலைவனை,
வாதை ஆன விடுக்கும் மணியினை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேதநாயகன் பாதம் விரும்புமே!


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list