சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பணி
பணி     பணிவு     பணிந்தவர்     பணிந்தெண்     பணிந்துநின்     பணிந்தும்     பணிபதம்     பணியாது     பணியாய்     பணித்தநல்     பணிபடு     பணியும்     பணிந்தெழுந்து     பணிவுடைய     பணிபுவனங்     பணியார்     பணிந்தெ     பணிந்து     பணிவளர்     பணிகொள்ளும்     பணிந்தாரன     பணிந்த     பணிவார்    
1.007   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.042   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய,
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்;
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.

1.120   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

4.001   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை  கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

7.088   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பணிந்த பார்த்தன், பகீரதன், பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்!
திணிந்த மாடம்தொறும் செல்வம் மல்கு திரு மிழலை,
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

8.105.09   8 st/nd Thirumurai   Song # 89   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால்,
திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி,
தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!

8.223   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பணிவார் குழையெழி லோன்தில்லைச்
   சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
   பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
   சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
   மாவோ டணுகினரே.

10.311   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே. 

10.927   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

11.004   11 st/nd Thirumurai   Song # 79   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

11.006   11 st/nd Thirumurai   Song # 10   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம்
நீயென் தனிநெஞ்சமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 97   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை.

11.022   11 st/nd Thirumurai   Song # 18   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.

11.033   11 st/nd Thirumurai   Song # 89   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.

11.034   11 st/nd Thirumurai   Song # 92   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.

12.070   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பணியும் அன்பரை நோக்கிஅப் பரம்பொரு ளானார்
தணியும் உள்ளத்த ராயினர் போன்றுநீர் தந்த
மணியும் பொன்னும்நல் லாடையும் மற்றுமென் செய்ய
அணியுங் கோவணம் நேர்தர அமையும்என் றருள.
12.100   12 st/nd Thirumurai   Song # 140   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பணிந்தெழுந்து தனிமுதலாம்  
பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே
துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை  
அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர்
தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பணிவுடைய வடிவுடையார்
பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க்
காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார்
தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே
ஏவல்செயுந் தொழில்பூண்டார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பணிபுவனங் களிலுள்ளார்
பயில்பிலங்கள் வழியணைந்தார்
மணிவரைவாழ் அரமகளிர்
மருங்குமயங் கினர்மலிந்தார்
தணிவிலொளி விஞ்சையர்கள்
சாரணர்கின் னரர்அமரர்
அணிவிசும்பில் அயர்வெய்தி
விமானங்கள் மிசையணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 314   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பணியார் வேணிச் சிவபெருமான்
பாதம் போற்றிப் பணிசெயுநாள்
மணியார் கண்டத் தெம்பெருமான்
மண்மேல் மகிழும் இடமெங்கும்
தணியாக் காதல் உடன்சென்று
வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 377   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பணியும் அப்பதிப் பசுபதீச்
சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும்
விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ்
மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர்
மீண்டும்வந் தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 428   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன்
பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள்
தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க்
களித்துரை செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 511   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர்
தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு
வேட்கையில் தாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1099   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பணிவளர் அல்குல் பாவை
நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும்
நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு
மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி
அனையதாம் அழகு காட்ட.
12.450   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list