சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பா
பாடல்     பாடக     பாகமும்     பால்     பாங்கு     பாரும்     பாலும்     பார்     பாலமதி     பாதம்     பாங்கின்     பாடுவாருக்கு     பாராரே,     பாலினால்     பாடு     பாலன்     பாரோர்     பாந்தள்     பாசம்     பாடலன்     பார்த்தவன்,     பாறு     பாடவல்     பாட்டும்     பாழி     பாழே     பாய்ந்தபின்     பாய்கின்ற     பாத     பார்க்கலு     பாரில்லை     பாலிக்கும்     பாம்பு     பார்ப்பதி     பார்த்திடம்     பாலனு     பாலித்     பாகம்     பாசம     பாங்கமர்     பாசத்தைக்     பாசத்தில்     பான்மொழி     பார்க்கின்ற     பார்த்திட்டு     பாருக்குக்     பாரை     பாய்ந்தன     பாசத்தை     பாரது     பாசம்செய்     பாலொடு     பார்ப்பான்     பாசி     பாம்பும்     பாவிக்கும்     பாடிய     பாலாய     பாடவம்     பாடகம்     பாதாதி     பாறைமிசைத்     பாவை     பாயும்     பார்கால்வான்     பாலார்     பார்த்துப்     பார்மேவு     பாங்குடை     பார்மண்     பாலித்த     பாசடைய     பாட்டியல்     பாங்கியர்     பாங்கோடிச்     பாச     பாய்தலும்     பாசொளி     பான்மையில்     பாசிலைப்     பாவியேன்     பாலனாம்     பார்மிசை     பாங்குமணிப்     பாதம்பர     பாளைவிரி     பாகமருங்     பாவுங்     பாடலிபுத்     பாசத்தொடை     பாவக்கொடு     பாடுந்     பாங்குடைய     பாங்ககன்று     பாடும்     பாவின     பாடி     பாரின்மிசை     பாடியஅப்     பானல்வயல்     பாண்டிமா     பாயுடைப்     பாவுற்ற     பாடினார்     பாங்கணி     பான்மையால்     பாட     பாடிமிகப்     பாதி     பாரிடத்     பான்மைஅர்ச்     பாய்த்தியபின்     பாண     பாதாளீச்     பாடியவர்     பார்நனைய     பாரல்     பாதத்து     பா     பாக்கியம்     பாக்கியம்பல     பாய்     பாடுவார்     பாலை     பாவம்     பாரும்,     பாடினை,     பாலொடு,     பாடினார்,     பாங்கினால்     பாரினார்     பாலனார்     பாரிடம்     பாய்ந்தவன்     பாடினர்,     பாடுகின்ற     பாதத்     பாலனாய்,     பார்த்திருந்து     பார்த்தனுக்கு     பாசிப்     பாதியில்     பான்     பாசமும்     பாலனாய்க்     பார்த்தனோடு     பாறினாய்,-பாவி     பாளை     பாடகக்     பாலனுக்கு     பாடிச்     பாலையாழொடு     பாணி     பாலையாழ்     பாடிப்     பாம்பொடு(ம்)     பாண்டுவின்     பாரம்     பாணத்தால்     பாடம்     பாவமும்     பாதங்கள்     பாடுமே,     பாட்டுக்கும்     பாரார்     பாதித்     பாசத்தைப்     பாலனாய்     பாதத்தால்     பாட்டு     பார்த்தானை,     பாலின்     பாரானை;     பாரிடங்கள்     பாரோடு     பாடுவன்     பாவமே     பாடுமாப்     பாலனது     பாடிற்றிலேன்;     பாதாளம்     பாரார்,     பாலும்,     பாலக     பார்,     பாரோர்,     பாரொடு,     பாடி,     பாவ     பாங்கினொடு     பாழ்ச்     பாசத்     பாணிகர்     பாப்பணி     பாலொத்த     பாவியை     பாம்பணைத்     பாந்தள்பூ     பாடகமும்     பாவார்ந்த     பாலுக்குப்    
Search limited to first 100
1.006   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.007   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய்
நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.016   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

1.026   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர்,
ஆர நின்ற அடிகள் அவர் போலும்
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.

1.028   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.037   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

1.041   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.

1.045   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக்
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்
கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.046   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி
தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக,
கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,
வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.

1.052   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.053   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,
நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்
ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

1.060   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!
தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!

1.060   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!

1.061   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.

1.075   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை முடியொடு தோள் அவை நெரிய,
ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து, அழகு ஆய
கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.075   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை விட்டு, அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,
காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற விளித்து, வெய்து ஆய
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.076   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்று
உதைத்து அடியவர்க்கு அருளும்
காலன் ஆம், எனது உரை தனது உரை ஆக, கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும்
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

1.084   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்;
தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

1.087   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க,
கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.

