1.003
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக் கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில், மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம் அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை, கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர் புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.
|
1.080
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே, சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.
|
1.087
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன, கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை, படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.
|
1.089
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச் சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில் விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.
|
1.110
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன், நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம் உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்- இடைமருது இனிது உறை எம் இறையே.
|
1.111
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை மடவரலாளை ஒர்பாகம் வைத்து, குடதிசை மதி அது சூடு சென்னிக் கடவுள் தன் வள நகர் கடைமுடியே.
|
1.125
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம் இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.
|
2.008
2 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர்,
சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!
|
2.037
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,
கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே?
|
2.078
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படர் தரும் சடை முடியினார், பைங்கழல் அடி பரவுவார்
அடர் தரும் பிணி கெடுக என அருளுவார், அரவு
அரையினார்,
விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார்,
மிடல் தரும் படைமழுவினார், மேயது விளநகர் அதே.
|
2.083
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன், இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது, கொச்சைவயமே.
|
2.092
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.
|
2.100
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.
|
2.118
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின்
மிசை
இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும்
திலைதைப்பதி,
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
|
3.015
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை உடை மழுவினர், பாய் புலித்தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்,
விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய,
சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!
|
3.027
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.
|
3.041
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்! என்ன, அடையா, வினையே.
|
3.052
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?
|
3.061
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை உடையான்,
கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான்,
உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடிய
விடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
|
3.080
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள் வீழிநகரே.
|
3.088
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
ஒட்டு இலகு இணை மர வடியினர், உமை உறு வடிவினர்,
சிட்டு இலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வது ஒர்
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர், உறைவது விளமரே.
|
3.093
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.
|
3.112
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
3.112
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
|
4.035
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு
சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை;
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
|
4.044
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி,
கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம!
இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!
|
4.052
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!
|
4.069
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!
|
4.081
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!
|
4.083
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்,
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்-
மடைவாய்க் குருகு இனம், பாளை விரிதொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு, பேராது இருக்கும்-பெரும்பதியே.
|
4.091
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய்
அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
|
4.097
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து,
நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ?
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே.
|
4.104
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க்
கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார்
நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.
|
4.107
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா
உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்;
சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா
உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
|
5.005
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம் இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும் அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக் கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!
|
5.011
5 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன், சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன், விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர், இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.
|
5.024
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர், சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர், உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர் அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.
|
5.030
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்; நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்; சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்; இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.
|
5.049
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள் சிட்டன், ஆதி என்று(ச்) சிந்தை செய்யவே, நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!
|
5.066
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான், மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.
|
5.067
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.
|
5.082
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை, வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை, தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.
|
5.087
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!
|
5.092
5 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
படையும் பாசமும் பற்றிய கையினீர்! அடையன்மின், நமது ஈசன் அடியரை! விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் புடை புகாது, நீர், போற்றியே போமினே!
|
5.099
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்? எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
|
6.002
6 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம் சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்; விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே; ஓதுவதும் வேதமே; வீணை உண்டே; கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே.
|
6.015
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்; உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்) அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம் அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்; கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
|
6.018
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்; நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்; புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
|
6.020
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம் அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு மருந்தை, ஆவா! என்று அருள் செய்வானை, சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை, சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
|
6.020
6 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை, அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை, ஆதியானை, மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை, மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
|
6.058
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு, எவ் ஊரீர், எம்பெருமான்? என்றேன்; ஆவி விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி, வேறு ஓர் பதி புகப் போவார் போல, வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
|
6.081
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்; நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்; கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்; குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
|
6.096
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன், என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்; குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்; நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்; இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே; என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.
|
6.097
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்; பார் திகழப் பலி திரிந்து போதக் கண்டேன்; கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்; குழை காதில், பிறை சென்னி, இலங்கக் கண்டேன்; கட்டங்கக் கொடி திண்தோள் ஆடக் கண்டேன்; கனம் மழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்; சிட்டனைத் திரு ஆலவாயில் கண்டேன்-தேவனைக் கனவில் நான் கண்ட ஆறே!.
|
7.006
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி, அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்; மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
|
7.006
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம் போற்ற, மாதும் நீரும், உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர்; உண்மை அன்றே! சடைகள் தாழக் கரணம் இட்டு, தன்மை பேசி, இல் பலிக்கு விடை அது ஏறி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
|
7.015
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படப் பால்-தன்மையின், நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்; குடப் பாச்சில்(ல்) உறை கோ! குளிர் வானே! கோனே! கூற்று உதைத்தானே! மடப் பால்-தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறை ஓதீ! மங்கை பங்கா! நடப்பீர் ஆகிலும் நடப்பன், உம் அடிக்கே; நாட்டியத்தான் குடி நம்பீ! .
|
7.017
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும், வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள் இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
|
7.023
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா! உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்; அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய; கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
|
7.026
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே! விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்! கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்! உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே.
|
7.029
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே; தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே! கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
|
7.033
7 st/nd Thirumurai
Song # 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்! வடிவு இலான் திரு நாவலூரான்-வனப்பகை அப்பன், வன் தொண்டன், செடியன் ஆகிலும் தீயன் ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் அடியன்-ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
|
7.035
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படை எலாம் பகடு ஆர ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும், கடை எலாம் பினைத் தேரைவால்; கவலாது எழு(ம்), மட நெஞ்சமே! மடை எலாம் கழுநீர் மலர்ந்து, மருங்குஎலாம் கரும்பு ஆட, தேன் புடை எலாம் மணம் நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே.
