சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரு
பரு     பருவூசி     பருந்துங்     பருமுத்     பருப்பதம்     பருவம்     பருத்துஉருஅது     பருதி     பருவத்தில்     பருக்     பருவரை     பருத்த     பருத்     பருங்கண்    
1.014   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

2.032   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.

2.049   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி உண்ண, மந்திகள்
கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி,
திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர்ச்
செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே.

2.059   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.

2.088   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன், அயனைப்
படைத்த பரமன்,
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க
நின்ற அரன், ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம்
மோத வெருவி,
தெருவத்தில் வந்து, செழு முத்து அலைக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

2.101   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே.

3.006   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பு அரியான் கழல் உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.113   3 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது
இலை அவை எதிரே
வரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர்
கெட அருகு அரனே!
கருதல் இல் இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர்
இறை தரும் அருகே
மருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம், ஒழியே.

4.014   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்,
திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட, மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே! எனலும்,
அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.

4.106   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை,
பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே.

5.039   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும்
வரத்தினான், மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!

5.049   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே;
பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம்
திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

7.023   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்-
உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே!
எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .

8.128   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா
மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

8.136   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம்
ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி,
தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே.

8.208   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பருங்கண் கவர்கொலை வேழப்
   படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
   தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
   விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
   றோமற்றவ் வான்சுனையே.

10.107   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

10.924   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

11.029   11 st/nd Thirumurai   Song # 17   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்
டுருமொத்த திண்குரற் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்பு சார்வரிதே.

11.029   11 st/nd Thirumurai   Song # 58   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பருப்பதம் சார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காவுகந் தான்கச்சி
ஏகம்பத் தெம்மிறையே.

12.280   12 st/nd Thirumurai   Song # 338   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக்
கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ்
மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்
கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக்
குணதிசைப் போதுகின்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list