சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பஞ்சு
பஞ்சு     பஞ்சுண்ட    
3.016   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும்
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்;
வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே.

6.053   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம்   அரைக்கு அசைத்த பரமர் போலும்;
மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை மலை உடைய மணாளர் போலும்;
செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்;
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

6.074   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பஞ்சுண்ட மெல் அடியாள் பங்கன் தன்னை; பாரொடு, நீர், சுடர், படர் காற்று, ஆயினானை;
மஞ்சுண்ட வான் ஆகி, வானம் தன்னில் மதி ஆகி, மதி சடை மேல் வைத்தான் தன்னை;
நெஞ்சுண்டு என் நினைவு ஆகி நின்றான் தன்னை; நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க, ஓங்கும்
நஞ்சு உண்டு, தேவர்களுக்கு அமுது ஈந்தானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

7.096   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பஞ்சு ஏறும் மெல் அடியாளை ஓர்பாகம் ஆய்,
நஞ்சு ஏரும் நல் மணிகண்டம் உடையானே!
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை,
அஞ்சேல்! என்பரவையுள் மண்டளி அம்மானே,

8.138   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு,
நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால்
உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை,
அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!

8.151   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு,
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்;
உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை வருக' என்று,
அஞ்சேல்' என்று, அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list