சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பண்
பண்     பண்ணும்,     பண்டு     பண்ணின்     பண்டித     பண்டம்பெய்     பண்பழி     பண்ணிஅப்     பண்ணாரும்     பண்டை     பண்டெங்கள்     பண்டமரர்     பண்புணர     பண்டங்கன்     பண்கவரும்     பண்டிதுவே     பண்டம்தம்     பண்பாய     பண்ணாகப்     பண்டமுது     பண்டரு     பண்டிசரி     பண்ணுறும்     பண்டுபுரி     பண்பயில்வண்     பண்புடைய     பண்பின்     பண்பு     பண்டுதிரு     பண்ணார்     பண்பயில்     பண்ணியவஞ்     பண்புடை     பண்ணிறையும்     பண்டுநிகழ்     பண்ணிறைந்த     பண்ணி     பண்ணினார்,     பண்ண     பண்டு,     பண்ணில்     பண்ணிய     பண்ணினை,     பண்ணியனை,     பண்டானை,     பண்டைய     பண்டே     பண்ணு     பண்ணற்கு     பண்டா    
Search limited to first 100
1.002   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்
பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,
உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.

1.011   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.

1.011   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.

1.039   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.

1.058   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன்,
விண்ணின் ஆர் மதில் எய்த முக்
கண்ணினான், உறையும் கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே.

1.060   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்
கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!

1.083   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி,
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக்
கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.

2.006   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

2.013   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

2.025   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப்
புண்ணியன், உறையும் புகலியை
நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே!

2.028   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப்
பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர்,
கண்ணினார், கருவூருள் ஆன்நிலை
நண்ணினார், நமை ஆளும் நாதரே.

2.038   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்,
வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித்
தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.

2.042   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான்,
கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில்
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம்
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே.

2.043   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடிவாணாள் அது உடையானைப்
புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.

2.045   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த,
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து
அவியக்
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே.

2.048   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

2.049   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, எம்பெருமான்! என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.

2.051   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி,
தெண் நிலாமதியம் பொழில் சேரும் திருக்களருள
உள் நிலாவிய ஒருவனே! இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான்! அடைந்தார்க்கு அருளாயே!

2.082   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

2.092   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ண வண்ணத்தர் ஆகி, பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர், ஒர்பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு, ஆண்
இணைபிணைந்த
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சுரத்தாரே.

2.093   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள்
பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி
கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

2.099   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே!

2.107   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளிப் பல்
உலகினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை
கோயில்
வண்டு பண் செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம் இடு
மாதோட்டம்,
தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள் செய் கேதீச்சுரம்
அதுதானே.

2.111   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா
நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன்
ஆவார்;
சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை
மேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

3.002   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.

3.008   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் பொலி நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
உண் பலி கொண்டு உழல்வானும்; வானின்(ன்) ஒளி மல்கிய,
கண் பொலி நெற்றி, வெண்திங்களானும்; கடவூர்தனுள்
வெண்பொடிபூப்சியும் வீரட்டானத்து அரன் அல்லனே?

3.029   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி
அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே

3.033   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்
தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,
கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே.

3.044   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?

3.046   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும்
தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய்
அண்டனே! அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?

3.058   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி,
விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே?
தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!

3.061   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம்
எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான்,
பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான்,
விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.

3.074   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை ஆளும் இறைவன்,
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி, விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே.

3.075   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி, பகவன்,
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர் புறவு எலாம்,
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர்
சண்பைநகரே.

3.076   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே.

3.081   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில்
பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர்
துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.

3.087   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் இயல் மலைமகள் கதிர் விடு பரு மணி அணி நிறக்
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்,
நண்ணிய குளிர்புனல் புகுதும் நள்ளாறர் தம் நாமமே,
விண் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

3.088   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக்
கொண்டு, அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர்
விண்தலை அமரர்கள் துதி செய அருள்புரி விறலினர்
வெண்தலை பலி கொளும் விமலர் தம் வள நகர் விளமரே.

3.110   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்,
சண்பை ஆதியைத் தொழுமவர்களைச் சாதியா, வினையே.

3.112   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

3.114   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;
உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

3.115   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே!

4.006   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே! என்கின்றாளால்;
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே! என்கின்றாளால்;
பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே! என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

4.063   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல-
கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா!
அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.

4.070   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி,
கண்ணின் ஆர் பார்வை ஆகி, கருத்தொடு கற்பம் ஆகி,
எண்ணினார் எண்ணம் ஆகி, ஏழ் உலகு அனைத்தும் ஆகி,
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்-நனிபள்ளி அடிகளாரே.

4.093   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.

4.101   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

5.006   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா,
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே,
சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின்
அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.

5.008   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்;
அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.

