சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நெடிய
நெடியான்     நெடியர்;     நெடியோன்     நெடியானோடு     நெடியாய்!     நெடியானொடு     நெடிய     நெடியவன்,     நெடியவன்     நெடியானும்     நெடியான்,     நெடியா    
1.046   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;
பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை,
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்,
வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.

1.071   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்,
அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, முதல்வா, அருள்! என்ன,
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.087   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;
கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

2.013   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

2.021   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியாய்! குறியாய்! நிமிர்புன்சடையின்
முடியாய்! சுடுவெண்பொடி முற்று அணிவாய்!
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
அடியார்க்கு அடையா, அவலம் அவையே.

2.024   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியானொடு நான்முகன் நேடல் உற,
சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே!
நடு மா வயல் நாகேச்சுரநகரே
இடமா உறைவாய்! என, இன்புஉறுமே.

2.035   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி,
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின்
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.

2.079   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம்
நேடிக் காணாப்
படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர்
மலையாள் பாக
வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து
எண்தோள்
அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

3.024   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!

3.045   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன், பனி மா மதிச் சென்னியான்-
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள் தான்; எனை, அஞ்சல்! எனும்கொலோ?

4.050   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.

4.057   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட,
கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.

6.004   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே; நேர் ஒருவர் இல்லாதானே;
கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல் வேங்கை அதளனே; கோவணவனே;
பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே; புரிநூலானே;
அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.022   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர்   உருவம் காணாமே சென்று நின்ற
படியானை, பாம்புரமே காதலானை, பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னை,
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,-
கடி நாறு பூஞ்சோலை அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

6.055   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

7.025   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும்,
முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே!
படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே,
அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

7.032   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நெடியானொடு நான்முகனும்(ம்) அறிவு ஒண்ணாப்
படியான்! பலி கொள்ளும் இடம் குடி இல்லை;
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்;
அடிகேள்! அன்பு அது ஆய் இடம் கோயில் கொண்டாயே!

9.020   9 st/nd Thirumurai   Song # 9   கண்டராதித்தர்   திருவிசைப்பா  
நெடியா னோடு நான்மு கன்னும்
   வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
   முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
   அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
   காண்பதும் என்றுகொலோ. 

9.024   9 st/nd Thirumurai   Song # 10   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
நெடிய சமணும் மறைசாக் கியரும்
   நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
அடிக ளவரை ஆரூர் நம்பி
   யவர்கள் இசை பாடக்
கொடியும் விடையும் உடையகோலக்
   குழகன் ஆடுமே. 

12.080   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நெடியோன் அறியா நெறியா ரறியும்
படியால் அடிமைப் பணிசெய் தொழுகும்
அடியார் களில்யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list