சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரம
பரமாய     பரமாம்     பரம்சீவன்     பரம்பர     பரமாண்டத்     பரம     பரமனை     பரம்பொருளைப்     பரமர்தந்     பரமர்     பரம்பு     பரமர்திரு     பரமர்திருப்     பரம்பரனே,     பரம்பயன்    
8.103   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,

8.106   8 st/nd Thirumurai   Song # 35   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின்
அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம்
பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.

8.217   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பரம்பயன் தன்னடி யேனுக்குப்
   பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
   வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
   வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
   தோன்றுமிக் குன்றிடத்தே.

10.402   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.

10.808   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

10.808   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.

10.820   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பரம்பர மான பதி பாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

10.912   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.

10.919   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

11.006   11 st/nd Thirumurai   Song # 4   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பரமனை யே பலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யே சிரங் கொண்டுங்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.

11.023   11 st/nd Thirumurai   Song # 61   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.

11.023   11 st/nd Thirumurai   Song # 79   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரம்மூன்றும்
நீதியே செய்தாய் நினை.

12.000   12 st/nd Thirumurai   Song # 225   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பரம்பொருளைப் பணிந்துதாள்
பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரந்தருவான் தினைநகரை 
வணங்கினர்வண் டமிழ்பாடி
நரம்புடையாழ் ஒலிமுழவின் 
நாதவொலி வேதவொலி
அரம்பையர்தங் கீதவொலி
அறாத்தில்லை மருங்கணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 255   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 442   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரமர் தந்திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
எதிர்கொளச் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 979   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரம னார்தந் திருத்தொண்டர்
பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையிற் பெருக எடுத்தருளி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1191   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரம்பு தம்வயின் எங்கணும்
உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை
யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக்
கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ
தொத்தது வையம்.
12.290   12 st/nd Thirumurai   Song # 295   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரமர்திரு வரத்துறையைப்
பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி
அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு
வாவடுதண் டுறைஅணைந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
12.370   12 st/nd Thirumurai   Song # 102   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org