6.002
6 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம் சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்; விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே; ஓதுவதும் வேதமே; வீணை உண்டே; கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே.
6.058
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு, எவ் ஊரீர், எம்பெருமான்? என்றேன்; ஆவி விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி, வேறு ஓர் பதி புகப் போவார் போல, வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org