|
7.049
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண் மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்; இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
|
7.057
7 st/nd Thirumurai
Song # 2
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை, காமன் ஆகம்தனைக் கட்டு அழித்தானை, சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை, தண்ணீர்மண்ணிக் கரையானை, தக்கானை, மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, -மறந்து என் நினைக்கேனே? .
|
7.091
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன், விடை ஆர் கொடியன், வேத நாவன், அடைவார் வினைகள் அறுப்பான், என்னை உடையான், உறையும்-ஒற்றியூரே.
|
8.102
8 st/nd Thirumurai
Song # 16
மாணிக்க வாசகர்
திருவாசகம்
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;
|
8.104
8 st/nd Thirumurai
Song # 43
மாணிக்க வாசகர்
திருவாசகம்
படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!
|
8.113
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருவாசகம்
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!
|
8.213
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
படமா சுணப்பள்ளி யிக்குவ டாக்கியப் பங்கயக்கண் நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே இடமா விருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே.
|
8.213
8 st/nd Thirumurai
Song # 21
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர் உடையார் கடவி வருவது போலு முருவினதே.
|
9.021
9 st/nd Thirumurai
Song # 6
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான் அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஓத்தன்றே இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல் நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
|
9.022
9 st/nd Thirumurai
Song # 7
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
படங்கொள் பாம்பணை யானொடு பிரமன் பரம்பரமா அருளென்று தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே. திருக்கைகள் முதலியன
|
10.213
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும் படைத்துடை யான்பல தேவரை முன்னே படைத்துடை யான்பல சீவரை முன்னே படைத்துடை யான்பர மாகிநின் றானே.
|
10.401
10 st/nd Thirumurai
Song # 10
திருமூலர்
திருமந்திரம்
படுவ திரண்டு பலகலை வல்லார் படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே.
|
10.402
10 st/nd Thirumurai
Song # 61
திருமூலர்
திருமந்திரம்
பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின் இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர நட்டம தாடும் நடுவே நிலயங்கொண் டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.
|
10.402
10 st/nd Thirumurai
Song # 76
திருமூலர்
திருமந்திரம்
பட்டன மாதவம் ஆற்றும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.
|
10.606
10 st/nd Thirumurai
Song # 10
திருமூலர்
திருமந்திரம்
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.
|
10.713
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின் படமாடக் கோயிற் பகவற்க தாமே.
|
10.728
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஓட்டி நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.
|
10.803
10 st/nd Thirumurai
Song # 24
திருமூலர்
திருமந்திரம்
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான்வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை வோரும் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
|
10.816
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப் படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.
|
10.816
10 st/nd Thirumurai
Song # 14
திருமூலர்
திருமந்திரம்
படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும் துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்(து) அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
|
10.924
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.
|
10.928
10 st/nd Thirumurai
Song # 31
திருமூலர்
திருமந்திரம்
படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.
|
11.002
11 st/nd Thirumurai
Song # 6
காரைக்கால் அம்மையார்
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள் குறுநரி சென்றணங் காடு காட்டில் பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே அட்டமே பாயநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
11.005
11 st/nd Thirumurai
Song # 10
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும்.
|
11.006
11 st/nd Thirumurai
Song # 13
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென் றிடறா தொழிதும் எழு நெஞ்ச மேயெரி ஆடியெம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய் உடல்தான் உளபயன் ஆவசொன் னேனிவ் வுலகினுள்ளே.
|
11.007
11 st/nd Thirumurai
Song # 16
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும் பரல்முரம் பதரும் அல்லது படுமழை வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத் தேன்இவர் கோதை செல்ல மானினம் அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம் பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும் அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன் கலையமர் கையன் கண்ணுதல் எந்தை தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த கொங்கலர் கண்ணி யாயின குரவே.
|
11.016
11 st/nd Thirumurai
Song # 10
நக்கீரதேவ நாயனார்
போற்றித் திருக்கலி வெண்பா
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம்
|
11.022
11 st/nd Thirumurai
Song # 83
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி பட்டார் எலும்பணியும் பாசுபதன் பட்டார்ந்த கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே கோவணத்து நம்பனையே கூறு.
|
11.023
11 st/nd Thirumurai
Song # 78
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி படியேரு பார்த்துப் பரன்இப் படிஏனைப் பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய் பாருடையாய் யானுன் பரம்.
|
11.029
11 st/nd Thirumurai
Song # 32
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நாண்சிறி தின்றிநகும் குலத்தில் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள் உடையான் கழற்கன்ப ரேலவர் யாவர்க்கும் உத்தமரே.
|
11.032
11 st/nd Thirumurai
Song # 17
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல் விடைபடு கேதுக விண்ணப்பங் கேளென் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளூகண்டாய் புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே.
|
11.037
11 st/nd Thirumurai
Song # 13
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்
|
12.100
12 st/nd Thirumurai
Song # 144
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
பட்டவன விலங்கெல்லாம்
படர்வனத்தில் ஒருசூழல்
இட்டருகு தீக்கடைகோல்
இருஞ்சுரிகை தனையுருவி
வெட்டிநறுங் கோல்தேனும்
மிகமுறித்துத் தேக்கிலையால்
வட்டமுறு பெருங்கல்லை மருங்குபுடை படவமைத்தார்.
|
12.270
12 st/nd Thirumurai
Song # 30
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 501
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
படியில் ஞானமுண் டருளிய
பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந்
தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய
பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார்முடிவுறக் காண்பார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 814
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
படுபொரு ளின்றி நெல்லிற்
பதடிபோல் உள்ளி லார்மெய்
அடுபவர் பொருளை அத்தி
நாத்திஎன் றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும்
அவாவினாற் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு
வேலைமேற் படர்ந்த தன்றே.
|
Search limited to first 100