1.090   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும்,
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே.

1.091   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.

1.105   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

1.107   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.

1.113   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;
போர்த்தவன், போதகத்தின் உரிவை;
ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று
சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

1.114   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்,
நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த
மாறு இலி வள நகர் மாற்பேறே.

1.129   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச்
சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு
சிலை வளைத்தோன்  பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு
மகிழ்வு   எய்தும் கழுமலமே.

2.002   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

2.012   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.

2.025   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.

2.029   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே.

2.032   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்,
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால்
மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.

2.033   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும்
காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம்
கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.

2.044   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.

2.044   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?

2.045   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்;
ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக்
காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே.

2.046   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து,
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.

2.051   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றி செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள
நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.051   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள் பேணிய
தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக்களருள
வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய சொற்கள் ஆன பொய்
ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.055   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும், பைந்தாமரையானும்,
போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை,
சேய் ஓங்கு கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

2.058   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள் ஏறு ஊர்தியீர்!
ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்!
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்,
நீடல் ஆர் கோயிலே கோயில் ஆகப் நிகழ்ந்தீரே.

2.061   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

2.071   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் வெண்மதி சூடி, பாகத்து ஓர் பெண் கலந்து, பாடி,
ஆடி,
காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
வெற்பில்,
நீலமலர்க்குவளை கண் திறக்க, வண்டு அரற்றும் நெடுந்
தண்சாரல்,
கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும்
குறும்பலாவே.

2.080   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

2.082   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர்
ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

2.082   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள
கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு
தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

2.089   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே.

2.095   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

2.097   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும்
ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர்,
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே!

2.102   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம்,
ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய்
நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல்
கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர்
வருந்தாரே.

2.107   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் வீணையர், பல பல சரிதையர், எருது உகைத்து
அரு நட்டம்
ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு
இருள் கண்டத்தர்,
ஈடம் ஆவது இருங்கடல் கரையினில் எழில் திகழ்
மாதோட்டம்,
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ, கெடும், இடர்
வினைதானே.

2.109   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினை,
பவளத்தை,
தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை,
தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே,
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு
இடம்
தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம்
கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.

3.003   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!

3.015   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!

3.016   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பா வணம் மேவு சொல்மாலையின், பல
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்;
ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும்,
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே.

3.027   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

3.027   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல்
தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

3.027   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்-
பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி-
நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்-
தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

3.028   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செகக் காலினால் சாடினான்,
சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே.

3.054   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!

3.056   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட,
பேர் இடர்த் தேவர்கணம், பெருமான், இது கா! எனலும்,
ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே
பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே!

3.057   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,
ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

3.060   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா
ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில்
தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி
செப்புதுமே.

3.061   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்;
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;
போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,
வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.

3.066   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப் பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர்
தீ-எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே.

3.066   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்கு
கான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்
தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே.

3.067   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு வாழ, அரனுக்கு
ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே.

3.069   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே.

3.073   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.

3.075   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்,
ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு
எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு இசைசெய,
சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர்
சண்பைநகரே.

3.085   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.

3.086   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்-
ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய,
வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும்
சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.

3.102   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
பைங்கொன்றைத்-
தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,
மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.

3.107   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல்,
பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.

3.112   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

3.114   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.

3.115   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.

3.116   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன பண்டாரமே;
சூடுகின்றது மத்தமே; தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே? நின் அரைத் திகழ்ந்தது அக்கு அதே;
நாடு சேர் மிழலை, ஊருமே; நாகம் நஞ்சு அழலை ஊருமே.

3.119   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

3.122   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக்
கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த தத்துவன் உறைவு இடம் வினவில்
ஆங்கு எரிமூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால்
ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

3.901   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.

4.004   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.

4.017   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை,
மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி
காலையும் மாலையும் கை தொழுவார் மனம்
ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.

4.021   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!

4.022   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி,
காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி;
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே-
நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே!

4.023   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
மூர்த்தியே என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன் என்பன்;
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!

4.025   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.

4.032   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல
தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே.

4.039   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.

4.042   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

4.056   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்,
தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்,
தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்;
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.

4.056   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.

4.061   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.

4.063   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.

4.063   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே!
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்!
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே!
வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.

4.067   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்-
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

4.068   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்;
கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்;
பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்-
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே.

4.077   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்;
ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list