சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீறு
நீறு     நீறு,    
1.008   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.017   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா,
கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.033   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

1.048   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

1.070   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும்
ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை-
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

1.092   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

1.105   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

1.109   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு அணி மேனியன், நீள் மதியோடு
ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்-
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வளவயல், சிரபுரமே.

1.135   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

2.035   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.

2.114   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும்
கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும்
கேதாரமே.

3.076   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி, வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன் ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில்
வேதவனமே.

3.078   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.

3.079   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய,
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்
கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு,
கோகரணமே.

3.082   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.

4.004   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்,
ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும்,
நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும்,
ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

4.020   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு சேர் செழு மார்பினாய்; நிரம்பா மதியொடு நீள்சடை இடை
ஆறு பாய வைத்தாய்; அடியே அடைந்தொழிந்தேன்
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற, விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே!

4.024   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி,
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம்,
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த,
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.

4.027   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர்
கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்;
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே.

4.051   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே!
ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே!
ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே!
கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!

5.053   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன்,
ஆறு உடைப் புனல் பாய் கெடிலக் கரை
ஏறு உடைக் கொடியான்,-திரு வீரட்டம்
கூறில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

5.067   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி,
மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

5.098   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

6.005   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.

6.039   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்   ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே.

6.053   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு, அருளிச் செய்தார் போலும்;
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில் மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்;
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்;
ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

6.075   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு அலைத்த திரு உருவும், நெற்றிக் கண்ணும், நிலா அலைத்த பாம்பினொடு, நிறை நீர்க்கங்கை-
ஆறு அலைத்த சடைமுடியும், அம் பொன்தாளும், அடியவர்க்குக் காட்டி அருள் புரிவார் போலும்;
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும்; ஏழ் உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும்;
கூறு அலைத்த மலை மடந்தை கொழுநர் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

6.080   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு ஆகி, நீறு உமிழும் நெருப்பும் ஆகி, நினைவு ஆகி, நினைவு இனிய மலையான் மங்கை
கூறு ஆகி, கூற்று ஆகி, கோளும் ஆகி, குணம்   ஆகி, குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்து அருளி, அவர்மேல் என்றும்
சீறாத பெருமானை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

6.097   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு உடைய திருமேனி பாகம் உண்டோ? நெற்றி மேல் ஒற்றைக் கண் முற்றும் உண்டோ?
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ?
கொல் புலித் தோல் உடை உண்டோ? கொண்ட வேடம்
ஆறு உடைய சடை உண்டோ? அரவம் உண்டோ? அதன் அருகே பிறை உண்டோ? அளவு இலாத
ஏறு உடைய கொடி உண்டோ? இலயம் உண்டோ? எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?.

6.097   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள் சடைமேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்;
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ளக் கண்டேன்; கொடு கொட்டி, கை அலகு, கையில் கண்டேன்;
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆகக் கண்டேன்;
ஏறு ஏறி இந் நெறியே போதக் கண்டேன்-இவ்   வகை எம்பெருமானைக் கண்ட ஆறே!.

7.026   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக்
கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே!
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்!
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! .

7.036   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீறு நும் திருமேனி நித்திலம்; நீல் நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால்; கொணர்ந்து இடகிலோம், பலி; நடமினோ!
பாறு வெண்தலை கையில் ஏந்தி, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்;
ஆறு தாங்கிய சடையரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

7.064   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இ(ல்)லியை, கற்றை அம் சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.

7.072   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ் அரவினன்,
கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர் கையினன்,
ஆறு அணி அவிர்சடை அழல் வளர் மழலை வெள்-
ஏறு அணி அடிகள் தம் இடம் வலம்புரமே.

12.190   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்
மாறில் கங்கைதான் வாக்கும்மஞ் சனம்தர அணைந்தே
ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.
12.270   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில்
இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர்
விளம்பப் பெற்ற பெருமையினார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list