5.010   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

5.018   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை-
வண்ண நல் மலரான், பல தேவரும்,
கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை
நண்ண, நம் வினை ஆயின நாசமே.

5.019   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை
மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

5.044   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர்
சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!

5.045   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் நேர் மொழியாள், பலி இட்ட இப்
பெண்ணை, மால்கொடு பெய்வளை கொள்வது,
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
அண்ணலாருக்குச் சால அழகிதே?

5.047   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே!
வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!

5.047   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை,
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்,
வண்ணம் இ(ல்)லி, வடிவு வேறு ஆயவன்,
கண்ணில் உள் மணி-கச்சி ஏகம்பனே.

5.049   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

5.052   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அது கெட,
தண்டமா, விதாதாவின் தலை கொண்ட
செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

5.053   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணினை, பவளத்திரள் மா மணி
அண்ணலை, அமரர்தொழும் ஆதியை,
சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம்
நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

5.055   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும்,
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்,
நண்ணினார் துயர் தீர்த்தலும், - நாரையூர்
அண்ணலார் செய்கை - அம்ம அழகிதே!

5.059   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர்
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு
கண்டு கைதொழ, தீரும், கவலையே.

5.094   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர்
வண்ணத்தானை, வகை உணர்வான் தனை,
எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்-
சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

6.054   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர் சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை,
நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால் மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள்
கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும்
புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

6.055   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.060   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை, பாரானை, விண் ஆய் இவ் உலகம் எல்லாம்
உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை, ஒருவரும் தன் பெருமைதனை அறிய ஒண்ணா
விண்டானை, விண்டார் தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழக்
கண்டானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,   கண் ஆரக் கண்டேன், நானே.

6.079   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனை, பாலை, படுபயனை, கடுவெளியை, கனலை, காற்றை,
கண்ட(அ)ளவில் களி கூர்வார்க்கு எளியான் தன்னை, காரணனை, நாரணனை, கமலத்தோனை,
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை, கைம்மாவின் உரிவை பேணும்
தண்டு அரனை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.

6.097   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ?
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ? ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ?
கண் ஆர் கழல் காலற் செற்றது உண்டோ?
காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ?
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ? எவ்   வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?.

7.006   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்;
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த,
விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

7.020   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

7.024   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்;
வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

7.029   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்!
கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்!
மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

7.030   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண் தாழ் இன் இசை முரலப் பல்-நாளும் பாவித்துப் பாடி ஆடிக்
கண்டார் தம் கண் குளிரும் களிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில்
எண் தோள் எம்பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.

7.035   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே!
தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே.

7.042   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்! படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று   ஒழியாய்!
தண் ஆர் அகிலும், நல சாமரையும், அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடம் ஆடும்(ம்) மணி அரங்கில்
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

7.046   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் | பற்று ஆய பெருமானே! மற்று ஆரை   உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்;| ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண்     பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் |கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!   என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன | அருந்தமிழ்கள் இவை வல்லார்    அமருலகு ஆள்பவரே .

7.078   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர,
கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய,
மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய,
கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே!

7.084   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,- பங்கயமாது அனையார்,-பத்தியும்; முத்தி   அளித்து
எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார் அவர் தம் ஏசறவும்(ம்); இறை ஆம்  எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படும் ஆறு எங்ஙனம்? என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ? கார் வயல் சூழ் கானப்பேர் உறை    காளையையே .

7.094   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்-
இண்டை கொண்டு அன்பு இடை அறாத
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.

7.097   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக்
கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து,
நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

8.108   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!

8.113   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,
எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,
விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!

8.128   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து,
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

8.138   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன;
கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!

8.148   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

8.212   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பண்டா லியலு மிலைவளர்
   பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
   லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
   துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
   கொல்லோ கருதியதே.

9.013   9 st/nd Thirumurai   Song # 9   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்
புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்
கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

10.103   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 4,

10.105   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 

10.205   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.6,

10.413   10 st/nd Thirumurai   Song # 49   திருமூலர்   திருமந்திரம்  
பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென மேயநற் சொக்கனு மாமே.

10.802   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

10.821   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.

10.927   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 55   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.

11.004   11 st/nd Thirumurai   Song # 59   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவம் மேல்.

11.006   11 st/nd Thirumurai   Song # 33   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பண்டங்கன் வந்து பலிதாவென்
றான்பக லோற்கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னமென்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்னையம்பெய் என்றான்
கொடித்தேர் அனங்கனென்றேன்
உண்டிற் கமைந்ததென் றாற்கது
சொல்ல உணர்வுற்றதே.

11.008   11 st/nd Thirumurai   Song # 187   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல்

11.008   11 st/nd Thirumurai   Song # 196   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி

11.009   11 st/nd Thirumurai   Song # 14   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண்
டாளத் தயாஉண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list