சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நெறி
நெறி     நெறியில்     நெறியது     நெறிவழி     நெறியைப்     நெறிவார்     நெறிதரு     நெறிவிரவு     நெறிகொண்ட     நெறியே!     நெறியும்,    
1.017   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி,
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி,
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்,
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

1.018   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!

2.093   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட
நின்றார்;
முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து
இலங்க,
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்;
வெண்பொடிப்பூசி
வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

3.088   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நெறி கமழ் தரும் உரை உணர்வினர், புணர்வு உறு மடவரல்
செறி கமழ் தரு உரு உடையவர், படை பல பயில்பவர்,
பொறி கமழ் தரு பட அரவினர், விரவிய சடை மிசை
வெறி கமழ் தரு மலர் அடைபவர், இடம் எனில் விளமரே.

7.024   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும்
குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா!
மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே!
அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

7.073   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நெறியும், அறிவும், செறிவும், நீதியும், நான் மிகப் பொல்லேன்;
மிறையும் தறியும் உகப்பன்; வேண்டிற்றுச் செய்து திரிவேன்;
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

8.113   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,
முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!

8.151   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை,
சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம்,
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

10.408   10 st/nd Thirumurai   Song # 86   திருமூலர்   திருமந்திரம்  
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

10.507   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.

10.604   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

11.009   11 st/nd Thirumurai   Song # 41   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
நெறிவார் சடையாய் நிலையின்மை நீஒன்
றறியாய்கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

11.011   11 st/nd Thirumurai   Song # 13   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனமே
நீ அவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமற் பேச வன்மையில்
வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை
அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரற் சிறுபறை பூண்ட
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.

11.024   11 st/nd Thirumurai   Song # 14   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடர்.

11.026   11 st/nd Thirumurai   Song # 15   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே.

11.033   11 st/nd Thirumurai   Song # 75   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.

12.100   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list