சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பதிக
பதிகந்     பதிகப்     பதிகம்     பதிகமே     பதிக     பதிகள்     பதிகம்நான்    
9.015   9 st/nd Thirumurai   Song # 4   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும்
   பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில்
   கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில்
   தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

11.033   11 st/nd Thirumurai   Song # 19   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பதிகந் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியஞ் சடையாற் கலர்தொட்
டணிபவன் யான்மகிழ்ந்து
துதியங் கழல்சண்பை நாதற்குத்
தோழன்வன் றொண்டனம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்னெனும் அந்தணனே.

11.034   11 st/nd Thirumurai   Song # 2   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.

11.036   11 st/nd Thirumurai   Song # 6   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.

11.040   11 st/nd Thirumurai   Song # 7   நம்பியாண்டார் நம்பி   திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை  
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்
அவர்செய்வா தைகள்தீரு மனகன்வார் குழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவரீச னடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே

12.260   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பதிக நாண்மலர் கொண்டுதம்
பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்
கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந்
தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை
மொழிந்தபூ சுரனார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 373   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பதிக இன்னிசை பாடிப்போய்ப்
பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
12.290   12 st/nd Thirumurai   Song # 52   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பதிகம் பாடித் திருக்கடைக்காப்
பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்பம் இம்மையே
தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு
நிறையும் நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல் மணிமார்பர்.
12.370   12 st/nd Thirumurai   Song # 142   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பதிகள் எங்குந் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list